கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 16, 2021

திரித்துவ கல்லூரியின் ஆசிரியர்களின் பங்கேற்புடன் தெல்தெனிய நனசல நிலையத்தினால் ஜூம்லா இணைய வடிவமைப்பு பயிற்சி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமர்வு திரித்துவ கல்லூரியின் ஆரம்ப பாடசாலை கணினி ஆய்வுகூடத்தில் நடைபெற்றது. 23 பங்கேற்பாளர்கள் பயிற்சியில் பங்குபற்றினர், அவர்களுக்கு ஹிதவதி உதவி சேவை மற்றும் இணையத்தளம் பற்றி விளக்கப்பட்டது. இலங்கையின் இணைய பயனர்களுக்கு சைபர் தொடர்பான துன்புறுத்தல்கள் குறித்த அறிவை மேம்படுத்த ஹிதவதி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் அவர்கள் ஆர்வம் காட்டினர்.