கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 19, 2026
மாத்தறை, றுஹுணு பல்கலைக்கழகத்தில் ஹிதவதி குழுவினரால் 2026 நவம்பர் 16 ஆம் திகதி இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த அமர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பால்நிலை சமத்துவம் மற்றும் சமவாய்ப்புக்கான மையம், பால்நிலை மற்றும் பாலியல் அடிப்படையிலான வன்முறையைத் தடுத்தல் மற்றும் ராகிங் தடுப்புப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. றுஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தைச் சேர்ந்த சில விரிவுரையாளர்கள் உட்பட, சுமார் 171 முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த விழிப்புணர்வு அமர்வில் கலந்துகொண்டனர்.
புகைப்பட உதவி: பால்நிலை சமத்துவம் மற்றும் சமவாய்ப்புக்கான மையம் – றுஹுணு பல்கலைக்கழகம்.







