இங்கு குறிப்படும்  இடங்களும் பெயர்களும் கற்பனையானவை

ரங்கா வெளிநாட்டில் இருந்தார், அவரது மனைவி மாயா, அவர் கொழும்பில் தனது  பணியிடத்திற்கு நெருக்கமான  பகிரப்பட்ட வாடகை அறை ஒன்றில்  நண்பி ஒருவருடன்  வசித்து வந்தார், மாயா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வாடகை அறையில்  இருந்து புறப்பட்டு அவரது சொந்த வீட்டிற்குச் சென்று திங்கட்கிழமைகளில் நேராக அவரது வேலைக்கு வருவார்.

ரங்கா மாயாவுடன் அடிக்கடி பேசிக் கொள்வார் அதுவும் வார இறுதி நாட்களில் இமோ மூலம் இருவரும் போதுமான நேரத்தை பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள் . இந்த ஜோடி ஒருவருக்கொருவர் வெகு தூரத்தில்  இருந்ததால், அவர்களிடம் பேசவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய தனிப்பட்ட விஷயங்கள் இருந்தன.

ஒரு நாள் மாயா வாடகை இடத்தில்  அறைத்தோழியுடன்   பேசிக் கொண்டிருக்கும்போது, வார இறுதியில் தனது கணவருடன் பகிர்ந்துகொண்டிருந்த தனிப்பட்ட விஷயத்தை அறைத்தோழி அறிந்திருப்பதாக உணர்ந்தார். இருவருக்கும் இடையிலான பேச்சு  தொடர்ந்தபோது, ​அறைத்தோழி தந்து  கணவருடனான உரையாடலைப் பதிவு செய்து வைத்துள்ளாரா என்று எண்ணும்  அளவுக்கு மாயா ஆச்சரியப்பட்டார். ஆனால் அது எப்படி நடக்கும்? இருவரும் பேசும்போது மாயா அவரது வீட்டில் இருந்தார். அவர் சற்று அதிர்ச்சியடைந்தத்துடன் இந்த குழப்பம் குறித்து யாரவது ஒருவரின் ஆலோசனையைப் பெற நினைத்தார். அதிர்ஷ்டவசமாக அவர் பேஸ்புக்கில்  பின்தொடரும் பக்கத்திலிருந்து ஹிதவதியின் உதவி இலக்கத்தை  கண்டுபிடித்தார்.

மாயாவுக்கு தெரியாமல் ஹக் செய்யப்பட்ட இமோ கணக்கில் இந்த பிரச்சினை இருப்பதை ஹிதவதி அவருக்கு அடையாளம் காட்டியதுடன் இமோவின்  பயன்பாட்டை நீக்குமாறு மாயாவுக்கு அவர்கள் அறிவுறுத்தினார்கள். இமொவானது  மற்ற பயன்பாடுகளுடன் ஒப்பிடும்போது எளிதில் ஹக்  செய்யக் கூடியதுடன் ஒரே நேரத்தில் 10 சாதனங்களில் இயங்கக் கூடியதாகும் (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இமோ ஆரம்பத்தில் இருந்து  இறுதி வரை குறியாக்கம் செய்யப்படாத பாதுகாப்பான பயன்பாடு கிடையாது). மேலும், வட்ஸ்அப் போன்ற மெசேஜிங் பயன்பாட்டை நிறுவ ஹிதவதியால்  மாயாவுக்கு  பரிந்துரை வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையான குறியாக்க அம்சத்துடன் மிகவும் பாதுகாப்பானதாகும் ஆகவே இதன் மூலமான மாயாவுக்கும் ரங்காவுக்கும் இடையிலான உரையாடலை எவராலும் பார்க்க முடியாது. இணையவெளியில் பாதுகாப்பாக  ஆபத்துகள் மற்றும் பாதிப்புகள் இல்லாமல் இருப்பது எந்தளவுக்கு முக்கியமானது என்பதன்  தீவிரத்தை மாயா  புரிந்து கொண்டார். எனவே, அவர் இமோ பயன்பாட்டை அகற்ற முடிவு செய்து, ஹிதவதியின் ஆலோசனையின் படி மிகவும் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு மாறினார். இறுதியாக அவர் ஹிதவதிக்கு பிரச்சினையை அடையாளம் காண உதவியமைக்கும்  ஒரு நல்ல  முடிவை நோக்கி தன்னை வழிநடத்தியதற்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • மற்றவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு எளிதில் ஹக் செய்யக்கூடிய பாதுகாப்பற்ற செய்தியிடல் பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • இணைய வெளியில் பாதுகாப்பினை வழங்கும் ஆரம்பத்தில் இருந்து  இறுதி வரையான குறியாக்க அம்சத்துடன் காணப்படும் செய்தியிடல் பயன்பாடுகளைப்  பயன்படுத்தவும்.