கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 18, 2025
நீங்கள் எப்போதாவது ஏ.டி.எம் ஐப் பயன்படுத்தியிருக்கிறீர்களா அல்லது ஒரு கடை அல்லது எரிபொருள் நிலையத்தில் உங்கள் அட்டையுடன் பணம் செலுத்தியுள்ளீர்களா? 💳
அப்படியானால் இதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
மோசடி செய்பவர்கள் உங்களை அறியாமலேயே உங்கள் அட்டை விவரங்களைத் திருட தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையைக் ஸ்கிம்மிங் என்று அழைக்கிறார்கள்.
ஏ.டி.எம் ஸ்கிம்மிங் என்றால் என்ன?
குற்றவாளிகள் உங்கள் அட்டை எண் மற்றும் இரகசிய இலக்கத்தைத் திருட ஏ.டி.எம்களில் அல்லது அட்டை இயந்திரங்களில் போலி சாதனங்களை இணைக்கும்போது ஸ்கிம்மிங் நிகழ்கிறது.
இது எப்படி நடக்கிறது?:
- உங்கள் அட்டையைப் படிக்க அட்டை செலுத்தும் இடத்தில் போலியான சாதனம் வைக்கப்படும்.
- மறைமுக கேமரா அல்லது போலியான கீபேட் மூலம் உங்கள் இரகசிய இலக்கம் பதிவு செய்யப்படும்.
- பின்னர், இந்த தகவலைப் பயன்படுத்தி போலி அட்டை தயாரித்து உங்கள் பணத்தைப் பறித்துவிடுவார்கள்.
மிகவும் தாமதமாகும் வரை – நீங்கள் எதையும் தவறாகக் கவனிக்காமல் இருக்கலாம்.😰
🛡️ பாதுகாப்பாக இருப்பது எப்படி:
✅ இயந்திரத்தை நன்றாகச் சோதிக்கவும் – தளர்வாக இருக்கிறதா, புதிதாக பொருத்தியதுபோல இருக்கிறதா என்று பாருங்கள்.
✅ உங்கள் இரகசிய இலக்கத்தை மறைக்கவும் – மறைக்கப்பட்ட கேமராக்களைத் தடுக்க உங்கள் கையைப் பயன்படுத்தவும்.
✅ உட்புற அல்லது வங்கி ஏ.டி.எம் களைப் பயன்படுத்தவும் – அவை பாதுகாப்பானவை மற்றும் கண்காணிக்கப்படும்.
✅ உங்கள் அட்டை கண்ணில் படாமல் விடாதீர்கள் – அது ஸ்வைப் செய்யப்படும்போது எப்போதும் பார்க்கவும்.
✅ குறுந்தகவல் அறிவிப்புகளை இயக்குங்கள் – ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உடனடியாக அறிவிப்பைப் பெறுங்கள்.
✅ உங்கள் அறிக்கைகளை தவறாமல் சரிபார்க்கவும் – சந்தேகத்திற்கிடமான கட்டணங்களைக் கண்டறியவும்
ஏ.டி.எம்களில் எச்சரிக்கையாக இருங்கள் – சில வினாடிகள் எச்சரிக்கையாக இருந்தால் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்! 💳🔐
இதைப் பாருங்கள்:
இதைப் பாருங்கள்:
https://www.memcyco.com/card-skimming-methods/
https://www.bankrate.com/banking/what-is-atm-skimming/