கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 22, 2025

அலெக்சா, கூகுள் ஹோம், சிரி போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் எங்கும் காணப்படுகின்றன. அவை நமக்கு பாடல்களை இயக்க, நினைவூட்டல்களை அமைக்க, ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால் இந்த வசதியான கருவிகள் சில நேரங்களில் கடுமையான தனியுரிமை அபாயங்களையும் உருவாக்கக்கூடும்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

  1. எப்போதும் கேட்கும் திறன்

    ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தங்கள் விழித்தெழுதல் சொல் (wake word) கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில நேரங்களில் வேறு ஒலிகளை அந்த வார்த்தையென தவறாக புரிந்தால், அவை தவறுதலாக பதிவைத் தொடங்கிவிடலாம். இந்த பதிவுகள் பெரும்பாலும் கிளவுடில் சேமிக்கப்படுகின்றன, மேலும் உங்கள் கணக்கின் அமைப்புகளில் அவற்றைப் பார்வையிடவோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அவை மற்றவர்களுக்கும் அணுகக்கூடியதாகிவிடும்.

  2. கிளவுடில் சேமிக்கப்பட்ட தரவு

    உங்கள் குரல் கட்டளைகள் மற்றும் சாதன பயன்பாட்டுத் தகவல்கள் ஸ்பீக்கரில் மட்டுமல்ல – ஆன்லைனிலும் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்பு பலவீனமாக இருந்தால், ஹேக்கர்கள் அல்லது அனுமதியற்ற நபர்கள் இந்த தரவுகளைப் பெறக்கூடும்.

  3. மூன்றாம் தரப்பு ஆப்ஸ்கள் தரவுகளை சேகரிக்கலாம்

    நீங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் இயக்கும் திறன்கள் (skills) அல்லது ஆப்ஸ்கள், உங்கள் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் அல்லது உரையாடல்களில் வரும் நுணுக்கமான தகவல்களைக் கூட சேகரிக்கக்கூடும். எனவே நம்பகமான ஆப்ஸ்களையே பயன்படுத்தவும், அனுமதிகளை கவனமாக பரிசீலிக்கவும்.

  4. சாத்தியமான அபாயங்கள்

    • உரையாடல்களை பதிவு செய்வதால் தனியுரிமை மீறல்
    • கணக்குகள் ஆபத்துக்குள்ளானால் அடையாள திருட்டு அல்லது நிதி மோசடி ஏற்படும் அபாயம்
    • தனிப்பட்ட அல்லது குடும்பத் தகவல்கள் தவறுதலாக பகிரப்படும் வாய்ப்பு
  5. உங்களை எப்படி பாதுகாப்பது

    • தனிப்பட்ட உரையாடல்கள் நடைபெறும் போது முடக்கு (mute) பொத்தானைப் பயன்படுத்தவும்
    • தனியுரிமை அமைப்புகளை முறையாக பரிசீலிக்கவும், பழைய குரல் பதிவுகளை நீக்கவோ, தானாக நீக்குமாறு அமைக்கவோ செய்யவும்
    • உங்கள் அருகலை (Wi-Fi) வலையமைப்பு வலுவான கடவுச்சொல்லுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்
    • மூன்றாம் தரப்பு ஆப்ஸ்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும் – நம்பகமானவற்றை மட்டுமே இயக்கவும்
    •  குடும்பத்தினருக்கு ஸ்மார்ட் சாதனங்களின் தனியுரிமை விழிப்புணர்வை கற்பிக்கவும்

ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பயனுள்ளவை, வேடிக்கையானவை. ஆனால் அவை உங்களுக்குத் தெரியாமல் பல தகவல்களைச் சேகரிக்கக்கூடும். இந்த படிகளை பின்பற்றுவதன் மூலம், தொழில்நுட்பத்தின் நன்மைகளை அனுபவிக்கும் போது, உங்கள் தனியுரிமையையும் காக்கலாம்.

References:

https://www.kaspersky.com/resource-center/threats/how-to-improve-your-smart-speaker-privacy
https://moxso.com/blog/how-smart-speakers-can-compromise-your-privacy