கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 19, 2023

 

தனது இருபதுகளின் போது, ரேயான் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதை விரும்பினார், குறிப்பாக டேட்டிங் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். ஒரு நாள், “ஷேக் ஹம்தான் ஃபாஸா” என்ற ஒருவரிடமிருந்து ஸ்கவுட்டில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. . ரேயான் இதை பற்றி அறியாதவனாக இருந்த போதும் மேலும் அவரை பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். வpரைவிலே, குறித்த நபர் மீண்டும் அவனுக்கு ஐ.எம்.ஓ இனூடாக மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.

ஷேக் ஹம்தான் ஃபஸா : ஹாய்

ரேயான் : ஹலோ

ஷேக் ஹம்தான் ஃபஸா : எப்படி இருக்கிறீர்கள்? உங்களை பற்றி கூறுங்கள்.

ரேயான் : நான் நலமாக உள்ளேன். நீங்கள் யார்?

குறித்த நபர் தான் துபாய் நாட்டின் முடிக்குரிய இளவரசன் என கூறியது ரேயானுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதோடு ஆர்வத்தை தூண்டியது. என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்காக அவன் அரட்டையை தொடர்ந்தான்.

ஷேக் ஹம்தான் ஃபஸா : எனது தந்தைக்கு அரச அங்கி ஒன்றை அனுப்பிவைக்க முடியுமானால், உன்னை வேறு நாட்டிலுள்ள எனது நண்பன் என எனது தந்தையிடம் அறிமுகம் செய்து வைப்பதோடு, துபாய் நாட்டுக்கு வருவதற்கான இலவச விமான டிக்கட்டையும் தருகிறேன்.

குறித்த நபர் தந்திரமானவர் என ரேயான் நினைத்தான்.

ஷேக் ஹம்தான் ஃபஸா : உன்னால் வாங்க முடியாவிட்டால், உன் சார்பாக நான் பெற்றுத்தருகிறேன்.

ரேயான் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான். பின்னர்…

ஷேக் ஹம்தான் ஃபஸா : உன்னுடைய சேமிப்புக்கணக்கில் போதுமானளவு பணம் உள்ளதா? நைஜீரியாவிலுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் நான் ஒரு பெரிய திட்டத்தை ஆரம்பிக்கின்றேன்.

ரேயான் : ம்ம்ம்

அந்த நபர், ரேயானின் சுயவிவரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி,ரேயானை அதிகம் பேச வைக்க முயன்றார். ரேயான் அவனுடன் பேசுவதை நிறுத்த முடிவு செய்து உதவி தேடினான்.

ஹிதவதி எனும் இணையத்தளத்தை கண்டுபிடித்து, அவர்களின் நேரலை அரட்டை தொடர்பினூடாக, மோசடி தொடர்பாக அவர்களிடம் முறையீடு செய்தான். மோசடி செய்பவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான எவ்வித இணைப்புக்களையும் கிளிக் செய்ய வேண்டாம் என ஹிதவாதி தளம் ரேயானுக்கு அறிவுறுத்தியது. உரையாடலின் திரைக்காட்சிகள் மற்றும் மோசடி செய்பவரின் தொலைபேசி இலக்கம் போன்றன தொடர்பான திரைக்காட்சி ஆதாரங்களை (feedback@imo.im) எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவுக்குமாறு ரய்யானுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் (ரேயான் இலங்கையை சேர்ந்தவர் இல்லையென்பதால்) அவரது நாட்டிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது சைபர் கிரைம் பிரிவுக்கு தெரிவுக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

ரேயான் , ஹிதவதி தளத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததோடு, மோசடிகளிலிருந்து தவிர்ந்து கொள்ள உதவும் தகவல்களை பகிர்ந்ததற்காக ஹிதவதி தளம் அவரை பாராட்டியது.

முன்னெச்சரிக்கை குறிப்புக்கள்:

  • மோசடி செய்பவர்களுடன் பணம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம்
  • புதிய சமூக ஊடக அழைப்புகளில் (நண்பர் கோரிக்கைகள்) கவனமாக இருங்கள்; ஏற்றுக்கொள்வதற்கு முன் அவற்றை முழுமையாகச் சரிபார்க்கவும்.
  • உண்மையாக இருப்பதற்கு மிகவும் சரியாக இருப்பதாக தோன்றும் சலுகைகளை நன்கு அவதானிக்கவும்; அவை மோசடிகளாகவும் இருக்கலாம்
  • இம் மோசடிகள் தொடர்பாக உங்கள் நாட்டிலுள்ள முறையான அதிகாரிகளுக்கு அல்லது ஹெல்ப் லைன்களுக்கு முறைப்பாடு செய்யவும்.