கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 10, 2024

2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “இணையவெளியிலுள்ள உங்கள் தோழி” என அறிமுகப்படுத்தப்பட்ட ஹிதவதி திட்டம் தனது பத்தாண்டு நிறைவை 02.04.2024 அன்று LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ், பிரதம அதிதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதம தாதியர் பயிற்சி உத்தியோகத்தர் திருமதி புஷ்பா ரம்யானி சொய்சா உட்பட பல்வேறு வழிகளில் செயற்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் பல பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பத்து வருட பயணத்தை குறிக்கும் சிறு புத்தகம் வெளியிடப்பட்டது மற்றும் வீடியோவும் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஹிதவதி திட்டத்தை ஆதரித்த கட்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.