கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 10, 2022

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.

நிமாலியும் அமாலியும் நல்ல நண்பர்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் நிறையவே வாட்ஸ்ஆப் ஊடாக தகவல்கள் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள். ஒரு நாள் அமாலியின் கையடக்க தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது அதைத் தொடர்ந்து நிமாலியிடம் இருந்து கீழ்க் கண்டவாறு வாட்ஸ்ஆப் செய்தி ஒன்றும் வந்தது.

“ஹாய் அமாலி, நான் பல் மருத்துவரிடம் முன்பதிவு செய்து கொண்டிருந்தேன், தவறுதலாக நான் உங்கள் தொலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்விட்டேன், அதனால் உங்கள் தொலைபேசிக்கு அதன் இரகசிய இலக்கம் வந்துவிட்டது. தயவுசெய்து உங்கள் எஸ்எம்எஸ் களை சரிபார்த்து, அங்கு கிடைக்கப்பெற்றிருக்கும் 4 இலக்க எண்ணை எனக்குத் திருப்பி அனுப்புவீர்களா?”

அமாலியும் இருமுறை யோசிக்காமல் இரகசிய இலக்கத்தைச் சரிபார்த்து நிமாலிக்கு அனுப்பிவிட்டாள்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு அமாலி தனது வாட்ஸ்ஆப் செயளிக்குள் நுழைந்து செய்திகளைப் பார்க்க முற்பட்ட பொது, அவளால் வாட்ஸ்ஆப் கணக்கைப் பயன்படுத்த முடியவில்லை.

என்ன நடந்ததிருக்கும் என்பதை ஆலோசித்தால் யாரோ நிமாலியின் கையடக்க தொலைபேசியை எடுத்து அவளது வாட்ஸ்ஆப் கணக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் தனது கையடக்க தொலைபேசியில் வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்து, அமாலியின் தொலைபேசி இலக்கத்தையே அந்த வாட்ஸ்ஆப் கணக்கிற்கும் தொலைப்பேசி இலக்கமாக அமைத்துள்ளார். பின்னர் அந்த நபர் இரகசிய இலக்கத்தை நம்பரை அறிந்து கொள்வதற்காக அமாலியிடம் தன்னை நிமாலி என அறிமுகப்படுத்தி வாட்ஸ்ஆப் செய்து அந்த இரகசிய இலக்கத்தை தனது தொலைபேசியில் பதித்தான். அதனால் அமாலி தனது சொந்த வாட்ஸ்அப் கணக்கிலிருந்து துண்டிக்கப்பட்டாள்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • யாராவது தவறாக அனுப்பிய இரகசிய இலக்கங்களைக் கேட்டால் உங்கள் குறுந்தகவல் செய்திகளைக் கவனமாகச் சரிபார்க்கவும்.
  • கேட்கும் தரப்பினரை அழைத்து உறுதிப்படுத்தும் வரை அத்தகைய செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்.