கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

ஹஷினி தனது பணியிடத்தில் இருந்தாள், அன்றைய நாள் அவளுக்கு வேலை அதிகமான நாளாக இருந்தது. மதிய உணவு இடைவேளை கிடைத்தவுடன் பேஸ்புக்கில் லாக் ஆன் செய்து அன்றைய களைப்பை போக்க மேலும் கீழும் ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தாள். இதற்கிடையில், மெசஞ்சர் மூலம் கமல் பெரேரா என்ற நபரிடமிருந்து இணைப்புடன்கூடிய (லின்க்) ஒரு செய்தி வந்தது.

கமல் பெரேரா ஹாஷினியின் முகநூல் நண்பராகவும், அவரது பல முகநூல் நண்பர்களின் பரஸ்பர (mutual) நண்பராகவும் இருந்தார். ஹஷினி தெரிவித்த கூற்றின்படி, கமல் பெரேரா எனும் நபர் அவர்களது நகரத்தில் பிரபலமானவர் மற்றும் அவர் திரைப்படத் துறையிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவள் அவனை நேரில் பார்த்தோ அல்லது சந்தித்ததோ இல்லை.

கமல் பெரேரா – கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxx இதன் மூலம் இலவச திரைப்படங்களைப் பெற பதிவு செய்யவும்
ஹஷினி – இணைப்பைக் கிளிக் செய்தால்

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஹஷினிக்கு கமல் பெரேராவிடமிருந்து மற்றொரு செய்தி வந்தது, அவளுக்கு ஆச்சரியமாக, மெசஞ்சர் மூலம் மீண்டும் தனது மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது தனிப்பட்ட வீடியோவை மெசஞ்சரில் பெறுகிறார்.

ஹஷினி மிகவும் திகிலடைகிறாள்,மேலும் அவளை ஆச்சரியப்பட வைக்கும் ​வகையில் அவளுக்கு கிடைத்த இணைப்பு மெசெஞ்சரில் அவளது முகநூல் கணக்கு வழியாக பல நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அத்தோடு நின்றுவிடாமல் கமல் பெரேரா ஹஷினியை தொடர்ந்தும் மிரட்டி வருகிறார்.

கமல் பெரேரா – எனது அழைப்பிற்கு பதிலளிக்கவும் இல்லாவிட்டால் நான் உங்கள் வீடியோவை வெளியிட்டு வைரலாக்குவேன்.

இந்த வீடியோ வெளியாகி வைரலானால் சமூகத்தை எதிர்கொள்ள முடியாது மற்றும் பணியிடத்திற்கு கூட வர முடியாது என்பதை ஹஷினி நன்கு அறிந்ததால், பயந்து தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள். என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளது அலுவலகத்தில் இருக்கும் நெருங்கிய தோழி இதைக் கவனித்து அவளிடம் காரணத்தைக் கேட்கிறாள். ஹஷினி நடந்ததை எல்லாம் சொல்லும் போது, ​​ஹஷினியின் தோழிக்கு திடீரென்று ஹிதவதியின் ஞாபகம் வந்தது. ஹிதாவதியைப் பற்றி முன்பே அறிந்திருந்த ஹஷினியின் தோழி அவளை ஹிதவதியிடம் வழிநடத்துகிறாள்.

ஹஷினியின் கதையைக் கேட்ட ஹிதவதி, கமல் பெரேரா அனுப்பிய தீங்கிழைக்கும் இணைப்பால் அவரது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்த ஹிதவதி அவளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சமூக ஊடக புகார் பிரிவுக்கு பரிந்துரைத்து, இந்த நேரத்தில் மனம் தளராமல் வலுவாக இருக்குமாறும் அறிவுறுத்தியதுடன் இன்னும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் 1926 (மனநல உதவி சேவை) அல்லது சுமித்ரயோவை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஹிதவதி அறிவுறுத்தியது.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • தெரியாதவர்கள் அனுப்பிய இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள், மேலும் உங்கள் நண்பர்கள் அனுப்பியிருந்தால் கூட சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள், ஏனெனில் அவர்களின் கணக்குகளும் சமரசம் செய்யப்படலாம்.
  • நம்பகமான இணைப்பு சரிபார்ப்பு மூலம் இணைப்புகளின் செல்லுபடியை சரிபார்க்கவும்.
  • இணையத்தகவல் ஊடுவெளியில்(சைபர்ஸ்பேஸில்) உங்களுடன் அரட்டை அடிக்கும் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம்.
  • இந்த வகையான சம்பவங்களால் நீங்கள் மனச்சோர்வடைந்தால் 1926 (சிறப்பு மனநல சுகாதார துரித இல) அல்லது சுமித்ராயோவைத் தொடர்பு கொள்ளவும்.
  • சைபர் குற்றம் தொடர்பான முறைப்பாடு இருந்தால், அதற்குரிய ஆதாரங்களுடன் (சரியான இணைப்பு, திரைக்காட்சிகள் (ஸ்கிரீன்ஷாட்) போன்றவை) தெளிவாகக் கூறி, சிஐடியிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபால் ஊடாக “, பணிப்பாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், கொழும்பு 01” என்ற முகவரி மூலமாகவோ அல்லது dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.