கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 13, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

 

லிமாஷி சமீபத்தில் தனது பாடசாலை கல்வியை முடித்து விட்டு வெளியேறியவராவாள். அவளிடம் சாதாரண பாவனைக்குரிய (அடிப்படை செயல்பாடுகளுடன்)  தொலைப்பேசியொன்று தான் இருந்தது. பாடசாலை கல்வியை முடித்தவுடன் அவளின் சக நண்பர்களைப் போலவே அவளும் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க ஆசைப்பட்டாள். தொலைபேசியொன்றைத் தேடும் பணியினை மேற்கொண்ட லிமாஷி செய்தித்தாள் விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருந்தாளும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த அனைத்து புதிய தொலைபேசிகளும் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. ஆனால் அவளிடம் அவ்வளவு அதிக தொகை பணம் இல்லாததால் அவற்றில் எதையுமே அவளால் வாங்க முடியவில்லை.

ஒரு நாள் அவளது உறவினர் அண்ணன் ஒருவன் அவளிடம் சில ஃபேஸ்புக் பக்கங்களில் பயன்படுத்திய மொபைல் போன்களை இணையத்தில் விற்பனை செய்வதாகக் கூறி அவளிடம் இரண்டு மூன்று பக்கங்களைப் பரிந்துரைத்தான். லிமாஷி தனது சகோதரரின் கணினியைப் பயன்படுத்தி தனது பேஸ்புக் கணக்கில் உள்நுழைந்து அந்தப் பக்கங்களைப் பார்வையிட்டாள். அவள் ஒரு விளம்பரத்தைக் கண்டதோடு விளம்பரப்படுத்தப்பட்டிருந்த பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் தொலைப்பேசி ஒப்பீட்டளவில் நியாயமான விலையில் உள்ளது என்பதைக் கண்டறிந்தார். அவள் அதை வாங்க விரும்புவதாக கூறி விற்பனையாளருக்கு ஒரு தகவலையும் அனுப்பினாள். தொலைபேசியின் விலை  60,000/- ரூபாவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை வாங்க லிமாஷியிடம் பணம் இல்லையென்றாலும் அவளுக்கு அதன் தேவை மிகவும் அவசியமாக இருந்தது அவள் தாயிடம் தனது தேவையைக் கூறினாள்.

லிமாஷி: அம்மா எனக்கு எப்படியாவது அந்த தொலைப்பேசியை வாங்க வேண்டும்
லிமாஷியின் அம்மா: ஆனால் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை மகள்
லிமாஷி: எனது நண்பர்கள் அனைவரிடமும் ஸ்மார்ட் தொலைப்பேசிகள் தான் இருக்கிறது நான் மட்டும் தான் இதுபோன்ற பழைய தொலைப்பேசியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்… அவர்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு இது மிகவும் சங்கடமாக இருக்கிறது.. தயவுசெய்து எனக்கு இதை வாங்கி கொடுங்கள்

இதைக் கேட்ட லிமாஷியின் அம்மாவின் மனம் உருகியது.

மகள் தனது பழைய தொலைப்பேசியைப் பற்றி எப்போதுமே குறை சொல்லிக்கொண்டே இருந்ததால், தன் மகளுக்கு புது தொலைப்பேசியொன்றை வாங்கிக் கொடுக்கப் பணம் தேடுவது எப்படி என்று யோசித்தாள்.

கடைசியில், தன் கழுத்து சங்கிலியை அடகு வைக்க நினைத்து, அப்படியே செய்து, பின்பு தேவையான பண தொகையையும் பெற்றாள். இருப்பினும், அவள் தனது மகளிடம் தொலைப்பேசி கையில் கிடைத்த பின்பு மீதி பணத்தை வைப்புச் செய்யுமாறும் தற்போது பாதி தொகை மாத்திரம் செலுத்துமாறும் கூறினாள்.

லிமாஷியும் தனது தாய் சொன்னபடியே கேட்டு, விற்பனையாளரால் பகிரப்பட்ட வங்கிக் கணக்குக்கு 30,000/- ரூபாய் மாத்திரமே  வைப்புச் செய்தாள்.

லிமாஷி மிகவும் உற்சாகமடைந்து தனது ஸ்மார்ட்ஃபோனைப் கையில் பெறுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். நாட்கள் கடந்தும், தான் ஆர்டர் செய்த தொலைப்பேசி வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அவள் விற்பனையாளரை ஃபேஸ்புக்  மெசஞ்சர் மூலம் தொடர்பு கொள்ள முயன்றாள், ஆனால் அவளால் விற்பனையாளரை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

லிமாஷி மிகவும் ஏமாற்றமடைந்தாள், லிமாஷி தனது தோழியிடம் இந்தக் கதையைச் சொன்னாள். ஹிதவதியூடாக வழங்கப்படும் சேவைகளைப் பற்றி தெரிந்த லிமாஷியின் தோழி ஹிதவதியை தொடர்பு கொள்ளுமாறு லிமாஷியிடம் கேட்டுக்கொண்டாள்
லிமாஷி ஹிதவதியைத் தொடர்பு கொண்டாள், ஹிதவதியின் முகவர்கள்  லிமாஷி சொல்வதைக் கவனமாகக் கேட்டனர். அவள் தேடும் வழிகாட்டுதலை அவர்கள் வழங்கினர். மேலும், ஹிதவதி, இணைய ஸ்கேம்ஸ் (மோசடிகள்) பற்றி லிமாஷிக்கு விளக்கியதுடன், எதிர்காலத்தில் இவை குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • இணைய விளம்பரங்கள் மற்றும் இணைய வணிகங்கள் எப்போதுமே அவர்கள் கூறுவது போல் இருப்பதில்லை, எனவே அவற்றை கவனத்தில் கொள்ளுங்கள். இணையத்தில் பொருட்களையும் சேவைகளையும் பெற முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • பணத்தை எடுத்துவிட்டு பொருட்களை விநியோகம் செய்யாமல் விடும் மோசடிகள் தற்காலத்தில் மிகவும் அதிகமாக நடக்கின்றன, எனவே நீங்கள் பிரபலமற்ற இணைய தளங்களிலிருந்து இணையத்தில் பொருட்களை வாங்குவதில் அபாயம் உள்ளது. இணையத்தில் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, ” பொருட்கள் கிடைத்த பின் பணம் செலுத்தும் வசதியுடன் கூடிய” சேவையைத் தேர்வுசெய்யலாம்.
  • இணையக் (சைபர்)-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாக்கப் பதியப்பட்டிருந்தால், அவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் dir.cid@police.lkஎனும் மின்னஞ்சலூடகவும் புகார்களை அனுப்பி வைக்க முடியும்.