கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2025

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

நிரோஷா 2025 மார்ச் மாதத்தில் ஒரு ஆன்லைன் சிறுவர் உளவியல் பாடநெறியில் சேர்ந்தாள். அந்த பாடநெறியில் 8 அமர்வுகளும், மொத்தம் 20 மணிநேர பாடங்களும் கொண்டதாக இருக்க வேண்டியது. இதற்காக அவள் ரூ. 20,000 செலுத்தினாள்.

தொடக்கத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. அவள் 4 அமர்வுகள் சென்று நன்றாகக் கற்றுக்கொண்டு இருந்தாள். ஆனால் அதற்குப் பிறகு, வகுப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு எவ்வித புதுப்பிப்புகளும், செய்திகளும், காரணங்களும் எதுவும் சொல்லப்படவில்லை.

நிரோஷா பலமுறை ஒருங்கிணைப்பாளரை அழைத்தும், செய்தி அனுப்பியும் பார்த்தாள். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவள் சில நாட்கள் காத்திருந்தாள், சற்று தாமதமாக இருக்கலாம் என எண்ணினாள். ஆனாலும் எதுவும் நடைபெறவில்லை. இறுதியில், ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.

அதனால், அவள் ஹிதவதீ நேரடி உரையாடலுக்கு (Live Chat) ஒரு செய்தி அனுப்பினாள்.

இது ஒரு மோசடி என்பதால் காவல்துறையிலும், சி.ஐ.டி.யின் இணைய குற்றப்பிரிவிலும் புகார் அளிக்குமாறு ஹிதவதீ அவளை வழிகாட்டியது. இவ்வாறான விடயங்களில் சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்தது.

தற்போது நிரோஷா தேவையான உதவியைப் பெற முயற்சிக்கிறாள். அதே சமயம், இதுபோன்ற சூழ்நிலையில் மற்றவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவள் நினைவூட்டுகிறாள்.

நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • எந்த ஆன்லைன் பாடநெறியில் பணம் செலுத்தும் முன், அது நம்பகமானதா என்று நன்கு சரிபார்க்கவும்; மாணவர்களின் அனுபவக் கருத்துக்களையும் பாருங்கள்.
  • அனைத்து கட்டண பற்றுசீட்டுகள், மின்னஞ்சல்கள், செய்திகளை சான்றாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஏதேனும் தவறாகத் தோன்றினால், அல்லது வகுப்புகள் திடீரென நிறுத்தப்பட்டால், அமைதியாக இருக்காமல் உடனே காவல்துறையிலும், இணைய குற்றப்பிரிவிலும் புகார் செய்யுங்கள்.
  • உங்களுக்கு சந்தேகம் தோன்றினால் அல்லது ஏதோ சரியில்லை என்று நினைத்தால், அவசரப்படாமல், நிதானமாக மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் நம்மையும், பிறரையும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து காப்போம்.