கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 18, 2025

டெலிகிராம் (Telegram) என்பது ஒரு பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். இதை மில்லியன் கணக்கானோர் சாட் (chat) செய்ய, டெலிகிராம் குழுக்களில் சேர மற்றும் தகவல்களைப் பகிரப் பயன்படுத்துகின்றனர். ஆனால் டெலிகிராமில் வரும் அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல. மோசடி செய்பவர்கள் (Scammers) பணத்தையும், தனிப்பட்ட தரவுகளைத் திருடவும், போலியான சலுகைகள் மூலம் மக்களை ஏமாற்றவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
மோசடிகளை (scams) கண்டறிந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே:
பொதுவான டெலிகிராம் மோசடிகள் (Common Telegram Scams)
- போலியான வேலை வாய்ப்புகள் மற்றும் பணி அடிப்படையிலான வருமானம் (Fake Job Offers & Task-Based Earnings)
ஸ்கேமர்கள் விளம்பரங்களைக் கிளிக் செய்தல், தயாரிப்புகளுக்கு மதிப்பீடு செய்தல் அல்லது எளிய பணிகளை முடிப்பது போன்ற “எளிதான வேலைகளை” வழங்குவார்கள். முதலில், உங்கள் நம்பிக்கையைப் பெற அவர்கள் சிறிய தொகையை செலுத்துவார்கள். பின்னர், அதிக வருமானத்தைத் திறட்ட, அதிகமாக முதலீடு செய்யும்படி கேட்பார்கள். இறுதியில், நீங்கள் உங்கள் பணத்தை இழக்க நேரிடும், மேலும் அவர்கள் மறைந்து விடுவார்கள்.
- போலியான பரிசுகள் மற்றும் வெகுமதிகள் (Fake Giveaways & Rewards)
இலவச தொலைபேசிகள், பணம் அல்லது பரிசுகளை உறுதியளிக்கும் செய்திகளை நீங்கள் காணலாம். இதைப் பெறுவதற்கு ஒரு சிறிய “கட்டணம்” செலுத்துமாறு அவர்கள் கேட்பார்கள். நீங்கள் செலுத்தியவுடன், உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
- ஆள்மாறாட்ட மோசடிகள் (Impersonation Scams)
மோசடி செய்பவர்கள் பின்வருமாறு ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்:
- வங்கி அதிகாரிகள்
- நிறுவன ஊழியர்கள்
- டெலிகிராம் “ஆதரவு” (support)
உங்கள் கடவுச்சொற்கள் (passwords), OTP அல்லது தனிப்பட்ட தகவலை அவர்கள் கேட்பார்கள். உண்மையான நிறுவனங்கள் ஒருபோதும் இதனைச் செய்யாது.
- கிரிப்டோ மற்றும் முதலீட்டு மோசடிகள் (Crypto & Investment Scams)
போலியான குழுக்கள் உங்களுக்கு இலாபங்களைக் காட்டி, உயர் வருமானத்தை உறுதியளிக்கும். உங்கள் பணம் அனைத்தும் பெற்றுக்கொள்ளும் வரை அதிகமாக முதலீடு செய்ய அவர்கள் உங்களை வற்புறுத்துவார்கள்.
- ஃபிஷிங் இணைப்புகள் (Phishing Links)
இணைப்புகள் மூலம் இவ்வாறான செய்திகளைப் பெறலாம்:
- “உங்கள் கணக்கு முடக்கப்படும்”
- “உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்”
- “நீங்கள் ஒரு வெகுமதியை வென்றுள்ளீர்கள்”
இவைகளை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் உள்நுழைவு தகவலை திருடுவதற்கும் அல்லது தீங்கிழைக்கும் மென்பொருள் (malware) நிறுவுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி (How to Stay Safe)
-
-
- அந்நியர்களுக்கு ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம்.
- முன்பணமாகக் கட்டணம் கேட்கும் வேலைகளைத் தவிர்க்கவும்.
- சந்தேகத்திற்குரிய இணைப்புகளை (links) கிளிக் செய்யவோ அல்லது தெரியாத இணைப்புகளைத் (attachments) திறக்கவோ வேண்டாம்.
- டெலிகிராமில் இரு நிலைய சரிபார்ப்பு (2-Step Verification) இயக்கவும்.
- பணம் செலுத்த அல்லது முதலீடு செய்ய உங்களை வற்புறுத்தும் குழுக்கள் அல்லது சேனல்களை விட்டு வெளியேறவும்.
- யாரையும் உடனே நம்பாதீர்கள். நம்புவதற்கு முன் நிச்சயமாக நம்பகத்தன்மையை உறுதிசெய்யவும்.
-
நீங்கள் இவ்வாறான மோசடிகளில் மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் (What to Do If You’re Targeted)
-
-
- உடனடியாக பணம் அனுப்புவதை நிறுத்தவும்.
- அந்த நபர் அல்லது குழுவை தடை (Block) செய்யவும்.
- ஆதாரமாக திரைக்காட்சிகளை (screenshots) எடுக்கவும்.
- டெலிகிராமில் அந்த மோசடி சேனல்/கணக்கைப் பற்றி முறைப்பாடு (Report) செய்யவும்.
- பணத்தை இழந்திருந்தால், உங்கள் வங்கி/பணம் செலுத்தும் சேவையை (bank/payment service) தொடர்பு கொள்ளவும்.
-
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Keep in mind):
டெலிகிராமின் முறைப்பாடு செய்யும் முறை எப்போதும் சரியாக வேலை செய்யாது, மேலும் புதிய கணக்குகளை உருவாக்கி மோசடி செய்பவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.குறிப்புகள்:
https://surfshark.com/blog/telegram-scams?srsltid=AfmBOooI47wCcgc8ju8emYYErYa6PObG3EZS_mqQ9_d29ibbW6itEGxw
https://threatcop.com/blog/telegram-scams/
