கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 24, 2023

அவனோ அவளோ

நிரு என்பவள் தன்னுடைய இருபது வயதுகளின் தொடக்கத்தில் காணப்பட்டதுடன் எந்தவொரு வேலையும் இன்றியும் இருந்தாள். வீட்டில் சமைத்த உணவுகளை நாளாந்தம் விற்கும் தன்னுடைய தாயுடன் அவள் வசித்து வந்தாள். பொருளாதார நெருக்கடி மிக்க தருணத்தில் அவ்வருமானம் இருவருக்கும் போதுமானதாக காணப்படவில்லை. இச்சிறு வியாபாரத்தில் அவள் தன்னுடைய தாயிற்கு உதவினாலும் தங்களுடைய தற்போதைய நிலையை உயர்த்துவதற்கு என்ன செய்யலாம் என்பதனையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

நிருவின் காலை வழமையில் 4.30 மணிக்கு தொடங்குவதுடன் வியாபார நோக்கத்திற்காக உணவினை தயாரிப்பதில் தன்னுடைய தாயிற்கு உதவ அவள் அதிகாலையிலே எழுந்துவிடுவாள். அதன் பின்னர் மாலை வரையில் அவளிற்கு போதுமான ஓய்வு நேரம் கிடைத்தது. அவளுடைய தாய் சந்தைக்கு சென்றிருந்த போது அவள் சிறிது நேரம் உறங்கிவிட்டு பின்னர் தன்னுடைய முகநூலை பார்வையிட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்லைனில் பல நண்பர்களை இருந்தார்கள் அவர்களில் ஷானிகா என்று அழைக்கப்படும் ஒரு புதிய தோழி இருந்தார். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவளுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரட்டை அடிப்பாள்.

சில நாட்களின் பின்னர் நிருவும் சானிகாவும் நெருங்கிய நண்பர்களாயினர். நிரு பொதுவாக வீட்டில் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறுவதுடன் தன்னுடைய குடும்பத்தின் நிதி பிரச்சினைகள் குறித்தும் கூறியிருந்தாள். சானிகா இவற்றை மிக்க கவனத்துடன் கேட்டதுடன் அவளிற்கு எவ்வாறு உதவ முடியும் என பார்ப்பதாகவும் கூறியிருந்தாள்.

ஒரு நாள் பெண்களது புகைப்படங்களை பெற்று அதனை பயண சஞ்சிகைகளில் பயன்படுத்தி அதற்காக நல்ல பணம் கொடுக்கின்ற வேலை வழங்கும் ஒருவரைப் பற்றி சானிகா நிருவிற்கு கூறினாள். பின்னர் அவள் தனக்கு சில படங்களை அனுப்புமாறும் அதனை அவள் அவரிற்கு அனுப்பி அவளிற்கு கொஞ்சம் பணத்தை பெற்றுத்தர உதவுவதாகவும் கூறினாள். பணத்தை சம்பாதிக்க இதனை சிறந்தவொரு வழியாக கருதிய நிருவும் அவளுடைய அழகான சில படங்களை சானிகாவிற்கு அனுப்பினாள்.

சானிகா: அடடே., என்ன அழகு… நான் இதனை அவரிற்கு அனுப்புகிறேன், நிரு தயவுசெய்து உன்னுடைய வங்கி கணக்கு இலக்கத்தை எனக்கு அனுப்பு, அதனையும் நான் அவருக்கு அனுப்புகிறேன்…

நிரு: கணக்கு இலக்கம் – 0123456789, அஆஇ வங்கி, கம்பஹா கிளை, எனக்கு நீ செய்யும் இந்த உதவிக்கு ரொம்ப நன்றி சானிக்கா…

இரு நாட்களின் பின்னர், அவளது கணக்கிற்கு 10,000/- வைப்பிலிடப்பட்டதை காட்டும் ஒரு குறுஞ்செய்தி நிருவிற்கு வந்தது. அவளிற்கு மிக்க மகிழ்ச்சியாக காணப்பட்டதுடன் உடனேயே சானிக்காவிற்கும் செய்தியை அனுப்பினாள்.

நிரு: ரொம்ப நன்றி சானி, நீ தான் என் உண்மையான நண்பி

சானிகா: எப்போதும்டி, இன்னும் சில படங்களை அனுப்பு, உனக்கு இன்னும் நிறைய பணம் கிடைக்கும்.

நிரு: இன்னும் சில நல்ல படங்களை அனுப்புகிறேன்டி

சில நாட்கள் சென்றதுடன், சானிக்கா நிருவிற்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தாள்.

சானிகா: ஏய், எனக்கு இன்னும் சில படங்களை அனுப்புகிறாயா? இந்த தடவை அதிக பணம் பெறலாம்…

நிரு: என்னுடைய தோழி ஒருத்தியிடம் சில ஆடைகளை கடன் வாங்கியிருக்கிறேன், அதை போட்டு படங்களை அனுப்புகிறேன்.

