கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 5, 2021

முகப்பு à உதவி மையம் à அறிவுத் தளம் à மோசடிகள் எவை

 நீங்கள் இணையத்தில் உலாவும்போது, இது போன்ற ஒரு சிறிய வினாடி வினாவைக் கண்டால் என்ன செய்வது,

“நீங்கள் எத்தனை குழந்தைகளைப் பெற முடியும்? – தெரிந்து கொள்வதற்கானது”

“உங்களிடம் அரச பரம்பரை ரத்தம் இருக்கிறதா? – இப்போது சோதிக்கவும் ”

“நீங்கள் எவ்வளவு புத்திசாலி ஆக உள்ளீர்கள்? – சோதிக்கவும்”

இந்த வகையான கேள்விகள் இயற்கையாகவே மனிதர்களின் கவனத்தை ஈர்க்கின்றன, இருப்பினும் இவற்றை விட அவர்கள் வேறு எதையாவது நம்பலாம். அவர்களில் சிலர் பதிலைக் காண்பதற்காக அந்த கேள்விகளை அழுத்துகிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் இது போன்ற ஒன்றைப் பார்த்தீர்களா?

படத்தின் ஆதாரம்: https://www.google.com/

இந்த உற்சாகம் உங்கள் பேஸ்புக் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் தொடர வேண்டிய ஒரு பக்கத்திற்கு உங்களை வழிநடத்துகிறது. வெளிப்படையாக, ‘அவர் அல்லது அவள் எத்தனை குழந்தைகளைப் பெறப் போகிறார்கள்’ என்பதை அறிய ஆர்வமாக இருப்பவர், அது ஒரு பேஸ்புக் பக்கம் அல்லது ஏதோவொன்றோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று நினைத்து, பதிலைக் காண பயனர் தகவல்களை அளித்து (பயனர் பெயர் & கடவுச்சொல்) நுழைகிறார். ஒருவேளை நீங்கள் ஒரு மகிழ்ச்சியான பதிலைப் பெறலாம்.

இருப்பினும், அடுத்த முறை உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும்போது, கணக்கு முற்றிலும் மாற்றம் செய்யப்படுவதைக் காண்பீர்கள்.

விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு தெளிவாக இருக்கும்: வினாடி வினாவுக்கு பேஸ்புக்கிற்கு எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் இது ஒரு போலிச் செயலியாகும், இது உங்கள் பேஸ்புக் பயனர் தகவல்களூடாக உங்களை ஒரு மோசடிப் பக்கத்திற்கு வழிநடத்துகிறது.  அதன்பிறகு, ஊடுவுபவர்கள் உங்கள் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்தலாம், உங்களை பிளாக்மெயில் செய்யலாம், ரன்சம்வெயார் இணைப்புகளை அனுப்பலாம். அத்துடன் உங்களுக்கு இன்னும் பல பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.

சமீபத்தில், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைப்பின்னல் தளங்களைத் சுரண்டல் செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளை இயக்குவதன் மூலம் உக்ரைனை தளமாகக் கொண்ட இரண்டு டெவலப்பர்கள் தங்கள் சமூக வழிகாட்டுதல்களையும் பிற அமெரிக்க சட்டங்களையும் மீறியுள்ளனர் எனத்தெரிவித்து பேஸ்புக் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆகையால், எதுவுமே உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது என்று தோன்றும் இடத்தில் இருமுறை யோசிப்பது மிகவும் முக்கியம். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும், மேலும் கிளிக் செய்வதற்கு முன் அந்த URL களின் (இணைப்புகள்) உண்மையான தன்மையை சரிபார்க்கவும். இது போலியானதா அல்லது உண்மையான வலைத்தளமா என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கலாம் என்பது பற்றி மேலும் அறிக. மேலும், உங்கள் பயனர் தகவல்களை வழங்குவதற்கு முன் கவனமாக இருங்கள்.

சான்றாதாரம்:
https://edition.cnn.com/2019/03/09/tech/facebook-ukraine-hackers/index.html?fbclid=IwAR0pGWbjITFL2_4LqRznogx_53wWtGzb9t87XBPegNojcpc4eqoYjQmTYZ0