• ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்களா? 011-421-6062 help@hithawathi.lk
  • English
  • සිංහල
HithawathiHithawathi
  • ஹிதவதீ
    • எங்களை பற்றி
    • எங்கள் ஆதரவாளர்கள்
  • உதவி மையம்

    எச்சரிக்கை!

    • கோவிட்-19(COVID-19) இணையவெளி (Cyber) தாக்குதல்கள்
    • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
    • சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
    • பாதுகாப்பு விழிப்பூட்டல்கள்

    மேலும் அறிக

    • அறிவுத் தளத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்
    • சமூக ஊடகம்
    • பெற்றோர் வழிகாட்டி
    • குழந்தைகளின் வழிகாட்டி
    • இப்போது என்ன செய்ய?

    கவனிப்பு

    • நிகழ்நேர விடயங்கள்
    • காணொளிகள் (Videos)
    • செய்தித்தாள்

  • இப்போது என்ன செய்ய?
  • செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
  • மாதாந்திரம் இதழ்
  • தொடர்பு
    • FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)

இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்

  • முதல் பக்கம்
  • உதவி மையம்
  • சைபர் ( மின்வெளி ) பாதுகாப்பு
  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்

அடையாளத் திருட்டை தடுத்தல்

திருடர்கள், திருடர்கள் போன்றவர்கள் மற்றும்  விண்வெளி குற்றவாளிகள்  தனிப்பட்ட தகவல்களை  மற்றும் பணம் திருட்டுவதற்கு  பலவிதமான அணுகுமுறைகள் கையாளுகின்றனர்.
உங்கள் வீட்டு சாவியை திருடரிடம் ஒப்படைக்காது  போலவே , மோசடி மற்றும் நேரடித் ( ஆன்லைன்)  அடையாள   திருட்டு ஆகியவற்றில் இருந்து நீங்களே உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்  என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.  ஆன்லைன் ( online ) மோசடி மற்றும் அடையாள திருட்டுகளில்  இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமேயானால்  ,    அதற்காக   குற்றவாளிகள்   பயன்படுத்தப்படும் பொது தந்திரங்களை பற்றி    நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இங்கே சில எளிய குறிப்புகள்  ( tips)  குறிப்பிட்டுள்ளது .

1. சந்தேகத்திற்கு இடமான மின்னஞ்சல்களுக்கு , உடனடி ( instant )    செய்திகளுக்கு அல்லது  உங்களின் தனிப்பட்ட விபரங்கள்  அல்லது நிதி விபரங்கள் பற்றி கேட்கும் வலைப்பக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.

உங்கள்  தனிப்பட்ட  விவரங்கள் அல்லது தகவல்கள் கேட்கும்  அறிமுகமில்லாத எந்தவொரு செய்திக்கோ  அல்லது வலைப்பக்கத்திற்கோ  பின் வரும் விவரங்களுக்காக பதில் வழங்குவதில்   எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் .

  • பயனர் பெயர்கள்
  • கடவுச்சொற்கள்
  • சமூக பாதுகாப்பு எண்கள்
  • வங்கி கணக்கு எண்கள்
  • PIN கள் (தனிப்பட்ட அடையாள எண்கள்)
  • முழு கடன் அட்டை எண்கள்
  • உங்கள் தாயின் முதல் பெயர்உங்க
  • ள் பிறந்த நாள்

மேற்குறிப்பிட்ட செய்திகளின்  ஊடாக  இணைக்கப்படக் கூடிய ஏதேனும் வடிவங்கள் அல்லது உள்நுழைவு திரைகளை நிரப்ப வேண்டாம்.  யாராவது  சந்தேகத்திற்குரிய ஒருவரினால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் உள்ளடங்கும் வகையிலான படிவத்தை நிரப்புமாறு   கேட்கப்பட்டால் அதை நிரப்புவது ஆரம்பிப்பதில் விருப்பம் காட்ட வேண்டாம். நீங்கள் “சமர்ப்பிக்க” ( “submit”) பொத்தானை தாக்காவிட்டாலும் கூட அடையாள திருடர்களின் படிவத்தில் உங்கள் விபரங்களை  உள்ளடக்குவதை ஆரம்பித்து இருந்தால் அந்நேரம் முதல் நீங்கள் உங்கள் தரவுகள்   அவர்களுக்கு  அனுப்புவதாக இருக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த  ஒருவரிடம்  இருந்து கிடைத்ததாக காணக்கூடியதாக உள்ள , இருந்தாலும் அவர்களுடைய  என்று   ஏற்றுக்கொள்ள முடியாத   செய்தி  ஒன்று காண கிடைத்தால் அது யாராவது ஒரு   இனைய ( cyber)   குற்றவாளி ஒருவர் உங்களுக்கு தெரிந்தவர்களின் கணக்கை பயன்படுத்தி உங்களிடம் இருந்து பணம் அல்லது தகவல்கள் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வதாக இருக்கும் . எனவே   நீங்கள் பதில் அளிப்பது எவ்வாறு என்பதை பற்றி அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

  பொதுவான தந்திரோபாயங்கள்

வேறொரு நாட்டில் தவித்துக்கொண்டு இருக்கிறோம்  அல்லது அவர்களின்  தொலைபேசி திருடப்பட்டது ஆகையினால் அவர்களினால்  பேச முடியாது   விரைவில்  பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்வார்கள்.

