கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 5, 2023

பேஸ்புக்கில் உங்கள் சுயவிவரத்தை பூட்டுவதற்கான விருப்பம் முற்றிலும் உங்களுடையது. நீங்கள் உங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தி, மெய்நிகர் வாழ்க்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்தால், ஒரு பரந்த மெய்நிகர் சமூகத்தை உருவாக்க, திறக்கப்பட்ட சுயவிவரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இருப்பினும், பொதுவில் வெளிப்படுத்தப்படும் உள்ளடக்கம் (உதாரணமாக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள்) தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற உண்மையை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

உங்கள் பேஸ்புக் சுயவிவரத்தின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்த மெட்டா ஆனது ‘சுயவிவரப் பூட்டு’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் சுயவிவரத்தை பூட்ட முடிவு செய்தால், கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்:

சுயவிவரப் பூட்டுதல் அம்சம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே அனுகக்கூடியதாக உள்ளது. உங்கள் சுயவிவரத்தைப் பாதுகாக்க நீங்கள் தேர்வுசெய்தால் உங்கள் சுயவிவர உள்ளடக்கத்தின் ஒரு பார்வை நண்பர்கள் அல்லாதவர்களால் அணுகப்படும் அதே நேரத்தில் பூட்டு சின்னம் / நீல இலட்சனை ( ) உங்கள் மேம்படுத்தப்பட்ட தனியுரிமை அமைப்புகளை முக்கியமாகக் குறிக்கும்.

முகப்புத்தக சுயவிவரம் பூட்டப்பட்டிருக்கும் போது, ‘நண்பர்கள் மட்டும்’ பின்வருவனவற்றை அணுகலாம்.

  • அவர்களின் சுயவிவரத்தில் புகைப்படங்கள் மற்றும் இடுகைகள்.
  • அவர்களின் முழு அளவிலான சுயவிவரப் படம் அல்லது அட்டைப் படம்.
  • அவர்கள் பகிர்ந்து கொண்ட கதைகள்.

மேலும்,

  • ‘பொது’ தளத்தில் முன்னர் பகிரப்பட்ட எந்த இடுகைகளும் ‘நண்பர்கள்’ என புதுப்பிக்கப்படும்.
  • புதிய பதிவுகள் நண்பர்கள் மத்தியில் மட்டுமே பகிரப்படும்.
  • சுயவிவரம் மற்றும் குறிச்சொல் மதிப்புரைகள் தானாகவே செயல்படுத்தப்படும்.
  • அவர்களின் சுயவிவரத்தில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ‘அறிமுகம்’ பகுதியின் ஒரு பகுதி மட்டுமே தெரியும்.

உங்கள் சுயவிவரத்தை எவ்வாறு பூட்டுவது?

  1. உங்கள் பெயரின் கீழ் கிளிக் செய்யவும்.
  2. பிறகு ‘Lock profile’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. கீழே உள்ள “உங்கள் சுயவிவரத்தைப் பூட்டு” என்ற நீல பொத்தானைக் கிளிக் செய்யவும்.

இருப்பினும், பூட்டப்பட்ட சுயவிவரங்களில் இருந்து உங்களுக்கு வரும் நண்பர் கோரிக்கைகளின் நம்பகத்தன்மையைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

ஆதாரம்: https://www.facebook.com/help/196419427651178