கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 15, 2025

பாஸ்கீக்கள் என்பது வழக்கமான கடவுச்சொற்களைவிட பாதுகாப்பானதும் எளிமையானதும் ஆகும். கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொள்வதற்கும் உள்ளிடுவதற்கும் பதிலாக, உங்கள் விரல் ரேகை, முகம், பின் அல்லது பேட்டர்ன் அன்லாக் மூலம் உள்நுழையலாம். இதனால் உள்நுழைவு வேகமாகவும், எளிமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
கடவுச்சொற்கள் நினைவில் வைத்துக்கொள்வது கடினம், மறந்து போகலாம், ஹேக்கர்களால் திருடப்படலாம் என்பதால் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. மேலும், அவை பயனர்களுக்கும் டெவலப்பர்களுக்கும் கூடுதல் பணியை உருவாக்குகின்றன.
பாஸ்கீக்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, கடவுச்சொற்களின் தேவையை முற்றிலுமாக நீக்குகிறது.
இவை மின் தூண்டிலிடல் (பிஷிங்) தாக்குதல்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன, மேலும் எஸ்எம்எஸ் அல்லது செயலி (ஆப்ஸ்) அடிப்படையிலான ஒருமுறை கடவுக்குறியீடுகள் (ஓ டீ பி) தேவையில்லை. மிகச் சிறந்தது என்னவென்றால், பாஸ்கீக்கள் உங்கள் சாதனங்கள், உலாவிகள் மற்றும் இயங்குதளங்கள் முழுவதிலும் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் எங்கே இருந்தாலும் பாதுகாப்பான உள்நுழைவு அனுபவத்தைப் பெறலாம்.

பாஸ்கீக்கள் என்றால் என்ன?

பாஸ்கீ என்பது ஒரு டிஜிட்டல் சாவி போன்றது, இது கடவுச்சொற்களின் தேவையில்லாமல் உங்கள் ஆன்லைன் கணக்குகளைத் திறக்க உதவுகிறது. இது உங்கள் தொலைபேசி, டேப்லெட் அல்லது லேப்டாப்பில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.
நீங்கள் உள்நுழையும்போது, கடவுச்சொல்லை உள்ளிடுவதற்கு பதிலாக, உங்கள் விரல் ரேகை, முகம், பின் அல்லது பேட்டர்ன் அன்லாக் பயன்படுத்தி உங்களை உறுதிப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, உங்கள் சாதனத்தில் உள்ள பாஸ்கீ பின்னணியில் பாதுகாப்பாக உள்நுழையச் செய்கிறது.
முக்கியமாக அறிந்திருக்க வேண்டியது, தனிப்பட்ட சாவி உங்கள் சாதனத்தில் மட்டுமே இருக்கும்; அந்த இணையதளம் அல்லது செயலி (ஆப்) பொது சாவியை மட்டுமே பெறும். இதனால் ஒரு நிறுவனத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டாலும் திருட எதுவும் இல்லை, ஏனெனில் கடவுச்சொல் இருப்பதே இல்லை.

பாஸ்கீக்கள் ஏன் சிறந்தவை

  • ஹேக்கர்கள் மக்களை ஏமாற்றி கடவுச்சொற்களை திருடலாம், ஆனால் பாஸ்கீக்கள் போலியான இணையதளங்களில் வேலை செய்யாது.
  • உங்கள் சாவி உண்மையான செயலி அல்லது இணையதளத்தில் மட்டுமே வேலை செய்கிறது.
  • கடவுச்சொல் இருந்தால், நிறுவனம் ஹேக் ஆனால் உங்கள் கணக்கு ஆபத்தில் இருக்கும்.
  • பாஸ்கீக்களில், நிறுவனத்தின் பக்கம் பயனுள்ளதாக எதுவும் சேமிக்கப்படாது. உங்கள் சாவி உங்களுடனே பாதுகாப்பாக இருக்கும்.
  • இனி உள்ளிட செய்வதோ நினைவில் வைத்துக்கொள்வதோ தேவையில்லை.
  • உங்கள் சாதனத்தை அன்லாக் செய்தாலே போதும் உடனே உள்நுழையலாம்.

பாஸ்கீக்களை எப்படி உருவாக்குவது?

ஒரு இணையதளம் அல்லது செயலிக்காக பாஸ்கீ உருவாக்க, ஒரு பயனர் முதலில் அந்த இணையதளம் அல்லது விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்கீயைப் பதிவு செய்ய வேண்டும்.

  • செயலியில் (ஆப்) சென்று, ஏற்கனவே உள்ள உள்நுழைவு முறையைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • “Create a Passkey” பட்டனை கிளிக் செய்யவும்.
  • புதிய பாஸ்கீயுடன் சேமிக்கப்படும் தகவலைச் சரிபார்க்கவும்.
  • உங்கள் சாதனத்தின் விரல் ரேகை, முகம், பின் அல்லது பேட்டர்ன் அன்லாக் மூலம் பாஸ்கீயை உருவாக்கவும்.

நீங்களே முயற்சிக்கலாம்

பாஸ்கீக்களை நீங்கள் இந்த டெமோவில் முயற்சி செய்து பார்க்கலாம்:

https://passkeys-demo.appspot.com/

மேற்கோள்கள்:
https://developers.google.com/identity/passkeys

https://nordpass.com/blog/what-is-a-passkey/