கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 4, 2024

“ஒப்புதலற்ற பாலியல் புகைப்படமாக்கல்” என்பது அதனில் தோன்றும் நபரின்/ களின் ஒப்புதலின்றி பகிரப்படும் பாலியல் ரீதியாக சித்தரிக்கப்பட்ட படங்களைக் குறிக்கின்றது. இது “ஆபாச பழிவாங்குதல்’ என்றும் அறியப்படுகின்றது. அந்தரங்கமாக வைக்கும் எண்ணத்துடன் உடலுறவின்போது எடுக்கப்பட்ட படங்கள், இரகசிய ஒளிப்பதிவுகள், இலத்திரனியல் கருவிகளிலிருந்து திருடப்பட்ட படங்கள் மற்றும் பாலியல் தாக்குதல்களின்போதான பதிவுகள் என்பவற்றை ஒப்புதலற்ற நெருக்கமான படங்கள் கொண்டிருக்கும்.

வயதுவந்தோருக்கான / பாலியல் இணையத்தளங்களில் பதிவிடப்பட்ட ஒப்புதலற்ற நெருக்கமான படங்கள் அல்லது பழிவாங்கும் பாலியல் காட்சிகளது எந்தவொரு வடிவம் குறித்தும் சுயமாக முறையிடுவதற்கான பல வழிகளும் கருவிகளும் காணப்படுகின்றன.

அத்தகைய உள்ளடக்கங்கள் குறித்து எவ்வாறு முறையிடுவது எனப்பார்ப்போம்.

பெரும்பாலான வயதுவந்தோர்/ பாலியல் சம்பந்தமான இணையத்தளங்களில் நீக்கப்படவேண்டிய உள்ளடக்கங்கள் குறித்து முறையிடுவதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.

அத்தகைய இணையத்தளத்தின் மேல் பகுதியில் காணப்படும் “ஆதரவு” என்ற தலைப்பினை அல்லது “உள்ளடக்க நீக்கம்” அல்லது “எம்மைத் தொடர்புகொள்ள” என அழைக்கப்படும் இணையத்தளத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள தலைப்பினை பார்க்கவும். அவை ஒரு மின்னஞ்சல் முகவரியை அல்லது தொடர்பு வடிவினை நிச்சயமாகக் கொண்டிருக்கும்.

 

போர்ன்ஹப் (Pornhub) தளத்தில் பழிவாங்கும் பாலியல் காட்சிகள் குறித்து முறையிடல்

கீழுள்ள பட்டனை சொடுக்கி, படிவத்தினை நிரப்பி இறுதியில் ‘அனுப்பவும்’ ஆளியினை சொடுக்கவும்.

Pornhub

எக்ஸ்மாஸ்டர் (Xhamster) தளத்தில் பழிவாங்கும் பாலியல் காட்சிகள் குறித்து முறையிடல்

கீழுள்ள பட்டனை சொடுக்கி, படிவத்தினை நிரப்பி இறுதியில் ‘அனுப்பவும்’ ஆளியினை சொடுக்கவும்.

Xhamster

எக்ஸ் வீடியோஸ் (Xvideos) தளத்தில் பழிவாங்கும் பாலியல் காட்சிகள் குறித்து முறையிடல்

கீழுள்ள பட்டனை சொடுக்கி, படிவத்தினை நிரப்பி இறுதியில் ‘இக்கோரிக்கையை அனுப்பவும்’ ஆளியினை சொடுக்கவும்.

X Videos

எக்ஸ்.எக்ஸ்.என.;எக்ஸ் (XNXX) தளத்தில் பழிவாங்கும் பாலியல் காட்சிகள் குறித்து முறையிடல்

கீழுள்ள பட்டனை சொடுக்கி, படிவத்தினை நிரப்பி இறுதியில் ‘இக்கோரிக்கையை அனுப்பவும்’ ஆளியினை சொடுக்கவும்.

XNXX

மூலங்கள்:

https://revengepornhelpline.org.uk/information-and-advice/reporting-content/reporting-to-adult-sites/
https://www.cagoldberglaw.com/how-to-report-revenge-porn-on-social-media/
https://legalvoice.org/nonconsensual-pornography/
https://www.pornhub.com/content-removal
https://xhamster.com/info/contact
https://info.xvideos.net/takedown