கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 18, 2026
டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மேல் மாகாணத்தில் முக்கிய பங்குதாரர்களிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் பாதுகாப்பு தொடர்பான பங்குதாரர் கலந்துரையாடலில் Hithawathi பங்கேற்றது. The Asia Foundation அமைப்பினால், அதன் APAC Cybersecurity Fund முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடல், 2026 செப்டம்பர் 8ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. அரச நிறுவனங்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகள், தனியார் துறை, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (MSMEs), கல்வித்துறை மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்த அமர்வில் சுமார் 60 பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.




