வரலாறு:

இந்த செயற்திட்டம்   “பிரியமானவளே  உன் நம்பிக்கைக்குரியவன்” (“Hithawathi-Your Confidante”) என்ற தலைப்பில் 2014 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. Hithawathi  செயல்திட்டம் தொழில்நுட்பம் / இணையத்தளம் அடிப்படையான நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் சேதம் அடைந்தவர்களுக்கு  உதவுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஓர் உதவி மையமாகும் .

இந்த செயல்திட்டம் இண்டர்நேஷனல் சொசைட்டி – ஸ்ரீலங்கா அத்தியாயம் (ISOC-LK) மற்றும் எல்.கே. டொமைன் ரெஜிஸ்ட்ரி (LKDR)  ஆகியவற்றின் சமூக உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டது ISOC-LK  யின்  முன்னாள் தலைவர் ஒருவரான   Ms . சாகரிகா  விக்ரமசேகர அவர்களினால்  இதன் மிக முக்கியமான பாத்திரமொன்றை வழிநடத்தப்பட்டது. அவரது வழிகாட்டுதலின் கீழ் பல பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. இது ஒரு வலைப்பதிவு (blog) என்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டு  www.hithawati.blogspot.com) பின்னர் அது தொடர்பு எண் கொண்ட ஒரு வலைத்தளமாக (website) விரிவுபடுத்தப்பட்டது.

இன்று:

தற்போது ஹிதவதீ (Hithawathi) என்றழைக்கும் இந்த செயல்திட்டம்  அதிகமான அம்சங்கள் மற்றும் வசதிகள் அடங்கிய ஒன்றாக  வலுப்படுத்தப்பட்டுள்ளது . state-of-the art ( நாட்டின் – கலை )  வலைத்தளம்,

இடைவிடாது  புதுப்பிக்கப்படும் உள்ளடக்கம் மற்றும்     வழிகாட்டுதல்கள், நேரடித் தொடர்வுடைய   அரட்டை அம்சம், ஒரு  நேரடித் தொடர்புக்கான   (hotline) நிரந்தர தொடர்பு எண், தொடர்பு கொள்ள கூடிய  மின்னஞ்சல் முகவரி, மற்றும் புகார்களை முகாமைத்துவப் படுத்தும்  அமைப்பு ஆகியவைகள்  சமூகத்தை விழிப்புணவூட்டுவதற்காக ஹிதவதீ (Hithawathi)   யூ டியூப் சேனல், ஃபேஸ்புக் பக்கம் மற்றும் ட்விட்டர் கணக்கின்  ஊடாக வழங்கப்படும் சில அம்சங்களும் வசதிகளும் ஆகும்.

சேவைகள் வழங்கும்  போது குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களின் பிரச்சனைகள் பற்றி  ஒரு ஆண் அதிகாரியிடம்  பேசுவதை விட வசதியாகவும் வெளிப்படையாகவும் பெண் ஒருவருடன் பேச முடியும் என்ற காரணத்தை  முன்னிட்டு     குறிப்பிட்ட ஹாட்லைன்  (hotline ) பெண் அதிகாரிகளால் கையாளப்படுகின்றது.

தேசிய மட்டத்திலான நிறுவனங்களாகிய ஸ்ரீலங்கா கம்ப்யூட்டர் அவசரநிலை மறுமொழி  குழு (SLCERT), TechCERT, ஸ்ரீலங்கா பொலிஸ் மற்றும் மாணவ ஆலோசகர்கள், பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்த சட்ட ஆலோசகர்கள், ISOC-LK மற்றும் LKDR  போன்ற நிறுவனங்களின்  மற்றும்  உறுப்பினர்களின்  உதவிகளை பெரும்  சிறப்புரிமை கொண்ட ஓர்  செயல்திட்டமாக  இந்த  Hithawathi  திட்டத்தை குறிப்பிடலாம்.  அத்தோடு சில தனிப்பட்ட  புத்திமான்கல் தொண்டு முறையில் ( இலவசமாக)  தங்களின் சேவைகளை வழங்கிக்கொண்டு  இருக்கின்றார்கள்.

குறிப்பணி    ( Mission)

இலங்கையின்  சைபர் விண்வெளி தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாக  உதவிகள்  , ஆதரவுகள்  மற்றும் பாதுகாப்பான குறிப்புகள் வழங்குகின்ற  நம்பிக்கையுடன் தொடர்வுக்கொள்ள கூடிய இடம் என்கிற நிலையை அடைதல்.

நோக்கம் (Vision)

பொதுமக்களை சைபர் விண்வெளியினுள்  கவனமாக மற்றும் பாதுகாப்பாக பேணிக்காத்தல்.