கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 1, 2022

பேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்துள்ள எவரும் அத்தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய பேஸ்புக் சமூக நியமங்கள் பற்றி அறிந்திருப்பர். இவை அந்த தளத்தின் பாதுகாப்பை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உறுதி செய்கின்றன அதன்படி, நீங்கள் பேஸ்புக் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டே அதனைப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள்.

உங்கள் கணக்கில் நீங்கள் பேஸ்புக் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் என்ன நடக்கும்? பேஸ்புக் தளத்திலிருந்து அது நீக்கப்படும்.
“உங்களுடைய கணக்கு முடக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டு உங்களுக்கு குறுஞ்செய்தி வரக்கூடிய சில சந்தர்ப்பங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • ஆள் மாறாட்டம் / யாரோ ஒருவர் போல் பாசாங்கு செய்தல்
  • போலியான பெயரைப் பயன்படுத்துதல்
  • துன்புறுத்தலை ஊக்குவித்தல்
  • பேஸ்புக் விதிமுறைகளுக்குள் அடங்காத பதிவுகளை இடல்
  • தொடர்ச்சியான பேஸ்புக் தள நியமங்களை மீறும் நடத்தை

விதிமுறை மீறல்களில் தீவிரத்தன்மையைப் பொறுத்து பேஸ்புக் நிறுவனமானது உங்கள் கணக்கு முடக்கப்படுவதற்கு முன் எச்சரிக்கை வழங்கவோ அல்லது முடக்கப்பட்ட கணக்கை மீள இயக்குவதற்கோ உதவி புரியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மூலம்: https://www.facebook.com/help/103873106370583/