கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 10, 2021

வாருங்கள் மீதமுள்ள மோசடி வகைகளை பற்றி தொடர்ந்து வாசிப்போம்.
மீண்டும் முதற்பக்கம் செல்லவும்.

பிரதானமான இரகசிய குறியீட்டு மோசடிகள் எவை?

 1. இணையத்தள ஏமாற்றம்
  1. ஃபிஷிங் மின்னஞ்சல்கள்
  2. ஃபிஷிங் வலைத்தளங்கள்
 2. போலியான பரிமாற்றங்கள் மற்றும் பணப்பைகள்
 3. நூதன முறை மோசடிகள்
 4. பிட்கொயின் மிரட்டல் மோசடிகள்
 5. ஆள்மாறாட்ட கொடுக்கல் வாங்கல் மோசடிகள்
 6. ஏமாற்றுகரமான ஆரம்ப நாணயக் கொடுக்கல் வாங்கல்
 7. போன்ஜி அல்லது பிரமிட் திட்டங்கள்
 8. ரக் புல்ஸ் மற்றும் எக்சிட் மோசடிகள்
 9. மல்வெயார்
 10. அகழ்வு மோசடிகள்
 11. பம்ஸ் மற்றும் டம்ஸ் (பாதுகாப்பு மோசடிகள்)
 12. நபரை நேரடியாக சந்தித்தல்
 13. பணப்பரிமாற்ற மோசடி
 14. இலவச பரிசு
 15. ரென்சம் வெயார்
 16. மோசடி நாணயங்கள்

9. மல்வெயார்

வரவுச் சீட்டுக்களையும் வங்கிக் கணக்குகளையும் பறிமுதல் செய்வதற்கு பதிலாக , உங்கள் வலை பணப்பையை அணுகவதற்கும் மற்றும் உங்கள் கணக்கை வடிகட்டுவதற்கும், இரகசிய குறியீட்டு நாணய முகவரிகளுக்கான வின்டோஸ் கிலிப்போடை கண்காணிப்பதற்கும், மோசடியாளர்களுடைய முகவரிகளுடனான உங்களது சட்டப்படியான முகவரியை மாற்றுவதற்கும் அல்லது இரகசிய குறியீட்டு நாணய அகழ்வாளர்கள் மூலம் உங்கள் கணனி பாதிக்கப்பட்டிருப்பின் அதனை மாற்றுவதற்காகவும் இந்த இரகசியக் குறியீட்டுடன் தொடர்புடைய மெல்வெயார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து திருடுவதற்கான வழிகளை கண்டறிவதில் இணையத் திருடர்கள் மிகவும் ஆக்கபூர்வமானவர்களாக மாறியுள்ளனர். பிட்கொயினை அனுப்பும் பொழுது, அது தொடர்பில் நீங்கள் அனுப்பும் முகவரியை இரண்டு அல்லது மூன்று முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகவிருங்கள். சில மெல்வெயார் நிகழ்ச்சிகளை ஒரு தடவை நிறுவினால் அது பாவனையாளர்களுடைய கிலிப்போட்டிலிருந்து பேஸ்ட் செய்யும் போது பிட்கொயின் முகவரிகளை மாற்றும், எனவே அவ்வாறு மாற்றப்பட்டவுடன் எல்லா பிட்கொயின்களும் இணையத் திருடர்களின் முகவரிகளுக்கு தெரியாமல் அனுப்பி வைக்கப்படும்.

வலைப்பின்னல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் பிட்புலொக் கொடுக்கல் வாங்கலை மறுதலையாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், உண்மையிலுமே இதனை நோக்கும் பொழுது அது மிகவும் தாமதமானது மற்றும் பெரும்பாலும் மீட்டெடுக்க முடியாதது. உங்களுடைய உபகரணங்களில் நிர்வாகியினால் அணுகுவதற்கு நீங்கள் அனுமதிக்கின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி மிகுந்த கவனம் செலுத்துவது சிறந்ததாகும். இற்றைப்படுத்தப்பட்ட நிபுணத்துவம் வாய்ந்த வைரஸ் ஸ்கெனரினால் உதவ முடிந்தாலும் இது தவறாக பயன்படுத்த முடியாதது.

இரகசியக் குறியீட்டு மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது?
உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை முறையாக இற்றைப்படுத்துவதன் மூலம் மல்வெயாரிற்கு எதிராக உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நிபுணத்துவமிக்க, சட்டப்பூர்வமான வழங்குநரிடமிருந்தானது என்பதனை 100% உறுதிப்படுத்தாமல் நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்து நிறுவுதலாகாது.
சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை திறக்க வேண்டாம்.

10. அகழ்வு மோசடிகள்

க்ளவுட் மின்னிங்கானது, விலைக்கூடிய வன்பொருட்களை கொள்வனவு செய்யாமல் பிட்கொயின் போன்ற இரகசியக்குறியீட்டு நாணயங்களை சுவீகரிப்பதற்கு அனுமதிக்கின்றது. பயனர்கள் குறிப்பிட்ட வீதத்தில் நாணயங்களை அகழ்வதற்கான சேமிப்பு இடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான சட்டபூர்வமான க்ளவுட் மின்னிங் சேவைகள் பல உள்ளன. பிட்கொயின் அகழ்வுக் கம்பனிகளில் முதலீடு செய்து அதன் இலாபத்தைப் பங்கீடு செய்வதற்கான சட்டபூர்வமான வழிகளும் உள்ளன.

