கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 20, 2026

 

அட்டை மோசடிகளின் பின்னால் இருக்கும் மூளையாளர்கள் – நீங்கள் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன

அது இன்னொரு சாதாரண நாள்தான்.
ஆலியா நிகழ்நிலையில் ஒரு ஜோடி செருப்பை வாங்க விரும்பினார்.
விலை நன்றாகத் தோன்றியது. விற்பனையாளர் உண்மையானவர் போல இருந்தார்.
அவள் தனது பற்று அட்டை விவரங்களை உள்ளிட்டு “ செலுத்து (Pay)” என்பதை அழுத்தினார். பின்னர் ஒரு அறிவிப்பு தோன்றியது:
“தற்போது சிக்கல் தீர்வு காரணமாக கட்டண நுழைவாயில் தற்காலிகமாக செயல்படவில்லை.”

ஒரு நொடி கழித்து, அவள் ஒரு குறுந்தகவலை பெற்றாள்:
“கட்டண வாயிலுக்கு செல்ல இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.”

யோசிக்காமல், அவள் அதை கிளிக் செய்தாள்; அப்பக்கம் “பீப்” என்ற ஒலியை எழுப்பியது.
கட்டணம் வெற்றிகரமாக முடிந்தது.

பிறகு, அவள் இன்னொரு குறுந்தகவலை பெற்றாள்:
“உங்கள் அட்டையில் இருந்து ரூ. 2,200 கட்டணம் செலுத்தப்பட்டது.”

ஆனால் அந்த கட்டணத்தை அவள் செய்யவில்லை.

அந்த நாள் முழுவதும், மேலும் சில சிறிய தொகைகள் கழிக்கப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
பின்னர் இன்னொன்று.

ஒவ்வொரு கழிவும் சில நூறு ரூபாய்க்குள் மட்டுமே இருந்ததால், அவள் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வார முடிவில், அவள் எதிர்பார்த்ததை விட அவளது கணக்கு இருப்பு மிகவும் குறைந்திருந்தது.

ஒரு அட்டை மோசடியால், சில நிமிடங்களுக்குள் அவளது பணம் முழுவதும் இல்லாமல் போய்விட்டது.

இன்றைய காலத்தில் அட்டை மோசடிகள் ஏன் அதிகமாக உள்ளன?

பற்று அட்டைகளும் கடன் அட்டைகளும் இன்று தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன.
மக்கள் அவற்றை பயன்படுத்துவது:

  • பொருட்கள் வாங்குவதற்கு
  • நிகழ்நிலையில் கட்டணங்கள் (online payment) செலுத்த
  • சேவைகளை முன்பதிவு செய்ய
  • கட்டணச் சீட்டுகளை (bills) செலுத்த

அட்டை பயன்பாடு அதிகரிக்கும் போது, அட்டை தொடர்பான மோசடிகளும் அதிகரிக்கின்றன. இந்த மோசடிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன; இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பலர் இன்னும் டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு புதியவர்களாக இருப்பதால், மோசடி செய்பவர்களின் வேலை எளிதாக்கப் படுகின்றது.

அட்டை மோசடி என்றால் என்ன? (எளிய வார்த்தைகளில்)

உங்கள் அனுமதி இல்லாமல் யாராவது உங்கள் பற்று அட்டை அல்லது கடன் அட்டை விவரங்களை பயன்படுத்தினால், அதையே அட்டை மோசடி என்று கூறப் படுகின்றது.
இது நிகழலாம், எவ்வாறு எனில்:

  • உங்கள் அட்டை உங்களிடமே இருந்தாலும்
  • நீங்கள் அதை தெரிந்தே யாருடனும் பகிரவில்லை என்றாலும்
  • உங்கள் பணப்பையை இழக்கவில்லை என்றாலும்

மோசடி செய்பவர்களுக்கு தேவையானது உங்களது அட்டை விவரங்கள் மட்டுமே.

அட்டை மோசடிகள் நடைபெறும் பொதுவான வழிகள்

        1. போலியான நிகழ்நிலை கொள்வனவு தளங்கள்

          சில இணையதளங்கள் அல்லது சமூக ஊடகப் பக்கங்கள் உண்மையான கடைகளைப் போலத் தோன்றும். அவை ஆடைகள், மின்னணு சாதனங்கள், டிக்கெட்டுகள் அல்லது சேவைகளை கவர்ச்சிகரமான விலையில் விற்கின்றன.

          நீங்கள் உங்கள் அட்டை விவரங்களை உள்ளிட்டதும்:

          • மோசடிக்காரர்கள் உங்கள் தகவல்களை சேமித்து வைப்பார்கள்
          • அவர்கள் திடீரென மறைந்து விடலாம்
          • பின்னர் உங்கள் கார்டை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்
        2. சமூக ஊடக விற்பனை மோசடிகள்

          இப்போது பல மோசடிகள் பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் அல்லது குறுஞ்செய்தி செயலிகளின் மூலம் நடைபெறுகின்றன.
          கட்டணம் செலுத்திய பிறகு:

          • விற்பனையாளர் பதில் அளிப்பதை நிறுத்திவிடுகிறார்.
          • அந்த பக்கம் திடீரென மறைந்து விடுகிறது.
          • வாங்குபவருக்கு எதுவும் கிடைப்பது இல்லை.
        3. பிஷிங் குருஞ்செய்திகள் மற்றும் போலி எச்சரிக்கைகள்

          நீங்கள் கீழ்க்கண்டவாறு கூறும் குறுஞ்செய்திகள் பெறலாம்:

          • “உங்கள் அட்டை முடக்கப்பட்டுள்ளது”
          • “சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது”
          • “உங்கள் கட்டணத்தை அவசரமாக சரிபார்க்கவும்”

          இவ்வாறான செய்திகள் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், பலர் சரிபார்க்காமல் உடனடியாக செயல்படுகின்றனர்.

