கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 13, 2020

நீங்கள் இணையத்தில் உலாவும்போது, கீழே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற ஒரு சிறிய வினாடி வினாவைக் கண்டால் என்ன செய்வீர்கள்

“நீங்கள் எத்தனை குழந்தைகளைப் பெற முடியும்? – தெரிந்து கொள்ள”
“உங்களிடம் அரச இரத்தம் இருக்கிறதா? – இப்போது சோதிக்கவும் ”
“நீங்கள் எவ்வளவு புத்திசாலி? – பாருங்கள் ”

வேறு வகையான விடயங்களை நம்புவர்களாக இருக்கும் மக்களின் கவனத்தைக் கூட இந்த விதத்திலான வினாக்கள் இயற்கையாகவே ஈர்க்கின்றன. அவர்களில் சிலர் இவற்றுக்கான பதிலைக் காண அவற்றைக் கிளிக் செய்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் இதைப் பார்த்தீர்களா? என்ற கேள்வியைக் குறிப்பிட முடியும்

படத்தின் மூலம் : https://www.google.com

இந்த ஆர்வம் உங்கள் பேஸ்புக் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் தொடர வேண்டிய ஒரு பக்கத்திற்கு உங்களை வழிநடத்துகிறது. ‘தாம் எத்தனை குழந்தைகளைப் பெறப் போகிறோம்’ என்பதை அறிய ஆர்வமாக இருக்கும் ஒருவர் நிச்சயமாக அந்தக் கேள்வி பேஸ்புக் பக்கம் அல்லது ஏதோவொன்றோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று நினைத்து, பதிலைக் காண பயனரை அடையாளப்படுத்தும் (பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை) நுழைகிறார். ஒருவேளை இதன்போது நீங்கள் உங்களை மகிழ்வூட்டுகிற பதிலைப் கூட பெறலாம்.

இருப்பினும், அடுத்த முறை உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது, கணக்கு முற்றிலும் இணங்கிச் செல்லக்கூடியதாக இருப்பதைக் காண்பீர்கள். பின்னர் தான் உங்களுக்கு விஷயங்கள் தெளிவாகும் : வினாடி வினாவுக்கும் பேஸ்புக்கிற்கு எந்த சம்பந்தமும் இல்லை, என்பதுடன் இது ஒரு போலி பயன்பாடாகும், இது உங்கள் பேஸ்புக் பயனர் அடையாளப்படுத்தும் தகவல்களை ஒரு மோசடி பக்கத்திற்கு வழிநடத்தும். அதன்பிறகு, குறும்பர்கள் ( hackers) உங்கள் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்தலாம், உங்களை பிளாக்மெயில் செய்யலாம், பணையத் தீநிரல் (ransomware) இணைப்புகளை அனுப்பலாம் மற்றும் உங்களுக்கு இன்னும் பல தலையிடிகளை கொடுக்கலாம்.

அண்மையில் உக்ரைனை தளமாகக் கொண்ட இரண்டு மென்பொருள் உருவாக்குனர்கள் மீது பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைப்பின்னல் தளங்களைத் சுரண்ட வடிவமைக்கப்பட்ட தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளை இயக்குவதன் மூலமாக தமது சமூக வழிகாட்டுதல்களையும் ஏனைய அமெரிக்க சட்டங்களையும் மீறியதற்காக பேஸ்புக் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, எதுவுமே உண்மையாக இருப்பது மிகவும் நல்லது என்று தோன்றும் இடத்தில் இருமுறை யோசிப்பது மிகவும் முக்கியம். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியது கொஞ்சம் பொறுமையாக இருந்து கிளிக் செய்வதற்கு முன் அந்த இணைப்புகளின் (URL ) உண்மையான தன்மையை சரிபார்க்கவும். இது போலியானதா அல்லது உண்மையான வலைத்தளமா என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கலாம் என்பது தொடர்பில் மேலும் அறிக. இதனைவிட உங்களை பற்றிய பயனர் அடையாளப்படுத்தலை (user credentials) வழங்குவதற்கு முன் கவனமாக இருங்கள்.

மூலம் :
https://edition.cnn.com/2019/03/09/tech/facebook-ukraine-hackers/index.html?fbclid=IwAR0pGWbjITFL2_4LqRznogx_53wWtGzb9t87XBPegNojcpc4eqoYjQmTYZ0