கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 5, 2022

கடவுச்சொல்

செய்யவேண்டியவை

 • வலுவான கடவுச்சொற்களை உருவாக்கவும்.
 • முடிந்தவரைப் பல காரணி அங்கீகாரத்தை (MFA) இயங்கச்செய்தல்.
 • கடவுச் சொற்களைப் பாதுகாப்பாக சேமிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

செய்யக்கூடாதவை

 • கடவுச்சொற்களைக் கடதாசிகளில் எழுதுவது.
 • ஒரு முறை பாவிக்கக்கூடியதாகக் கிடைக்கப் பெறும் கடவுச்சொல்லை (OTP) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்.
 • எல்லா கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது.
 • பிறந்தநாள், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கம் போன்ற யூகிக்க எளிதான கடவுச்சொல்லை பயன்படுத்துவது.

உள்நுழைவு செயல்முறை

செய்யவேண்டியவை

 • உங்கள் வங்கிச் செயலி மூலமாக உங்கள் செயற்பாடுகளை யாராவது உற்றுப் பார்ப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக கடவுச்சொற்களை மாற்றவும்.

செய்யக்கூடாதவை

 • உங்கள் வங்கி பயன்பாடுகள் மற்றும் கணக்குகளில் உள்நுழைய வேறொருவரை அனுமதிப்பது.

இணைப்பு

செய்யவேண்டியவை

 • எப்போதும் பாதுகாப்பான இணை​ப்பொன்றை பயன்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

 • பொது வைஃபை (Wi-Fi) இணைப்புகள் மூலமாக இணைய வங்கி பயன்பாடுகளில் உள்நுழைவது.
 • இணைய வங்கி வலை வாசல்களுக்குள் (போர்ட்டல்களுக்குள்) உள்நுழைய பொது / பகிரப்பட்ட கணினியைப் பயன்படுத்துவது.

இணைப்புகள் மற்றும் இணையதளங்கள்

செய்யவேண்டியவை

 • ஏதேனும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட URLகளை (இணையதளங்களின் இணைப்புகள்) கவனமாகச் சரிபார்க்கவும்.
 • உங்கள் வங்கியைப் பற்றி ஏதேனும் மின்னஞ்சல்கள் பெறப்பட்டால் வங்கியுடன் தொடர்புகொண்டு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.

செய்யக்கூடாதவை

 • மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட இணைப்புகளைக் சொடுக்குவது.
 • அறியப்படாத இணைப்பு அல்லது இணைய முகப்புகளில் உங்கள் வங்கியின் அட்டை விபரங்கள் அல்லது அதனுடன் தொடர்புடைய சான்றுகளை வழங்குவது.

சாதனம் / கருவி

செய்யவேண்டியவை

 • சாதனத்தைத் திறக்க கைரேகை, பின் (PIN) இலக்கம் அல்லது கடவுச்சொல் போன்ற வலுவான பாதுகாப்பு முறையையே பயன்படுத்தவும்.
 • பயன்பாட்டில் இல்லாத போது சாதனங்களை பூட்டி (லொக் செய்து) வைக்கவும்.

செய்யக்கூடாதவை

 • பயன்பாட்டில் இல்லாத போது வங்கி செயலிகள் அல்லது இணையம் ஊடாக வங்கித் தளங்களில் உள்நுழைந்திருப்பது
 • ஜெயில்பிரேக் அல்லது சாதனத்தை ரூட் செய்து வைப்பது.

செயலிகள் மற்றும் மென்பொருள்

செய்யவேண்டியவை

 • மொபைல் ஆப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து நிறுவும் போது (இன்ஸ்டால் செய்யும் போது) கவனமாக இருக்கவும்.
 • உட்பிரவேச அனுமதி கோரிக்கைகள் மற்றும் செயலி மூலத்தைச் சரிபார்க்கவும்.

செய்யக்கூடாதவை

 • அறியப்படாத வழங்குநர்கள் / மூன்றாம் தரப்பு மூலங்களிலிருந்து செயலிகளை நிறுவுதல்.

இணையத்தளங்களின் பாதுகாப்பை சரிபார்க்கவும்

செய்யவேண்டியவை

 • பணம் செலுத்த முன் இணையதளத்தின் URL ஆனது http:// என்பதற்குப் பதிலாக https:// என்று இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ளவும்.

செய்யக்கூடாதவை

 • பாதுகாப்பு விழிப்பூட்டல்களைப் புறக்கணிப்பது.

சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் அழைப்புகள்

செய்யவேண்டியவை

 • குறுஞ்செய்திகள் பெறப்பட்டால் அனுப்புநரின் தொலைபேசி இலக்கம் அல்லது அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
 • குறுஞ்செய்திகளில் அடங்கியுள்ள உள்ளடக்கத்தைப் பற்றி வங்கியைத் தொடர்பு கொண்டு சரிபார்த்துக்கொள்ளவும்.

செய்யக்கூடாதவை

 • எல்லா குறுஞ்செய்திகளுக்கும் பதிலளித்து உங்கள் வங்கி அட்டை விவரங்கள் அல்லது கணக்கு விவரங்களைக் கொடுப்பது.

வைரஸ் காப்பீட்டை நிறுவவும்

செய்யவேண்டியவை

 • நன்கு அறியப்பட்ட வைரஸ் காப்பீட்டை நிறுவவும்.

செய்யக்கூடாதவை

 • எந்த சந்தர்ப்பத்திலும் வைரஸ் காப்பீட்டின் செயற்பாட்டை நிறுத்திவிடுவது.

அமைப்பு (சிஸ்டம்) மற்றும் ஆண்டி-வைரஸை இற்றைப்படுத்தவும் (அப்டேட்)

செய்யவேண்டியவை

 • சாதனங்களை/கருவிகளை இற்றைப்படுத்தப்பட்ட நிலையில் வைத்திருங்கள்.
 • இயங்கு தளம் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மற்றும் வைரஸ் காப்பீடுகளை இற்றைப்படுத்தி வைத்திருங்கள்.