கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 18, 2025

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனைகளாகும்.

கடந்த டிசம்பர் மாதத்தில், அனிதா கிறிஸ்மஸுக்காக மிகவும் உற்சாகமாகத் தயாராகி, பரிசுகளை வாங்கி, தன் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள்,மாலை நேரம், அவளது தொலைபேசி ஒலித்தது. அழைப்பாளரின் ஐடியில் (caller ID) தெரியாத எண் காட்டப்பட்டது. அதை அவள் புறக்கணிக்க நினைத்தாள்… ஆனால் ஆர்வம் அவளை ஆட்கொள்ளவே, அவள் பதிலளித்தாள்.

“ஹலோ, இது ‘சிட்டிபார்சல் டெலிவரி’ உங்களுக்காக எங்களிடம் ஒரு கிறிஸ்மஸ் பரிசு உள்ளது, ஆனால் அதைக் கொடுப்பதற்கு 500 ரூபாய் டெலிவரி கட்டணம் தேவை,” என்று அந்த குரல் கூறியது.

அவள் எந்தவொரு பார்சலையும் ஆர்டர் செய்யாததால் குழப்பமடைந்தாள்.

“இது உங்கள் நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு சிறப்பு கிறிஸ்மஸ் பரிசு. நாங்கள் அனுப்பும் கட்டணம் செலுத்தும் போர்ட்டல் (payment portal) இணைப்பு மூலம் இப்போதே கட்டணத்தைச் செலுத்துங்கள், இல்லையெனில் பார்சலை திருப்பி அனுப்பப்படும்,” என்று அந்தக் குரல் வற்புறுத்தியது.

பதட்டமடைந்த அனிதா, அது வெறும் 500 ரூபாய் என்பதால், அந்த இணைப்பை விரைவாகத் கிளிக் செய்து, தனது வங்கி அட்டையின் விபரங்களை (bank card details) உள்ளீடு செய்தாள். சில நொடிகளிலேயே, அவளது கணக்கிலிருந்து பணம் காணாமல் போவதைக் கவனித்தாள். அவள் பீதியடைந்தாள்.

வேகமாகச் சிந்தித்த அவள், உடனடியாகத் தனது வங்கியைத் தொடர்பு கொண்டாள் மற்றும் அவளது வங்கி அட்டையைத் தற்காலிகமாக தடை செய்தாள். அதிர்ஷ்டவசமாக, வங்கியால் மேலும் பண பரிவர்த்தனைகளைத் (Money transactions) தடுக்க முடிந்தது, ஆனால் அவள் ஏற்கனவே ஒரு சிறிய தொகை பணத்தை இழந்திருந்தாள்.

கிறிஸ்மஸுக்காக எவ்வளவு உற்சாகமாக இருந்தாள் என்பதைப் பார்த்து, போலியான டெலிவரி மூலம் யாரோ தன்னை ஏமாற்றியுள்ளதாக அவள் உணர்ந்தாள்.

மற்றவர்கள் அதே தவறைச் செய்யாமல் இருக்க, அவர்களை எச்சரிக்க அனிதா தனது கதையை ஹிதவதியுடன் பகிர்ந்து கொண்டார்.

பரிசுகளும் சந்தோஷங்களும் இருக்கலாம், ஆனால் விடுமுறை நாட்களில் எப்போதும் விழிப்புடன் இருங்கள்!