கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 20, 2026

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

மாலிகா 25 வயதுடைய ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது கல்வி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிப்பதோடு, ஒரு வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். “விழிப்புணர்வுடன் இருப்பது பாதுகாப்பானது” என்று அவர் எப்போதும் நம்பினார். தொழில்நுட்ப செய்திகள், இணைய குற்ற எச்சரிக்கைகள் மற்றும் இணைய பாதுகாப்பு தகவல்களை அவர் உன்னிப்பாக கவனித்து வந்தார். அவரது நண்பர்களிடையே, “அனைத்தையும் தெரிந்தவர்” என்று அவர் அறியப்பட்டார். அவரது மூளை ஒரு ஹேக்கரை (hacker) விட வேகமாக வேலை செய்கிறது என்று கூறி நண்பர்கள் அவரை விளையாட்டாக “ரோபோட்டிக்கா” என்று அழைத்தனர்.

ஆரம்பத்தில், இந்த விழிப்புணர்வு அவருக்கு நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் தந்தது. அவர் தனது பிரைவசி செட்டிங்ஸை மாற்றியமைத்தார், தேவையற்ற ஆன்லைன் பகிர்வுகளைத் தவிர்த்தார் மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தார். ஆனால் மெதுவாக, அவர் அறியாமலேயே, அந்த விழிப்புணர்வு கவலையாக மாறியது, அக்கவலை பயமாக வளர்ந்தது.

“நானும் அடுத்து பலியாகிவிடுவேனோ?” என்ற எண்ணம் மட்டும் அவர் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
மாலிகா படிப்படியாக சமூக ஊடகங்களிலிருந்து விலகினார்: பதிவிடுவதை நிறுத்தினார், அரட்டையடிப்பதை நிறுத்தினார், இறுதியில் லொக்-இன் செய்வதையே முற்றிலும் நிறுத்திவிட்டார். தொலைபேசிக்கு வெளியேயும் உலகம் அவருக்கு பாதுகாப்பற்றதாகத் தோன்றத் தொடங்கியது. வீட்டிற்கு வெளியே செல்வதே மன அழுத்தமாக இருந்தது, எங்கும் ஆபத்து இருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. வீடு மட்டுமே அவர் பாதுகாப்பாக உணரும் ஒரே இடமாக மெதுவாக மாறியது.

பல்கலைக்கழக மற்றும் அலுவலக வேலைகளை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. சோம்பேறித்தனத்தினால் அல்ல, பயத்தின் காரணமாக அவர் தனது அலுவலகத்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய (work from home) அனுமதி கோரினார். நிறுவனக் கொள்கைகள் காரணமாக அது மறுக்கப்பட்டபோது, ஒவ்வொரு நாளும் மிகுந்த பதற்றத்துடனேயே வேலைக்குச் சென்றார்.

வீதிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில், மாலிகா மற்றவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்தார். ஒரு அந்நியரின் சாதாரணப் பார்வை கூட அவரது இதயத் துடிப்பை அதிகரித்தது.

“எனது புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் மாற்றப்பட்டு அல்லது நான் நினைக்காத வகையில் பகிரப்பட்டிருக்குமோ?”
“யாராவது எனது தொலைபேசியை திருடி மோசடிகளுக்குப் பயன்படுத்தினால் என்ன செய்வது?”
“எனக்குத் தெரியாமலேயே நான் ஏதாவது சட்டவிரோத செயலில் சிக்கியிருக்கிறேனோ?”

இவ்வாறான எண்ணங்கள் பல்கலைக்கழக விரிவுரை அரங்குகளிலிருந்து அலுவலகம் வரை எங்கும் அவளைத் தொடர்ந்தன.

அவளது அலுவலகத்தில், தான் பழகிய நபர்களைக் கூட அவள் நம்புவதை நிறுத்தினார். குறிப்பாக IT துறையில் பணிபுரிபவர்கள் பெரிய இணையக் குற்றப் பின்னணியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நினைத்து அவர்களைக் கண்டு அஞ்சினார். ஒவ்வொரு இரவும் அவள் தனது கடவுச்சொற்களை மாற்றியமைப்பார். எல்லாம் “பாதுகாப்பாக” இருப்பதாக உணரும் வரை அவளுக்கு தூக்கம் வராது.

விரைவில், மாலிகா அலுவலக, பல்கலைக்கழக மற்றும் நண்பர்கள் வாட்ஸ்அப் குழுக்களிலிருந்தும் வெளியேறினார். குறைவான தொழில்நுட்பமே அதிக பாதுகாப்பு என்று நம்பி, தனது ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக ஒரு சிறிய பட்டன் போனைப் பயன்படுத்தத் தொடங்கினார். மெதுவாக நண்பர்களைச் சந்திப்பதையும் நிறுத்தினார். அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. தனிமையே அவரது புதிய வழக்கமாக மாறியது.

நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்த அவரது நெருங்கிய சக ஊழியர் ஒருவர், மாலிகாவின் தாயாரைத் தொடர்பு கொண்டார். மாலிகா தனது ஸ்மார்ட்போனை எறிந்துவிட்டு, அவள் தனது வீட்டில் மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருக்க தன்னைத்தானேத் தடுத்துக்கொண்டதாக தெரிவித்தார். பயம் அவர் வீட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டது.

ஒரு நாள், மாலிகாவிற்கு ஆன்லைன் கடன் (online loan) பற்றிய ஒரு சாதாரண விளம்பரச் செய்தி வந்தது. பலருக்கு இது அலட்சியப்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தாலும், மாலிகாவிற்கு அது ஒரு ஆதாரமாகத் தெரிந்தது.

அவர் பீதியடைந்தார். “எனக்குத் தெரியும். அவர்களிடம் எனது விபரங்கள் உள்ளன. நான் இப்போது ஒரு பாதிக்கப்பட்ட நபர்” என்று கதறினார்.
அவர் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்வது பற்றியும், நகரை விட்டு வெளியேறுவது பற்றியும் பேசினார். பாதுகாப்பாக உணருவதற்காக எதையும் விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருந்தார்.

அவரது சக ஊழியர், தனக்கும் இதே போன்ற செய்தி வந்ததாகக் கூறி, இத்தகைய செய்திகள் சாதாரணமானவை என்று மென்மையான முறையில் விளக்கினார். தெரியாத இணைப்புகளை (links) கிளிக் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான வழி என்று அவர் மாலிகாவிற்கு நினைவூட்டினார். ஆனால், பயம் ஏற்கனவே அவளை ஆட்கொண்டிருந்ததால், விவேகமாக சிந்திக்க அதிக இடமில்லை.

இது ஒரு சாதாரண எச்சரிக்கை உணர்வு அல்ல என்பதை உணர்ந்த சக ஊழியர், டிக்டாக்கில் (TikTok) ஒரு ஹிதவதி விழிப்புணர்வு வீடியோவைப் பார்த்துவிட்டு உதவியை நாடினார். மாலிகா ஹிதவதி உடன் இணைந்தபோது, யாரும் தன்னைத் தவறாக எடைபோடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தனது அச்சங்களைப் பகிர்ந்து கொண்டார். ஹிதவதி அவர் கூறுவதை பொறுமையாகக் கேட்டது.

இணைய அச்சுறுத்தல்கள் இருந்தாலும், தொடர்ச்சியான பயத்தில் வாழ்வது நிம்மதி, கவனம் மற்றும் உறவுகளைப் பாதிக்கும் என்று அவருக்கு மென்மையாக அறிவுறுத்தப்பட்டது. மாலிகா ஏற்கனவே வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்ததால், உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. அவரது அதிகப்படியான பதற்றத்தைக் கவனித்த ஹிதவதி, மேலதிக மனநல ஆதரவிற்காக அவரை சுமித்ரயோ அமைப்பிற்கு பரிந்துரைத்தது.

மாலிகாவின் கதை நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது:

விழிப்புணர்வு என்பது நம்மைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, சிறைப்படுத்தக் கூடாது. உதவி கேட்பது பலவீனம் அல்ல, அது வலிமையின் அடையாளம்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

விழிப்புணர்வையும் மனநலத்தையும் சமநிலைப்படுத்துங்கள்:
இணையக் குற்றச் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பது கவலையை அதிகரிக்கும். தேவைப்படும்போது இடைவேளை எடுங்கள்.

உடனடியாக எதிர்வினை ஆற்றுவதற்கு முன் நிதானியுங்கள்:
எல்லா எச்சரிக்கைகளும் அல்லது செய்திகளும் ஆபத்தானவை அல்ல. சிந்திக்க உங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள்:
மோசடி மற்றும் விளம்பரச் செய்திகள் சாதாரணமானவை. அவற்றில் ஈடுபடாமல் அவற்றை நீக்கிவிடுங்கள்.

✅ புத்திசாலித்தனமாக பாதுகாப்பான பழக்கங்களைக் கையாளுங்கள்:
வலுவான கடவுச்சொற்கள் மற்றும் “Two-Factor Authentication (2FA)” எனும் இரண்டு-காரணி அங்கீகாரம் போதுமானது; அடிக்கடி கடவுச்சொற்களை மாற்றுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

தொடர்பில் இருங்கள்:
தனிமை பயத்தை அதிகரிக்கும். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் தொடர்பில் இருங்கள்.

✅ ஆரம்பத்திலேயே உதவி நாடுங்கள்:
பயம் உங்கள் படிப்பு, வேலை அல்லது அன்றாட வாழ்க்கையைப் பாதித்தால், ஆலோசனை வழங்கும் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: