கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 19, 2019

பேஸ்புக்கில் மற்ற நபர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யப்படும் கணக்குகளும் பக்கங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. உங்களை, உங்களுக்குத் தெரிந்த ஒருவரை அல்லது பொது நபரை போல பிரதிபலிக்கும் (உதாரணம்: பிரபலங்கள், அரசியல்வாதிகள்) கணக்கினை நீங்கள் கண்டால் அதனை பேஸ்புக்கிற்கு தெரியப்படுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம். நீங்கள் பேஸ்புக் கணக்கைப் பெற்றிருக்கிறீர்களா இல்லையா என்பதை பேஸ்புக் கணக்கில் ஆராய்ந்து கொள்ளலாம்.

ஒரு சுயவிபரத்தினை பற்றியா அல்லது பக்கத்தினை பற்றியா புகாரளிக்கப்போகின்றீர்கள் என்பது பற்றி முதலில் தீர்மானியுங்கள்.

நீங்கள் ஒரு பேஸ்புக் கணக்கை வைத்திருந்தால், ஒரு சுயவிவரத்தைப் பற்றி புகாரளிக்க விரும்பினால்:

  1. ஆள்மாறான கணக்கின் சுயவிவரத்திற்குச் செல்க.
    உங்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், சுயவிவரத்தில் பயன்படுத்தப்படும் பெயரைத் தேட முயற்சிக்கவும் அல்லது உங்களிடம் ஒரு இணைப்பை அனுப்ப முடியுமா என உங்கள் நண்பர்களைக் கேட்கவும்.
  2. அட்டைப் புகைப்படத்தில் கிளிக் செய்து, கருத்துரை வழங்கவும் அல்லது இந்த சுயவிவரத்தைப் புகாரளிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. ஒரு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஆள்மாறாட்டத்திற்கான திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் பேஸ்புக் கணக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன் உங்களை அல்லது உங்களுக்குத் தெரிந்த நபரை போல பிரதிபலிக்கும் ஒருவரைப்பற்றி புகாரளிக்க விரும்பினால் தயவுசெய்து இந்த படிவத்தை நிரப்பவும்.


குறிப்பு: ஒரு பேஸ்புக் சுயவிவரத்தை பற்றி புகாரளிப்பதற்கு மேலே உள்ள படிமுறைகளைப் பின்பற்றவும்.

ஆள்மாறான கணக்கு Messenger இல் மட்டுமே இருந்தால், அதை ஃபேஸ்புக்கு எப்படி புகாரளிப்பது என்பதை அறியவும்.

Instagram மீது ஆள்மாறாட்டம் பற்றி புகாரளிக்க, தயவுசெய்து  Instagram உதவி மையத்தைப் பார்வையிடவும். மூலம்: https://www.facebook.com/help/174210519303259?helpref=uf_permalink