படம், கட்டுரை அல்லது  வீடியோவைப்  பார்ப்பதற்கு  தரப்பட்ட இணைப்பை க்ளிக் செய்யுமாறு செய்தி அனுப்புவார்கள் .

இவ்வாறான செய்திகள் மூலம்  உண்மையிலே உங்கள்  விவரங்களை திருட்டுவதற்கான தளத்திற்கு உங்களை இட்டுச்செல்லும் . ஆகவே க்ளிக் செய்வதற்கு முன் சிந்தித்து பாருங்கள் .

2. நீங்கள் நம்பாத மின்னஞ்சல் அல்லது அரட்டையிலுள்ள இணைப்பைப் பின்தொடர்வதன் மூலம் ஒரு தளத்திற்குள் பிரவேசித்து இருந்தால்  அங்கே உங்கள் கடவுச்சொல்லை ஒருபோதும் வழங்க வேண்டாம்.

நீங்கள் நம்புகின்ற உங்கள் வங்கியின் வலைத்தளம் போன்ற வலைத்தளங்களுக்கு கூட ஒரு புக்மார்க்கை பாவித்து நேரடியாக செல்வது  அல்லது வலைத்தளத்தின்  முகவரியை நேரடியாக தட்டச்சு செய்து (typing)   செல்வது சிறந்ததாகும்.

  3 . உங்கள் கடவுச்சொல்லை மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டாம் மற்றும்  அதை ஏனையோருடன்  பகிர்ந்துக்கொள்ளவும்  வேண்டாம்.

உங்கள் கடவுச்சொற்கள் உங்களின் கணக்குகளின் மற்றும்  ஆன்லைன்  சேவைகளின் சாவியாகும். அது உங்கள் இணைக்கப்படாத வாழ்க்கை போன்றதாகும்.  எனவே உஙகள் சாவிகளை யாரிடம் கொடுப்பது என்பதை பற்றி கவனமாக இருக்க வேண்டும். சட்டப்பூர்வ தளங்கள் மற்றும் சேவைகள் ஆகியவை உங்கள் கடவுச்சொற்களை மின்னஞ்சல் ஊடாக தங்களிடம் அனுப்புமாறு கேட்கமாட்டார்கள். ஆகவே   உங்கள்   கடவுச்சொற்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளும்  ஆன்லைன் தளங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் .

ஏனெனில் உங்கள் கடவுச்சொற்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தீர்மானிக்க முன் கவனமாக சிந்திக்க வேண்டும்  –  நண்பர்களோடு  மற்றும் குடும்பத்தவர்களோடு  பகிர்ந்து கொள்ளும் போது கூட கவனமாக இருக்க வேண்டும்.  நீங்கள் உங்கள் கடவுச்சொற்களை பகிர்ந்து கொள்ளும் போது , அதனுடாக மிகப்பெரிய ஆபத்தை விளைவித்துக்  கொள்கிறீர்கள்.    அவர்களுக்கு கொடுக்க விரும்பாத  உங்கள் தகவல்களை அணுகுவது ,   அல்லது நீங்கள் அனுமதிக்காத விதத்தில் கணக்கைப் பயன்படுத்துவது  போன்ற செயல்களினுடாக    ஒருவர் உங்கள் கணக்கை தவறாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கடவுச்சொல் ஒன்றை  இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டால்,  அவர் உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் படிக்கலாம், உங்கள் மின்னஞ்சல் பயன்படுத்தி  வங்கி  அல்லது சமூக தளங்கள் போன்ற உங்கள் ஆன்லைன் கணக்கை அணுகுவதற்கு   முயற்சிக்கலாம் அல்லது  உங்களை போல் காட்டிக்கொண்டு  உங்கள் கணக்கைப் பாவிக்கலாம் .

இறுதியாக,  நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை யாருடனாவது  பகிர்ந்து கொள்ளும்போது, அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை இட்டு   அவர்களின் மேல் முழு நம்மிக்கை வைக்க  வேண்டிய நிலைக்கு  உட்படுத்தப் படுகிறீர்கள் ; அவர்கள் அதை   குறிக்கோளுடன்   அல்லது தற்செயலாக   மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இடமிருக்கின்றது.

