கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 7, 2025

நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்த, ஹிதவதி வழங்கிய இணைய பாதுகாப்பு மற்றும் சமூக ஊடக பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2025 ஆகஸ்ட் 1ஆம் திகதி, சீனிகமவில் அமைந்துள்ள நற்குண முன்னேற்ற அமைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நற்குண முன்னேற்ற அமைப்பின் பெண்கள் அதிகாரமூட்டும் முயற்சியின் கீழ் உள்ள பெண்கள் ஆடைத் தயாரிப்பு பயிலுநர் குழுவைச் சேர்ந்த சுமார் 60 பேர் பங்கேற்றனர்.