கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 16, 2021

ஸ்கைப்பில் யாதாயினும் ஒருவரின் தவறான பயன்படுத்துகையை முறைப்பாடு  செய்வது எப்படி?

நீங்கள் தொடர்பாளர் ஒருவரை சேர்ப்பதற்கான  அறிவிப்பைப் பெறும்போது, நீங்கள் அந்த நபரைச் சேர்க்கலாம், புறக்கணிக்கலாம் அல்லது தடுக்கலாம். அவர்களை  தடுக்க நீங்கள் தெரிவு செய்தால், தடுக்கப்பட்ட பயனரை ஸ்கைப்பில் முறைப்பாடு செய்வதற்கான  மேலதிக தெரிவு உங்களுக்கு வழங்கப்படுகிறது.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்கைப்பின் பதிப்பிற்கு ஏற்ப தடுப்பதற்கும் முறைப்பாடு செய்வதற்குமான வழிமுறைகள் மாறுபடும்.

அண்ட்ரோய்ட் (6.0+), அண்ட்ரோய்ட் டப்லெட் , ஐ போன்  , ஐ பொட்

 1. அரட்டைகளில் இருந்து, நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்பாளரை  கண்டறிந்து, அவர்களின் பெயரைத் தட்டிப் பிடித்துக் கொண்டு பின்னர் Block ஐ  தட்டவும்.
 2. இந்த நபரின்  தவறான பயன்படுத்துகையை முறையிடுதல்  என்பதை தட்டி  காரணத்தை தெரிவு செய்து பின்னர் Block என்பதைத் தட்டவும்.

அண்ட்ரோய்ட் மொபைல் 4.0.4 – 5.1

 1. அரட்டையிலிருந்து, நீங்கள் தடுக்க விரும்பும் தொடர்பாளரைக் கண்டுபிடித்து அவர்களின் பெயரைத் தட்டவும்.
 2. மெனு பட்டனை  தட்டி Block contact என்பதை தட்டவும்.
 3. இந்த நபரின்  தவறான பயன்படுத்துகையை முறையிடுதல்  என்பதை  தட்டி   காரணத்தை குறிப்பிட்டு பின்னர் Block என்பதை தட்டவும்
 1. நீங்கள் தடுக்க விரும்பும் நபரின் சுயவிவரத்திலிருந்து, கீழே உருட்டி  Block ஐ  தட்டவும்.
 2. இந்த தொடர்பாளரை தடுப்பதா?(Block this contact) எனும் பக்கத்தில் நீங்கள்  கீழ்வருவனவற்றை மேற்கொள்ள முடியும்:
  • தவறான பயன்படுத்துகையை முறைப்பாடு  செய்து தொடர்பாளரை  தடுக்க: இந்த நபரின்  தவறான பயன்படுத்துகையை முறையிடுதல்  என்பதை  அழுத்தி  காரணத்தை குறிப்பிட்டு பின்னர் Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தவறான பயன்படுத்துகையை முறைப்பாடு  செய்யாமல்  ஒருவரைத் தடுக்க  : Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. தொடர்பாளர்  தடைசெய்யப்பட்டதும், அவர்கள் உங்கள் அரட்டைகள் மற்றும் தொடர்பு பட்டியலிலிருந்து அகற்றப்படுவார்கள்.

மூலம்: https://support.skype.com/en/faq/FA10001/how-do-i-report-abuse-by-someone-in-skype