அல்லது அவர்களின் அறிவு இல்லாமல் அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் தகவல் / கணக்குகள் / பணம் ஆபத்தில் இருக்கக்கூடும் !

4. ஆன்லைன் ஊடாக உள்நுழையுமாறு    கேட்கப்படும் சந்தர்ப்பங்களின் போது  அதிக      கவனத்தை செலுத்த வேண்டும் .

 வலைத்தளத்துடன் உங்களை   இணைக்கப்பட்ட     சிக்னல்களை  சரிபார்க்கவும் . முதலாவதாக, உங்கள் உலாவியில் உள்ள முகவரிப் பட்டியில்   (   bar  )  தெரிகின்ற  URL  உண்மையான  ஒன்றா  என்பதை ஆராயுங்கள்.

வலைத்தள முகவரி https: // உடன் தொடங்குகிறதா என அறியவும்  .  அதன் மூலம் இணையதளத்தில் உங்கள் இணைப்பு முறைமையாக்கப்பட்டதையும், உளவு பார்க்கப்படுவதை அல்லது அனுமதியின்றி செய்யப்படுவதைத் தடுக்கும் என்பதையும் குறிக்கிறது .

உங்கள் இணைப்பு மறைகுறியாக்கப்பட்டிருப்பதையும் , மேலும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதையும் மென்மேலும் தெளிவாகக் குறிப்பதற்காக  சில உலாவிகள் https: // ஐ தவிர, முகவரிப் பட்டியில் ஒரு பூட்டு  ஒன்றையும்   (பேட்லாக் ஐகான் )  சேர்க்கப்பட்டுள்ளது.

5. சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் மற்றும் மோசடி குறித்து புகார் செய்யுஙகள்.

6. பரிசுகள் கொண்டுள்ள (தருவதாக கூறும்) அந்நியர்களிடம் கவனமாக இருக்கவும்

ஒரு வலைத்தளத்தின் மில்லியனாவது பார்வையாளராகி விட்டீர்கள் என்று உங்களை வாழ்த்தும் செய்தி, ஆய்வொன்றை செய்து முடிப்பதற்கு பரிசாக ஒரு லேப்டாப் கம்பியூட்டர் தருவதாகவோ அல்லது  விரைவான எளிதான முறையில் பணம் சம்பாதிக்க முடியும் என்று அல்லது தொழில் கிடைக்கும்  (“உங்கள் வீட்டில் இருந்து கொண்டே  ஒரு நாளைக்கு   இரண்டு மணி நேரம் மட்டுமே   வேலை செய்வதன் மூலம் பணக்காரனாகிவிடலாம்) என்று கூறப்படும்  செய்திகள் காணப்பட்டால் அநேகமாக அவைகள் நல்ல  , நம்பகத்தக்க செய்தியாக இருக்க மாட்டாது.    நீங்கள் வெற்றியாளராகி இருப்பதால் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் உள்ளடங்கும் விதத்திலான  படிவமொன்றை  நிரப்பி அனுப்புமாறு    கேட்கப்பட்டால் ஒருபோதும் அவை நிரப்புவதற்கு  விரும்ப வேண்டாம் . எதாவது விதத்தில் நீங்கள் உங்கள் விவரங்களை அப் படிவங்களில் உள்ளடக்கக் ஆரம்பித்தாள்  சமர்பிப்பதற்கான “submit”  என்ற பொத்தானை தட்டாமலே   ( தட்ட முன்பே ) உங்கள் தகவல்கள் மோசடிக்காரர்களிடம் சென்றடைந்து இருக்கலாம் .

மூலம் ;  www.google.com/goodtoknow

  • இணைய திருட்டுகளை கண்டறிதல் , தடுத்தல்
  • இணையவெளியில் உங்கள் பாதுகாப்பு
  • சிறுவர்கள் மற்றும் பதின்மவயதினருக்கான இணைய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்
  • இணையவெளி பாதுகாப்பு குறிப்புகள் (பகுதி 1)

ஹிதவதீ

எல்.கே டொமைன் பதிவு முழுமையாக நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டம்

விரைவு இணைப்புகள்

Sri Lanka CERT|CC
TechCERT
Internet Crime Complaint Centre
     
    Instagram

எங்கள் ஆதரவாளர்கள்


வேலை நேரம்

வார நாட்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
சனிக்கிழமைகளில் காலை 08.30 – மணி முதல் மதியம் 12.30 மணி வரை
பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்.

(சேவையின் தரத்தை மேம்படுத்த அழைப்பு பதிவு செய்யப்படும்)

பதிப்புரிமை © 2021 ஹிதாவதி. முழு பதிப்புரிமையுடையது.

கூட்டாளராக வேண்டுமா?
எங்களை அழைக்கவும் 011-421-6062