கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 19, 2024

கனிஷ்கா கடினமாக உழைக்கும் தனித்த தாய், பேஸ்புக்கில் உலாவுவதன் மூலம் தனது பரபரப்பான வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டணங்கள் செலுத்த முடியாமல் அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் பேஸ்புக்கில் தனக்கு தேவையான விரைவான மற்றும் வட்டியில்லாத கடன்களை பெற்றுத்தரும் பதிவொன்றை பார்த்தாள். நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் அவள் இணைப்பை கிளிக் செய்து கடன் சேவைகளில் இருக்கும் சமித் எனும் நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டாள்.

வணக்கம், உடனடிக்கடன் சேவையிலிருந்து சமித். நான் உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்? ,ஏன குறித்த நபர் பதிலளித்தார்.

அவர்கள் சுருக்கமாக கதைத்தனர். கனிஷ்கா தனது சந்தேகங்களை புறக்கணித்து விட்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டாள். அவள் தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு தனக்கு தேவையான நிதி உதவியை எதிர்பார்த்தாள்.

நாட்கள் நகர்ந்தன கனிஷ்கா நம்பிக்கையிழந்தாள். தாமதங்கள் மற்றும் சிக்கல்களை காரணம் காட்டி சமித்தின் பதில்கள் காலதாமதமாகின. இறுதியில் அவளது வங்கிக்கணக்கில் பணம் வந்து அவளுக்கு நிவாரணம் அளித்தது.

ஆனால் அவள் திருப்பிச் செலுத்த முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக கடன் தவணைகள் அதிகரித்ததோடு அதனை அவளால் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டாள். கனிஷ்கா குறித்த பிரச்சினை தொடர்பாக சமித்தை தொடர்பு கொண்டாள்.

கனிஷ்கா: வணக்கம் சமித், கடன் தவணைகளுக்கு வட்டி இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்த போதிலும் ஆரம்ப இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில் கொடுப்பனவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இது எங்களுடைய ஒப்பந்தத்துடன் ஒத்துப்போகவில்லை. மேலும் நான் நிதிச் சவால்களுக்கும் முகங்கொடுக்கின்றேன். தயவு செய்து மீண்டும் ஒரு முறை சரிபார்த்து சரியான தொகையை வழங்க முடியுமா? மீதமுள்ள நிலுவை தொகையை தவணைகளாக நிர்வகிப்பதற்கு போதுமான நிதியை சேகரிக்க எனக்கு மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படலாம்.

கனிஷ்காவிற்கு உதவக்கூடிய பதில் கிடைக்கவில்லை.

மாறாக வீட்டை விட்டு வெளியேற முடியாத படி கனிஷ்காவின் புகைப்படங்களை மோசமான தலைப்புக்களுடன் வெளியிடுவதாக கூறி சமித் மிரட்டினான். தொடர்ச்சியாக கனிஷ்காவிற்கு மேலும் பல்வேறு விதமான அவமானங்களையும் துயரத்தையும் ஏற்படுத்தினான்.

குறித்த சம்பவம் தொடர்பாக கனிஷ்காவின் மூத்த மகனின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது கனிஷ்கா என்ன செய்வதறியாது நிராதரவாக உணர்ந்தாள்.

கனிஷ்காவின் நிலைமையை அறிந்த அவளது மகனின் பாடசாலை பெற்றோர் ஒருவரின் பரிந்துரையின் படி கனிஷ்கா ஹிதவதியின் ஆலோசனையை நாடினாள்.

பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க உள்ளடக்கம் தொடர்பாக புகாரளிக்குமாறு ஹிதவதி அவளுக்கு ஆலோசனை வழங்கியது. மேலும் செயலி மூலம் புகாரளிப்பது தோல்வியுற்றால் மீண்டும் தொடர்புகொள்ளுமாறும் மோசடி குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்ட உதவியை பெறுமாறு ஹிதவதி அறிவுறுத்தியது.

கடினமான நேரத்தில் ஆதரவு வழங்கியதற்கு ஹிதவதிக்கு கனிஷ்கா நன்றி தெரிவித்தாள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • நிகழ்நிலை கடன்கள் அதிக ஆபத்தை கொண்டவை. உங்கள் தொலைபேசியிலுள்ள சில செயலிகளுக்கு அவற்றுக்கு அனுமதி தேவைப்படுவதோடு அவற்றை தவறாக பயன்படுத்தலாம்.
  • சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தில் நிதி பரிவர்தனைகளை கையாளும் போது விழிப்புணர்வும் சரிபார்ப்பும் அவசியமாகும்.
  • உங்கள் சமூக ஊடக சுயவிபரங்களை நம்பகமான நண்பர்களுடன் மட்டும் தனிப்பட்டதாக வைத்திருங்கள்.
  • எந்தவொரு மூன்றாம் தரப்பு பணியாளர்களுடனும் முக்கியமான தனிப்பட்ட, வங்கியல், நிதி விபரங்களை பகிர வேண்டாம்.
  • உரிய ஆதாரங்களுடன் (இணைப்புக்கள், திரைக்காட்சிகள் மற்றும் ஏனையவை) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள சைபர் கிரைம் முறைப்பாடுகள் சி.ஐ.டீயிடம் ஒப்படைக்கப்படலாம் அல்லது பணிப்பாளர் , குற்றவியல் விசாரணை திணைக்களம், கொழும்பு 01” எனும் முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் உங்களால அனுப்ப முடியும்.