சானிகா: என்ன உடுப்புகளா???? உனக்கென்ன பைத்தியமா?? எந்த உடையும் போடாமல் அனுப்பு (சிரிக்க)

நிரு: உண்மையாகவா? வாய்ப்பே இல்லை, என்ன கதைக்கிறாய் நீ? என்ன விளையாடுகிறாயா??

சானிகா: இல்லவே இல்லை, உனக்கு எவ்வளவு கிடைக்கும் தெரியுமா, ஒவ்வொன்றிற்கும் 25,000/-. அத்தோடு உன்னுடைய தலை தெரியாது என்பதால் நீ கவலைப்படத் தேவையே இல்லை. யாருக்கும் அது நீ என்பதே தெரியாது.

சிறிது நேரம் யோசித்த நிரு பின்பு அதற்கு சம்மதித்தாள்.

காலம் கடந்தோட, சானிக்கா பின்பு நிருவை தொடர்புகொள்ளவே இல்லை. நிரு மாத்திரம் ‘வணக்கம்’ என்று குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டேயிருக்க, அவள் பதிலளிக்கவே இல்லை.

ஒரு நாள் காலை நிருவிற்கு அதிர்ச்சி தரும் செய்தியொன்று சானிக்காவிடமிருந்து வந்ததுடன் அதைப் பார்த்து அவளிற்கு மயிர்க்கூச்செறிந்தது.

சானிக்கா: நிரு, எப்படி இருக்கிறாய்… உன் படங்கள் அதிக கவர்ச்சியாக காணப்படுகின்றன!!!! எனக்கு இன்னும் சில படங்களை அனுப்புவாயா?

நிரு: நீ ஏன் என்னுடன் கதைக்கவேயில்லை? அத்தோடு எனக்கு பணமும் கிடைக்கவில்லையே…

சானிக்கா: என்ன பணம், ஹாஹாஹாஹா… ரொம்ப திறமையாக நடப்பதாக நினைக்கவேண்டாம்… நான் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர், அத்தோடு உன்னுடைய பெயரை கெடுக்க என்னால் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும்… உன்னுடைய நிர்வாண படங்களை எல்லா இடத்திலும் வெளியிடுவேன். வாயை மூடிக்கொண்டு காத்திரு…

சானிக்கா ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதனையும் அவள் ஒரு மோசமான பெண் என்பதனையும் புரிந்துக்கொள்வதற்கு நிருவிற்கு அதிக காலம் தேவைப்படவில்லை.

நிரு தொடர்ந்தும் அழுதுகொண்டேயிருந்தாள். உதவிக்கு யாருமே இல்லையென்பதனை உணர்ந்த அவள் இணையத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவும் ஹிதாவதியை தொடர்புகொண்டாள். அவள் ஹிதாவதி குறித்து ஒரு வானொலி நிகழ்ச்சியில் கேள்விப்பட்டிருந்தாள்.

அவர்களை உடனே தொடர்புகொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். ஹிதவதி அவள் கூறுவதை பொறுமையாக கேட்டதுடன் அவள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தமையினால் அழுதுமுடிக்கும் வரையில் காத்திருந்தனர். ஹிதவதி அவளது படங்கள் எதிலும் வெளிவந்துள்ளனவா எனக் கேட்டதற்கு இல்லை என்று கூறினாள். எனவே ஹிதவதி அவளிடம் தைரியமாக இருக்குமாறும் அச்சப்படவேண்டாம் எனவும் கூறியது. இந்நபரிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நிரு விரும்புகின்றாளா எனக்கேட்டதற்கு அவள் சம்மதமாக பதில் கூற, அவளிற்கு இலவச சட்ட ஆலோசனையும் உளவளத்துணை ஆலோசனையையும் வழங்கக்கூடிய Women in Need (WIN) இற்கு அவளை வழிப்படுத்தினர். அதன் ஆலோசனையின் பேரில், நிருவின் படங்கள் எவையேனும் சமூகவலைத்தளத்தில் வெளிவந்திருந்தால் அவற்றை நீக்கும் பொருட்டு, ஹிதவதி நிருவை மீள அழைத்தது.

Precaution tips:

  • நீங்கள் அறியாத ஒருவரிற்கு புகைப்படத்தை அனுப்புவதற்கு முன்னர் இருமுறை, மூன்று முறை ஏன் ஓராயிரம் முறை சிந்தியுங்கள்… நீங்கள் ஒருமுறை அனுப்பினால் அனுப்பியது தான்…
  • பெண்களிற்கும் சிறுவர்களிற்கும் இலவச சட்ட ஆலோசனை மற்றும் உளவளத்துணை ஆலோசனை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ள Women in Need (WIN)அமைப்பை நாடுங்கள்
  • உங்களது அனுமதியின்றி நீங்கள் காணப்படும் எந்தவொரு உள்ளடக்கமும் (படங்கள், காணொளிகள், ஏனையவை) வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து முறையிடுங்கள்; தேவையெனில், உதவிக்கு ஹிதவதியை அழையுங்கள்.