கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 20, 2026
இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் அனைத்தும் கற்பனையானவை.

மரியா சமீபத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். வேலை தேடுவது மிகவும் மனஅழுத்தமாக இருந்தது. நண்பர்கள் புதிய வேலைகள் அல்லது சாதனைகள் குறித்து LinkedIn-ல் பகிர்ந்த ஒவ்வொரு பதிவும் அவளுக்கு கவலை ஏற்படுத்தியது.
ஒரு மாலை, ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து வந்ததாக கூறிய ஒரு ஆட்கள் தேர்வு அதிகாரியிடமிருந்து (recruiter) ஒரு செய்தி வந்தது. அவளுடைய திட்டங்களைப் புகழ்ந்து, இரண்டு நாட்களில் நடைபெறும் “விரைவு நேர்முகத் தேர்வு”க்கு அழைத்தார். மரியா உற்சாகமும் நம்பிக்கையும் கலந்த உணர்வில் இருந்தாள்.
அந்த recruiter, coding test-க்காக AnyDesk நிறுவுமாறு கேட்டார். மரியா சிறிது தயங்கினாலும் அதை நிறுவினாள். அந்த அமர்வின் போது, அவளிடம் LinkedIn கணக்கில் உள்நுழையச் சொல்லி, அவள் Google கடவுச்சொல்லை type செய்வதை அவர்கள் பார்த்தனர். இந்த வாய்ப்பை இழக்கக் கூடாது என்ற பயத்தில், அவள் அதை செய்தாள்.
சில நாட்களுக்கு பிறகு, மரியாவுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது:
“உங்கள் LinkedIn கடவுச்சொல் மாற்றப்பட்டுள்ளது.”
அவளுடைய கணக்கு கைப்பற்றப்பட்டது. அவள் திகைத்துப்போனாள்.
என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முயன்றபோது, மரியா Hithawathi விழிப்புணர்வு வீடியோ ஒன்றைக் கண்டாள். சிறிய நம்பிக்கை உதித்ததால், அவள் Hithawathi-யை தொடர்புகொண்டு தனது அனுபவத்தை பகிர்ந்தாள். Hithawathi அவளுக்கு கணக்குகளை பாதுகாப்பது எப்படி, கடவுச்சொற்களை மாற்றுவது, இரண்டு நிலை உறுதிப்படுத்தலை (two-factor authentication) அமைப்பது, சந்தேகமான செயல்பாடுகளை கவனிப்பது போன்றவற்றை வழிகாட்டினார்கள். மேலும் அவள் தவறவிட்ட எச்சரிக்கை அறிகுறிகளையும் விளக்கினர்: அவசர கோரிக்கைகள், விரைவு வாய்ப்புகள், மற்றும் remote access software பயன்பாடு.
மரியா தனது கணக்குகளையும் தன்னம்பிக்கையையும் மீண்டும் பெற்றாள். வெளிப்படையாக சிறந்ததாகத் தோன்றும் ஆன்லைன் வாய்ப்புகளும் ஆபத்தானவையாக இருக்கலாம் என்பதை அவள் உணர்ந்தாள். இதேபோன்ற மோசடிகளை தவிர்க்க, தனது அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்தாள்.
மரியாவின் அனுபவம், ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு, சரிபார்ப்பு, மற்றும் நம்பகமான வழிகாட்டுதலை நாடுதல் மிகவும் அவசியம் என்பதை நினைவூட்டுகிறது.
எச்சரிக்கை குறிப்புகள்:
LinkedIn வேலை மோசடிகள்
- ஆட்கள் தேர்வு செய்பவர்களை உறுதிப்படுத்தவும்: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல், LinkedIn சுயவிவரம் மற்றும் இணையதளத்தைப் பார்க்கவும்.
- கடவுச்சொற்களை பகிர வேண்டாம்: LinkedIn, Google அல்லது மின்னஞ்சல் கணக்குகளின் விபரங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்கவும்.
- Remote access software பயன்படுத்தும்போது எச்சரிக்கை: நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அமர்வுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும்.
- Remote access software பயன்படுத்தும்போது எச்சரிக்கை: நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட அமர்வுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கவும்.
- சந்தேகமான செயல்பாடுகளை அறிவிக்கவும்: LinkedIn மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவும்.
