கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 19, 2026
பாதுகாப்பான மற்றும் பொறுப்புள்ள டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் எமது தொடர்ச்சியான முயற்சியின் ஒரு அங்கமாக, ‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ திட்டத்தின் கீழ் இணைய பாதுகாப்பு மற்றும் ஹிதவதி சேவைகள் குறித்த வருடாந்த விழிப்புணர்வு அமர்வொன்று 2026 பெப்ரவரி 11 அன்று சீகிரிய மத்திய மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அமர்வில் சுமார் 50 ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு இணையப் பாதுகாப்பு குறித்த முக்கிய விடயங்களை அறிந்துகொண்டனர்.



