கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 18, 2025

TikTok நிறுவனத்தின் அழைப்பின் பேரில், 2025 நவம்பர் 12 அன்று தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற “இளைஞர் பாதுகாப்பு – பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பல்துறை அணுகுமுறை”என்ற கருப்பொருளில் அமைந்த 2025 TikTok ஆசிய பசிபிக் (APAC) பாதுகாப்பு உச்சிமாநாட்டில் ‘ஹிதவதி’ பங்கேற்றது.

இந்த உச்சிமாநாட்டின் நிபுணர்கள் அமர்வில், நான்கு குழு உறுப்பினர்களில் ஒருவராக ஹிதவதி கலந்துகொண்டது. இதன் போது, TikTok உடனான தனது ஒத்துழைப்பு குறித்து, குறிப்பாக செயலிக்குள் (in-app) உள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் உதவி மையம் (Helpline) ஒருங்கிணைக்கப்பட்ட விதம் மற்றும் உலகளாவிய சமூக பங்காளர் அலைவரிசை (Global Community Partner Channel – CPC) என்ற வகையில் அதன் பங்கு மற்றும் அனுபவங்களை ஹிதவதி பகிர்ந்து கொண்டது.

இளைஞர்களின் இணைய பாதுகாப்பு தொடர்பான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கிய இந்த உச்சிமாநாட்டில், இணைய பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறைகளில் செயல்படும் 21 பிராந்திய பங்குதாரர்கள் உட்பட சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.