கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 7, 2025

‘ஹிதவதி’ மற்றும் பிற சமூக வலுப்படுத்தல் திட்டங்கள் செயல்படுகின்ற FOUNDATION.LK அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வு 2025 ஜூலை 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஹில்டன் கொழும்பு ரெசிடென்சஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவின் Digital Empowerment Foundation (DEF)ஐ பிரதிநிதித்துவப்படுத்தி திரு. சௌரப் குமார் ஸ்ரீவாஸ்தவா, LK Domain Registryயின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டொமைன் பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயாஸ், TechCERT நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. குஷான் சர்மா, FOUNDATION.LK நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. நிரோஜா ஜெயவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு வகைகளில் ஆதரவு வழங்கும் பலரின் பங்கேற்பும் இருந்தது.