        4. போலி தொலைபேசி அழைப்புகள்

          சில மோசடிக்காரர்கள் தங்களை கீழ் காணும் நபர்களைப் போல காட்டுகின்றனர்:

          • வங்கி அதிகாரிகள்
          • வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்
          • அதிகாரிகள்

      அவர்கள் கேட்டுக்கொள்ளும் விடயங்கள்:

          • அட்டை எண்கள்
          • OTP குறியீடுகள்
          • CVV எண்கள்

      வங்கிகள் இவ்வாறு எந்த விபரங்களையும் கேட்பது இல்லை.

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அட்டை மோசடிகள், மக்கள் தெரிந்திருக்க வேண்டியது

இன்றைய அட்டை மோசடிகள் அறிவார்ந்தவையாகவும், கவனிக்க கடினமாகவும் இருக்கின்றன.

✦︎ சிறிய, மீண்டும் மீண்டும் நடைபெறும் கட்டணங்கள்
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் சிறிய தொகைகளுடன் தொடங்குகின்றனர்; ரூ. 100, ரூ. 300, ரூ. 500. பலரும் சிறிய கழிவுகளை வங்கியின் சேவை கட்டணமாக நினைத்துக் கொண்டு பொருட்படுத்தாமல் விடுகிறார்கள். இதனால் தான் மோசடிக்காரர்கள் பிடிக்கப்படாமல் தங்களது வேலையை தொடர்கிறார்கள்.

✦︎ போலி கட்டண பக்கங்கள்
சில இணையதளங்கள் பயனாளர்களை உண்மையானது போல தோற்றம் அளிக்கும் போலி கட்டண திரைகளுக்கு திசை திரும்புகின்றன. அட்டை விவரங்களை ஒருமுறை உள்ளிட்டவுடன், மோசடிக்காரர்கள் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடும். இந்த மோசடிகள் சில விநாடிகளில் நடக்கின்றன; ஒரு கிளிக், ஒரு குருஞ்செய்தி, ஒரு நம்பிக்கையின் தருணம் – இவை தான் பணத்தை இழக்க போதுமானதாகின்றது.

ஏன் இது ஒரு தீவிரமான பிரச்சனை:

டிஜிட்டல் கட்டணங்கள் தென் ஆசிய பகுதியில், குறிப்பாக இலங்கையில், விரைவாக வளர்கின்றன. ஆனால் அதனைப் போல அது தொடர்பான விழிப்புணர்வு வளரவில்லை.
இந்த குறைவான விழிப்புணர்வு மோசடிக்காரர்களுக்கு பின்வரும் வாய்ப்புகளை அளிக்கிறது:

  • புதிய பயனாளர்களை இலக்கு செய்வது.
  • நம்பிக்கையை சாதகமாக்கி மோசடி செய்ய பயன்படுத்துவது.
  • பணத்தை மின்முறையில் திருடுவது.

யாராயினும் இதன்மூலம் பாதிக்கப்படலாம்; இளம் வயதினரோ, முதியோரோ, அல்லது கல்வி பெற்றவரோ இல்லாதவரோ எவரும் கூட இதில் சிக்க நேரலாம்.

உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம்

தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. எளிய பழக்கங்கள் உங்கள் பணத்தை பாதுகாக்க உதவும்.

✅ இணையதளங்களை கவனமாக சரிபார்க்கவும்.
அறியாத அல்லது சந்தேகத்திற்கிடமான தளங்களில் அட்டை விவரங்களை உள்ளிட வேண்டாம்.

✅ OTP அல்லது CVV எண்களை எப்போதும் பகிர வேண்டாம்.
எந்த வங்கியும் இவ்வாறான தகவல்களை கேட்காது.

✅ உங்கள் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும்
வங்கி SMS மற்றும் கணக்கு அறிக்கைகளை கவனமாக சரிபார்க்கவும் – சிறிய தொகைகளாக இருப்பினும் முக்கியம்.

✅ அறிவிப்பு குறுஞ்செய்திகளை செயல்படுத்தவும்.
SMS அல்லது செயலி (App) அறிவிப்புகள் பிரச்சனைகளை உடனே கவனிக்க உதவும்.

✅ உடனடியாக செயல்படவும்.
அறியாத பரிவர்த்தனைகளை கண்டால்:

✔️ உடனடியாக உங்கள் வங்கியை தொடர்புகொள்ளுங்கள்.
✔️ தேவையானால் அட்டையை தடை (Block) செய்யுங்கள்.

  • நினைவில் கொள்ளுங்கள்
    அட்டை மோசடிகள் எவரையும் தேர்வு செய்வதில்லை; ஆனால் நீங்கள் உங்கள் பாதுகாப்பை தேர்வு செய்யலாம்.
    விழிப்புணர்வு கடினமானது அல்ல — அது சக்திவாய்ந்தது.
    நிறுத்துங்கள். சிந்தியுங்கள். பகிருங்கள்.
    இன்று எடுக்கும் ஒரு சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நாளை பலரையும் பாதுகாக்க உதவும்.

    ஆதாரம்:

    https://www.europeanpaymentscouncil.eu

  • https://www.mastercard.com
  • https://timesofindia.indiatimes.com
  • https://finance.yahoo.com/news/