கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 19, 2023

 இணையவெளி கொடுமைப்படுத்தல் (சைபர் புல்லியிங் ) என்றால் என்ன?

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொடுமைப்படுத்துதல் இணையவெளி கொடுமைபடுத்தல் (சைபர்புல்லியிங்) என்று அழைக்கப்படுகிறது. இது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் செய்தியிடல் பயன்பாடுகள், சமூக ஊடகங்கள், மன்றங்கள் மற்றும் கேமிங் தளங்கள் ஊடாகவும் நடைபெறலாம். சைபர்புல்லிங் என்பது பிறரைப் பற்றிய எதிர்மறையான, தீங்கு விளைவிக்கும், பொருத்தமற்ற, தவறான அல்லது கடுமையான உள்ளடக்கத்தை கொண்ட செய்திகளை அனுப்புதல், இடுகையிடுதல் அல்லது பகிர்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள குழந்தைகளையும் பாதிக்கலாம்.

இணையவெளி கொடுமைப்படுத்தலுக்கான  (சைபர் புல்லியிங்) சில எடுத்துக்காட்டுகள்:

★ வேறொருவரின் புகைப்படங்கள் / வீடியோக்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
★ அச்சுறுத்தும் வகையான மின்னஞ்சல்கள், எதிர்மறை செய்திகள், ஆபாச அல்லது பிற புண்படுத்தும் உள்ளடக்கத்தை பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக அனுப்புதல்.
★ ஆள்மாறாட்டம் செய்தல் (பாசாங்கு செய்தல்) ஆன்லைனில் அவள்/அவனைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்குதல்
★ பாதிக்கப்பட்டவர் மீது மற்றவர்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புதல் அல்லது நேரலை அரட்டைகளின் போது துன்புறுத்துதல்.

இணையவெளி கொடுமைப்படுத்தலின் (சைபர் புல்லியிங்) விளைவுகள் என்ன?

இணையவெளி கொடுமைபடுத்தலின் (சைபர்புல்லியிங்) விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கும் மேலும் அது பல வழிகளில் ஒருவரை பாதிக்கலாம்.

★ மனரீதியாக – வருத்தம், சங்கடம், பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, குற்ற உணர்வு, முட்டாளாக உணர்த்தப்படலாம் அல்லது கோபத்தை ஏற்படுத்தலாம்
★ உணர்வுபூர்வமாக – எப்போதும் ஏற்படக்கூடிய சங்கடத்தைப் பற்றி சிந்திப்பது அல்லது அவர்கள் விரும்பும் / ஆர்வமுள்ள விடயங்களில் ஆர்வத்தை இழப்பது
★ உடல் ரீதியாக – சோர்வு (தூக்கமின்மை காரணமாக), தலைவலி, வயிற்றுவலி அல்லது பிற அசௌகரியங்கள்

இது தீவிரமாகும் பட்சத்தில், அது குழந்தைகளின்  தற்கொலைக்கு கூட வழிவகுக்க  கூடும்.

ஒன்லைனில் நீங்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் யாரிடம் பேச வேண்டும்?

★ பெற்றோர்
★ நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான பெரியவர்
★ பாடசாலையில் – உங்களுக்கு பிடித்த ஆசிரியர் அல்லது ஆலோசகர்
★ நம்பகமான உதவி தொலைபேசி இலக்கமூடாக ஒரு தொழில்முறை ஆலோசகர்

UNICEF கருத்துப்படி, இணையவெளி கொடுமைபடுத்தல் (சைபர்புல்லியிங்) சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அவற்றைக் கண்டறிந்து புகாரளிப்பது அவசியமாகும். பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் தங்கள் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  தனது செயலி மூலமாகவே இதுபோன்ற இடுகைகளைப் புகாரளிக்க உங்களை ஊக்குவிக்கின்றது. நீங்கள் தீவிரமான ஆபத்து நிலையில் இருந்தால், உள்ளூர் பொலிஸ் அமைப்புகளை அல்லது அவசர சேவைகளை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

இணையவெளி தொடர்பான மேலதிக தகவல்களைப் பார்க்கவும்.

குறிப்பு:

https://www.unicef.org/end-violence/how-to-stop-cyberbullying

https://www.stopbullying.gov/cyberbullying/what-is-it

https://www.kaspersky.com/resource-center/preemptive-safety/cyberbullying-effects