கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

இஷான் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர், சமூகத்தில் சட்டவிரோதமான விடயங்கள் இடம்பெறுவதைப் பார்க்க அவர் விரும்பவில்லை.குறிப்பாக அப்பாவி,படிக்காத மக்கள் ஏமாற்றப்படும்போதொ அல்லது சூரையாடப்படும்போதோ அவரால் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது.

ஒரு நாள் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து அவருக்கு பேஸ்புக் மெசஞ்சர் ஊடாக செய்தி வந்தது. விசித்திரமான சிங்கள மொழியில் குறித்த பெண்ணுடைய அரட்டைகள் (இணையத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை போன்று) மிகவும் வேடிக்கையாக இருந்தன. இருப்பினும், தெரியாத ஒரு பெண் ஏன் அவருடன் அரட்டை அடிக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்று அவர் ஆச்சரியமடைந்தார். தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக அவர் முட்டாள்தனமாக நடித்தார்.

பிட்கொயினில் முதலீடுகள் செய்வதன் மூலம் மக்களுக்கு லாபத்தை ஈட்ட உதவிய ஒரு முகவரகாக அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் மற்றும் அவள் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்குமாறும் இஷானுக்கு பரிந்துரை செய்தாள்.

 

அவள் அவனுக்கு bitcoin.com க்கு பிரவேசிக்கூடியவாறு ஒரு இணைப்பை (லின்க்) அனுப்பி அவனுடைய திரையைக் (ஸ்கீரீன்) காட்டும்படி கேட்டாள். பிறகு Buy BTC (பிட்கோயின் வாங்குக) மீது கிளிக் செய்து 1000 அமெரிக்க டாலர்களை உள்ளிடுமாறும் அவனுக்கு அறிவுறுத்தல் வழங்கினாள். அதன்பிறகு ஒரு டிஜிட்டல் பணப்பை முகவரியை (வொலட் அட்ரஸ்) அனுப்பி அதை நகலெடுத்து (கொபி) பொருத்தமான துறையில் ஒட்டும்படி (பேஸ்ட்) கேட்டாள். இருப்பினும், இது இஷானின் திரையில் பிட்காயின்களை வாங்குவதில் ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது என்று காட்டியது. அப்போது, இஷானிடம் விசா (வங்கி) அட்டை இருக்கிறதா என்று விசாரித்தாள். இறுதியாக, இஷான் அவளுடைய பணப்பை முகவரிக்காக (வொலட் அட்ரஸ்) தன்னுடைய வங்கி அட்டை ஏன் தேவை என்று கேள்வி எழுப்பினான், அத்துடன் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக திடீரென செட் செய்வதை நிறுத்திவிட்டான்.

Sஅதன்படி, இணைய வழியூடாக எளிதாகப் பணம் சம்பாதிப்பவர்களின் பணத்தைக் கூட பல ஏமாற்று கதைகளைப் பயன்படுத்தி அவர்களது நிதியை மோசடி செய்து தனது பிட்காயின் பணப்பைக்குள் வைக்க மோசடிகாரர்கள் மேற்கொள்ளும் இம்முயற்சியான கிரிப்டோ பண மோசடி (கிரிப்டோகரன்சி மோசடி) பற்றி இஷான் ஹிதவதிக்கு தெரிவிக்க முடிவு செய்தார். சம்பந்தப்பட்ட அரட்டையைக் கண்காணித்த ஹிதவதி இச் சம்பவத்தை பேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவித்தது (ரிபோட்). சில நாட்களுக்குப் பிறகு, அக் கணக்கு நீக்கப்பட்டிருக்கின்றமை அவரால் கண்காணிக்க முடிந்தது.

மேலும், நம் நாட்டிற்கு ஒப்பீட்டளவில் புதியதாக இருந்த இம் மோசடியைக் கண்டறிந்து பகிர்ந்தமைக்காக ஹிதவதி அவரைப் பாராட்டியது, மேலும் அவரது வேண்டுகோளின் பேரில், இன்றைய உண்மை நிகழ்வுகள் மூலமாக இச் சம்பவம் தொடர்பில் சமுதாயத்தில் விழிப்புணர்​வை ஏற்படுத்த ஹிதவதி உறுதியளித்தது.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • ஏதாவது அளவுக்கு அதிகமாக உண்மையாக இருப்பின் அதைப் பற்றி நன்றாக இருமுறை சிந்தியுங்கள். அது பெரும்பாலும் மோசடியாக இருக்கலாம். விடயங்களைப் புரிந்து கொள்ள போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது அவ் விடயத்தை நன்கு அறிந்த ஒரு நம்பகமான தரப்பினரின் / நபரின் உதவியை நாடுங்கள், இல்லையெனில் அது உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும் ஓர் விடயமாகத்தான் அமையும்.
  •  அதை ஒரு மோசடி என்று உங்களால் நம்ப முடியாவிட்டால், பேஸ்புக் கணக்குகள் மூலம் வணிகங்களில் ஈடுபடுவதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள். (பேஸ்புக் சமூக வழிகாட்டுதல்களின்படி, அவை உத்தியோகப்பூர்வ பக்கங்கள் / பேஜ்களில் மாத்திரமே விளம்பரப்படுத்த முடியும்) அவ்விதி தெளிவாக மேல் குறிப்பிடப்பட்ட சம்பவத்தில் மீறப்பட்டுள்ளது.
  • இவ்வகையான மோசடிகளை நீங்கள் சந்தித்தால், அவற்றைக் குறித்த செயலி (ஆப்) மூலமாகவே புகாரளிக்கவும் (காரணத்தை ஸ்பேம் / மோசடி எனத் தேர்ந்தெடுக்கவும்). உதவி தேவைப்பட்டால் ஹிதவதியைத் தொடர்பு கொள்ளவும்.
  • ஒரு நபர் அல்லது இணையதளம் உங்கள் வங்கி அட்டை விவரங்களைக் கேட்டால், தகவல் கொடுக்க முன் இருமுறை சிந்தியுங்கள்.
  • இவ்வகையான ஆன்லைன் மோசடி (ஸ்கேம்) அல்லது இணையவழி குற்றவாளிகள் (சைபர் கிரிமினல்) தொடர்பான புகார்களை உரிய ஆதாரங்களுடன் ((இணைப்புகள், ஸ்கிரீன் ஷாட்கள், போன்றவை) தெளிவாகக் கூறி சிஐடியிடம்(CID) ஒப்படைக்கலாம், அல்லது புகார்கள் பதிவு தபால் ஊடாக “பணிப்பாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு 01” அல்லது dir.ccid@police.gov.lk எனும் மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பலாம்.