கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 19, 2025
2025 ஆம் ஆண்டுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, அமெரிக்க தேசிய இணைய பாதுகாப்பு கூட்டமைப்பு (NCA) ஏற்பாடு செய்த இணைய மாநாட்டில் ஹிதவதி பங்கேற்றது. இந்த நிகழ்வு 2025 ஜூலை 16ஆம் திகதி Zoom மூலம் நடைபெற்றது. இந்த அமர்வில், இந்த ஆண்டுக்கான தலைப்பும், விழிப்புணர்வு ஊக்குவிக்க பயன்படும் கருவிகள் மற்றும் பிரச்சார யோசனைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்றவர்கள், தங்களது அமைப்புகள் எவ்வாறு ஆன்லைன் பாதுகாப்பை ஊக்குவிக்கின்றன என்பதையும் பகிர்ந்தனர்.