கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 18, 2023

 

டொக்ஸிங் என்றால் என்ன?

அச்சுறுத்தும் தரப்பினரால், ஒருவரின் தனிப்பட்ட தகவலை இணையத்தில் பரப்பும்போது டொக்ஸிங் நடைபெறுகிறது. டாக்ஸிங்கின் முக்கிய நோக்கம் யாருடைய தகவல் பகிரப்படுகிறதோ அவரைத் துன்புறுத்துவதாகும்.

எவ்வகையான தனிப்பட்ட தகவல்களை டாக்ஸ் செய்ய முடியும்?

பெயர்,தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி, நிதித் தரவு, படங்கள், காணொளிகள், குடும்பம் மற்றும் பணியிட  விபரங்கள் ஆகியவை டாக்ஸர்களால் வெளியிடக்கூடிய சில தகவல்களாகும்.

 டொக்ஸிங் எவ்வாறு இயங்குகிறது?

சமூக ஊடகங்களில் அந்நியர்களுடனான தகராறுகளால்/சர்ச்சைகள் ஊடாக பெரும்பாலான  டொக்ஸிங் தாக்குதல்கள் நிகழ்கின்றன. உதாரணமாக, சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் ஏதோ  ஒன்றை ஒருவர் ஏற்கவில்லை என்றால், அவர்/அவள் அதைப் பதிவிட்ட நபரின் தனிப்பட்ட தகவலைக் கண்டறிந்து துன்புறுத்தலுக்கு/தொந்தரவுக்கு இடமளிக்கலாம்.

பல முறைகளை உபயோகித்து மற்றவர்களின் தகவல்களைச் சேகரிக்க டொக்ஸர் ஒருவருக்கு முடியும்;

 • பொதுப்பதிவுகளுக்கு கூகுளில் (Google) தேடுவது
 • தரவு தரகர் தளங்களிலிருந்து பொதுப் பதிவுகளைக்கோருவதூடாக
 • மின்னஞ்சல் கணக்குகள் அல்லது சமூக ஊடக கணக்குகளைஹேக் செய்தல்
 • இருண்ட வலையில் (Dark Web) குற்றவாளிகளிடமிருந்து தகவல்களை விலை கொடுத்து வாங்குதல்
 • ஸ்பைவேர்இணைப்புடன் திருட்டு (ஃபிஷிங்) அல்லது ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்புவது மூலமாக

டொக்ஸ் செய்யப்பட்டால் என்ன செய்வது?

1 ம் படிமுறை – டொக்ஸ் இனை மேற்கொண்டவருடன் எவ்வித வாக்குவாதமோ/தொடர்புகளையோ வைத்துக்கொள்ள வேண்டாம்.

2 ம் படிமுறை –ஒன்லைனில்  வெளியிடப்பட்ட தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

3 ம் படிமுறை – குற்றவாளிக்கு எதிராக முறையான புகாரைப் பதிவு செய்யச் சட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

4 ம் படிமுறை – தகவல்களை வழங்கும் இணையதளங்களைத் தொடர்பு கொண்டு குறித்த தகவல்களை அகற்றுமாறு கோரவும்.

டொக்ஸிங் செய்யப்படுவதை நிறுத்த முடியுமா?

பெரும்பாலும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பொது வெளியில்  கிடைக்கச் செய்தால், அது  டொக்ஸிங் குற்றமாகக் கருதப்படாது. இருப்பினும், துன்புறுத்துதல் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்துடன் அவை பயன்படுத்தப்படும்போது, ​​பல நாடுகளில் இது சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. இறுதியாக, நிகழ்கலை​யில் குற்றவாளிகளைக் கண்டறிவது/தண்டிப்பது எளிதான காரியம் அல்ல. எனவே, கீழே காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு உதவிக்குறிப்புகளின்படி டோக்ஸ் ஆபத்தின் அபாயங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது எப்போதும் சாத்தியமாகும்.

 • ஒன்லைனில்உங்களைப் பற்றிய தகவல்கள் என்னென்ன உள்ளது என்பதைப் பற்றி நீங்களே கூகுள் செய்து பார்க்கவும், தகாத அல்லது தனிப்பட்ட உள்ளடக்கத்தை (ஏதேனும் இருந்தால்) புகாரளிக்க/அகற்ற நடவடிக்கை எடுக்கவும்.
 • நீங்கள் பொது​வெளியில் என்னென்ன பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
 • உங்கள் மின்னஞ்சல் / சமூக ஊடக கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளைச் சரிபார்த்து, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தனிப்பட்டதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
 • வலுவான கடவுச்சொற்களை உருவாக்கி, பல காரணி அங்கீகாரத்தை (MFA) இயக்கவும்
 • தரவு தரகர் தளங்களிலிருந்து உங்கள் தரவை நீக்கவும்
 • VPNகள் மற்றும் தனிப்பட்ட உலாவிகளைக்கண்காணியுங்கள்
 • நீங்கள் செயலிகளை நிறுவும் போது (தரவை அணுகுவதற்கு) எப்படியான அனுமதிகள் தேவைஎன்பதை சரிபார்த்து அதற்கேற்ப அவற்றை நிறுவுங்கள்.
 • பாதுகாப்பானவைஃபை (Wi-Fi) கட்டமைப்புகளைப் பயன்படுத்தவும்

 

மூலம் :

https://www.usnews.com/360-reviews/privacy/what-is-doxxing

https://www.rd.com/article/what-is-doxxing/

https://www.digitalinformationworld.com/2019/03/infographic-how-to-handle-online-harassment.html