கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 17, 2025
பதியதலாவ வலயப் பாடசாலை மாணவர்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘ஹிதவதீ’யால் 2025 செப்டெம்பர் 18 ஆம் திகதி பதியதலாவ தேசிய பாடசாலையில் நடத்தப்பட்டது. இந்த அமர்வு சாதாரண தர மாணவர்களுக்காக அவர்களின் மனநிலை மற்றும் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக நெனசல மஹாஓயாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டது. இந்த அமர்வில் சுமார் 500 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர் கலந்துகொண்டனர்.