கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 1, 2021

தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டமொன்றைக் கடந்து செல்லும் போது சம்பத் ஜெயவர்த்தனாவுக்கு ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல் வந்தது. அதில் அவர் இணையவழி (ஒன்லைன்) சந்தையொன்றுக்கு பேபால் (PayPal) ஊடாக பணத்தைச் செலுத்தியிருப்பதாகவும், ஆனால் அப்பொருட் கட்டளை ​ (order) பெறப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இங்கு ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், 180 நாட்களுக்குள் பணத்தை மீள்ளிப்புச் செய்ய முடியும் எனவும் பற்றுச்சீட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்தகைய பணப் பரிமாற்றமொன்றைத் தான் ஒருபோதும் செய்யவில்லை என்று அவருக்கு உறுதியான நம்பிக்கையிருந்த போதிலும், இந்த ஒப்பந்தம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றியது, ஏனெனில் இங்கு வழங்கப்படும் பணத்தொகையும் இதற்கு ஒரு காரணமெனக் கூறலாம். இருப்பினும், தனது பேபால் (PayPal) கணக்கை வேறு எவரேனும் பயன்படுத்தி இக் கொடுப்பனவை மேற்கொண்டுள்ளார்களா என்று அவர் கவலைப்பட்டார். அவர் இவ்விடயத்தை சரிபார்த்து தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினார். எனவே, அவர் இதிலுள்ள இணைப்புகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் கவனமாக பரிசீலனை செய்தார். எவ்வாறாயினும், மொத்தமாக இவ்விடயம் சந்தேகத்திற்குரியது என்பதால் அவர் கொடுக்கப்பட்ட இணைப்புகள் எதையும் திறக்கவில்லை.

சம்பத் பெற்ற மின்னஞ்சல் பின்வருமாறு;

இடமிருந்து (From): service@paypal.com.au <payment-dispute2@asiiaps-01.com>
அனுப்பப்பட்டது (Sent): 2019, நவம்பர் 7, வியாழக்கிழமை, 14:48
இதற்கு (To):
விடயம் (Subject): தகுதி வாய்ந்த பரிமாற்றங்களுக்கான சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக நீங்கள் பேபால் மூலம் பணம் செலுத்திய நாளிலிருந்து 180 நாட்கள் கால அவகாசம் கிடைக்கப்பெறும் – மிரெனெஸ்ஸிற்கு நீங்கள் செலுத்திய கொடுப்பனவுக்கான பற்றுச்சீட்டு

தொடக்கத்தில், ‘ஃப்ரம்’ (From) மின்னஞ்சல் முகவரி (<> க்கு உள்ளே) உண்மையான பேபால் (PayPal) மின்னஞ்சல்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் கவனித்தார், அதில் பேபால் மின்னஞ்சல் முகவரிகளில் ‘paypal.com’ தளத்தின் ( டொமைன்) பெயர் இருந்தது.

பின்னர், மேலும் சரிபார்க்க, அவர் ஏனைய இணைப்புகளையும் சொடுக்காமல் (கிளிக்), ரயிட் (right) கிளிக் செய்து அவ்விணைப்புகளை ஒரு நோட்பேடில் நகலெடுப்பதன் (கொபி பேஸ்ட்) மூலம் அவற்றின் உண்மை தன்மையினை கண்டறிந்தார். அம்முகவரிகள் அனைத்தும் பயனர் சான்றுகளை கோரும் பேபால் போன்ற போலியான பக்கங்களுக்கு வழிநடத்தப்பட்டதாக இருந்தது. மின்னஞ்சலில் உள்ள இணைப்புகளை உடனடியாக க்ளிக் செய்யாது பொறுமையாக இருந்து ஆய்வு செய்ததன் காரணமாக இவ்வாறு மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் பாதுகாப்புப்பெற்றார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • பரிசீலனையின்றி இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். அவ்விணைப்பு போலியானதா அல்லது உண்மையான (Fake or a Real) வலைத்தளமா என்பதை தீர்மானிப்பது எப்படி என்பதைப் பற்றி கற்றுக்கொள்க!
  • இரு காரணி அங்கீகாரத்தை (Two Factor Authentication) செயல்படுத்தவும்.
  • ஒரு மின்னஞ்சல் மோசடியொன்றைக் கண்டுபிடிப்பது எவ்வாறு என்பதை ஆராய்தல்.
  • இந்த நிறுவனங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக, அல்லது எவ்வாறு பரிசோதிப்பது என்பது தொடர்பில் மேலும் சந்தேகம் தோன்றுவதாயின், தயவுசெய்து நிறுவனத்தின் அசல்/அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை​ப் பார்வையிடவும் (கூகிள் அல்லது வேறு எந்த தேடுபொறியிலிருந்தும் இணைய முகவரியை பரிசோதித்து பார்க்கவும்) மற்றும் மேலும் சரிபார்த்துக்கொள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.