கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 20, 2025

ஹிதவதி, Factum நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2025 ஜூன் 11ஆம் திகதி கொழும்பு Cinnamon Life இல் நடைபெற்ற தெற்காசிய தேர்தல், தள மற்றும் தகவல் நம்பகத்தன்மை உச்சி மாநாடு (EPIGS’25) இல் பங்கேற்றது. இந்த மாநாட்டில் தேர்தல் நம்பகத்தன்மை, தகவல் தணிக்கை மற்றும் தள நிர்வாகத்தின் தோல்விகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பேசப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 12 நாடுகளை சேர்ந்த 200 பன்முக பங்குதாரர்கள் இதில் பங்கேற்றனர்.