கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

இல்லத்தரசியான சுரேகா ஒரு பெண் குழந்தையின் தாய் ஆவார். இவரது கணவர் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அவர்கள் தமது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

சுரேகா தனது பேஸ்புக் ஃபீட் மூலம் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தபோது, பொருளாதார பிரச்சனையில் இருக்கும் பெண்களுக்கு உதவும் ஒரு அமைப்பு தொடர்பான விளம்பரத்தைப் பார்த்தாள். மேலும், தேவையுடன் இருக்கும் பெண்களுக்கு வட்டியின்றி பணம் அல்லது கடன் வழங்குவதாகவும், குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே உதவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த சுரேகா  மிகவும்  மகிழ்ச்சி அடைந்தார். உடனே அந்த விளம்பரத்தை வெளியிட்ட மல்காந்தி பெர்னாண்டோ என்ற நபரைத் தொடர்பு கொண்டார்.

சுரேகா: ஹாய், பெண்களுக்கு உதவி வழங்குவது பற்றி பேஸ்புகில் வந்த விளம்பரம் தொடர்பாக பேசலாமா?

மல்காந்தி: ஹாய், ஆமாம், நிதி நெருக்கடி இருக்கும் பெண்களுக்கு நாங்கள் உதவுகிறோம். ஆனால் இதற்காக நீங்கள் சில  பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. பணத்தைப் பெற நீங்கள் அவற்றைச் செய்து முடிக்க வேண்டும்

சுரேகா:அப் பணிகளைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?

மல்காந்தி: ஆமாம், நீங்கள் எங்களுக்கு சில புகைப்படங்களை அனுப்ப வேண்டும்

சுரேகா: எவ்வாறான  புகைப்படங்கள்?

மல்காந்தி: முதலில் நீங்கள் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை அனுப்ப வேண்டும்.

தனது மகள் விழித்திருப்பதால் படங்களை அனுப்ப முடியவில்லை என்று மல்காந்தியிடம் சுரேகா கூறினார். அப்போது மல்காந்தி அந்தப் படங்களை இரவில் அனுப்பும் படி சுரேகாவிடம்  கூறினாள்.

மகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது, சுரேகா அப்படத்தை எடுத்து மல்காந்திக்கு அனுப்பினாள்.

மல்காந்தி:  நல்லதொரு புகைப்படம், இப்போது இன்னும்  ஒரு பணி இருக்கிறது.

சுரேகா: வாயில் துணி ஒன்றை போட்ட படி படம் எடுக்க வேண்டும்.

சுரேகாவும் பணத்தேவை இருந்ததால், அதையும் செய்தாள். அதன்பிறகு மல்காந்தி மற்ற பணிகளைப் பற்றிக் கூறினாள்.

மல்காந்தி: இப்போது, நீங்கள்  ஒரு போர்வையை  அணிந்து கொண்ட படி எங்களுக்கு  ஒரு புகைப்படத்தை  அனுப்ப வேண்டும்.

சுரேகா குழப்பமடைந்து, மல்காந்தியிடம், தன் மகள் எழுந்திருக்கக்கூடும் என்பதால் தன்னால் அதைச் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால்,  செய்ய வேண்டிய பணிகள் முடிவடையாததால், பணம் கிடைக்காது என மல்காந்தி சுரேகாவை வற்புறுத்தினாள்.

தேவையான படத்தை அனுப்ப சுரேகா மனதைத் தேற்றிக்கொண்டாள். மல்காந்தி அதோடு நிற்கவில்லை.

மல்காந்தி: வாய்க்குள்ளே  துணியைப் போட்டுக் கொண்டு மண்டியிட்டபடியும்  அத்தோடு முனகிய படியும் ஒரு படத்தை அனுப்புங்கள்.

இந்த நிலையில், சுரேகா மிகவும் குழப்பமடைந்து, தன்னை தொடர்பு கொண்ட மற்ற பெண்கள் இப் பணிகளை அனைத்தையும் செய்து முடித்தார்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு மல்காந்தி பதில் சொலவில்லை, மாறாக அவள் ,

மல்காந்தி: படங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சோர்வாக இருந்தால் நாளை காலையில்  படங்களை அனுப்புங்கள். எடுத்த புகைப்படங்கள்  அனைத்தையும் டிலீட் செய்தால் போதும்.

அவர்களிடமிருந்து சுரேகா பணம் எதுவும் பெறவில்லை, மேலும் அவள் வித்தியாசமான  முறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பற்றி மிகவும் கவலைப்பட்ட  அவள் ஹிதவதியை அழைத்தாள். புகாரளித்து அக்கணக்கைத் ப்லொக் செய்யுமாறு ஹிதவதி அறிவுறுத்தினாள். மேலும், கூறப்பட்ட நபருடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹிதவதி சுரேகாவை அறிவுறுத்தினாள். இறுதியாக, தனது படங்கள் ஏதேனும்  ஒரு இடத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கவனித்தால் ஹிதவதியிடம் தெரிவிக்கும்படியும், இது போன்ற ஒன்லைன் கடத்தல்களிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தினாள்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • ஒரு புகைப்படம்/வீடியோ இணையம் ஊடாக ஒருவருக்கு அனுப்பப்பட்டவுடன், அதை உங்கள் முனை/சாதனத்தில் இருந்து நீக்கினாலும் அது நிரந்தரமாக  அனுப்பப்பட்டுவிடும். எனவே ஒன்லைனில் ஒருவருக்கு (குறிப்பாக இனம் தெரியாத நபருக்கு) படங்கள்/வீடியோக்களை அனுப்பும் முன் எப்போதும் யோசியுங்கள்
  • பணத்தை இலவசமாக யாரும் (பெரும்பாலும் மோசடி/கறுப்புப் பணம்) கொடுக்க மாட்டார்கள், எனவே அவ்வாறான பணத்தை பெற முன் எப்பொழுதும் இருமுறை யோசியுங்கள்
  • இணையச் சிக்கல்கள் தொடர்பான பயனுள்ள தொடர்பு புள்ளிகளைப் பெற https://www.hithawathi.lk/how-to-get-help/useful-contact-information/ ஐப் பார்வையிடவும்
  • சைபர்-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாகக் பதியப்பட்டிருந்தால், அவற்றைக் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் dir.ccid@police.gov.lk எனும் மின்னஞ்சலூடகவும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும்.
  • இதுபோன்ற நிகழ்வுகளால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டால் 1926 (சிறப்பு மனநல ஆதரவு சேவை) அல்லது சுமித்ரயோவை தொடர்பு கொள்ளவும்.