கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 11, 2025
2025 ஜூன் 24 ஆம் தேதி, (Hashtag ஹேஷ்டாக் ஜெனரேஷன் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற “The Digital Fourth Pillar” என்ற தேசிய உரையாடலில் ஹிதவதி பங்கேற்றது. இந்த நிகழ்வில், Facebook மற்றும் TikTok போன்ற மைய வலைத்தளங்கள் தேர்தல்கள், போராட்டங்கள் மற்றும் பொறுப்பாளித்தன்மை மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், LGBTQIA+ சமூகங்கள், மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற டிஜிட்டல் விலக்குநிலை மற்றும் ஆன்லைன் தொந்தரவுகள் பற்றிய கவலைகள் முன்வைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த மற்றும் ஜனநாயகபூர்வமான டிஜிட்டல் இடத்தை உருவாக்கும் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சுமார் 60க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Photos courtesy of Hashtag Generation http://www.hashtaggeneration.org/