கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 18, 2025

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டு வேலைத்திட்டத்தை முன்னிட்டு, உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை ஒழிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுக்கு இணங்க, இணைய அச்சுறுத்தல்களுக்கு பாதுகாப்பான முறையில் பதிலளிப்பு மற்றும் தேசிய ஆதரவு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்திய ஒரு சிறப்புப் பட்டறை 2025 டிசம்பர் 15 அன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த அமர்வை ‘ஹிதவதி’ நடத்தியதோடு, இதில், கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி (UCSC) யைச் சேர்ந்த சுமார் 25 பெண் மாணவிகள் பங்கேற்றனர். மேலும், ஆலோசகர்-மனநல மருத்துவர் டாக்டர் விந்தியா விஜேபண்டார வளவாளராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு மன உறுதி மற்றும் பாதுகாப்பான எதிர்வினைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.