எவ்வாறாயினும், ஏராளமான அகழ்வு மோசடிகளும் அவ்வாறே காணப்படுகின்றன. அவற்றில் சில பாரிய ( நம்பமுடியாத) வருமானத்தை உறுதியளிக்கிறதுடன் மறைக்கப்பட்ட கட்டணங்களின் எல்லையை வெளிப்படுத்தத் தவறிவிடுகிறார்கள், அதேநேரம் மற்றவை போன்ஜி மோசடிகளுக்கு (Ponzi scams) முன்னோடியாக இருப்பதுடன் அவை உங்களது பணத்திலிருந்து பிரித்தளிக்கத் தக்கதாக வடிவமைக்கப்பட்டவையாகும்.

இது ஒரு வெளிப்படையான மோசடியொன்றாக இல்லாவிட்டாலும், க்ளவுட் மின்னிங்யானது இரகசியக் குறியீட்டு நாணயத்தை வாங்குவதனை விட எப்போதும் மோசமான முதலீடாக இருக்கும் என்பதுடன் இரகசியக் குறியீட்டு நாணய அகழ்வு உபகரணத்தை வேறு வடிவத்தில் குத்தகைக்கு வழங்குவது போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பிட்கொயின் அகழ்வு பொருளாதாரத்தின் திடீர்திருப்பங்கள் என்பது, பிட்கொயின் விலைகள் எந்தவகையில் இருந்தாலும் அந்தப் பணத்தை ஒரு அகழ்வு திட்டத்தில் (mining scheme) முதலீடு செய்வதற்குப் பதிலாக அதைவிட சமமான தொகையை நீங்கள் எப்போதும் வாங்குவது சிறப்பாகவிருக்கும்.

அவை தொழில்நுட்ப ரீதியாக மோசடியாக இல்லாவிட்டாலும், அனைத்து “சட்டபூர்வமான” பிட்காயின் கிளவுட் மைனிங் வணிகங்களும் நுகர்வோர் சார்ந்த சுரங்க வாடகைத் திட்டங்களும் எப்போதும் மோசமான முதலீடுகள் தொடர்ந்தும் அபாயகரமான முதலீடுகளாக உள்ளன.

இரகசியக் குறியீட்டு அகழ்வு மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது?

சகல சந்தர்ப்பங்களின் போதும் க்ளவுட் மின்னிங் மற்றும் வாடகை வீழ்ச்சித் திட்டங்களை தவிர்த்தல்.

11. பம்ஸ் மற்றும் டம்ஸ் பாதுகாப்பு மோசடிகள்

பம்ஸ் மற்றும் டம்ஸ் திட்டத்தில், ஒரு நபர் அல்லது நபர்கள் விலையை செயற்கையான முறையில் உயர்த்த அல்லது பம்ப் செய்வதற்கு முயற்சித்தால் அவர்களது பங்குகளை இலாபத்திற்காக டம்ப் செய்ய முடியும்.

கிரிப்டோகரன்சிகள் பெரும்பாலும் சந்தை பரிவர்த்தனையில் ஊகவணிகரின் கனவு நனவாகவும் என்பது நிராகரிக்கப்படுவதுடன் இது“பம்ஸ் மற்றும் டம்ஸ்” முறைமைகள் என அறியப்படும் திட்டங்கள் எழுவதற்கு வழி வகுத்துள்ளது.

இங்குதான் பெரிய அளவிலான வாங்குபவர்கள் குறுகிய சந்தை இடைவெளியைக் கொண்ட altcoin ஐ குறிவைத்து, அந்த நாணயத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்தமாக வாங்கி அதன் விலையை உயர்த்துகிறார்கள் (இது இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாக தூண்டப்பட்ட புதிய வாங்குபவர்களை ஈர்க்கிறது ), அதை தொடர்ந்து கணிசமான விலை உயர்வைப் பயன்படுத்தி விற்பதன் மூலமாக நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறான விடயங்கள் பாரம்பரியமான பிணையச் சந்தைகளில் சட்டவிரோதமானவைகளாக இருந்தாலும் பெருமளவில் கட்டுப்படுத்தப்படாத கிரிப்டோகரன்சிகளின் உலகில் இது ஒரு பொதுவான நிகழ்வு. உண்மையில், இந்த சரியான நடைமுறைக்கு பல்வேறு நிகழ்நிலை குழுக்கள் மற்றும் மன்றங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதால் அவ்வாறான மோசடிகளை தடுப்பது எவ்வாறு என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

பம்ஸ் மற்றும் டம்ஸ் பாதுகாப்பு மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது?
பொதுவாக குறைந்த வர்த்தக அளவைக் கொண்டிருக்கும் ஆனால் திடீர் விலை அதிகரிப்பை அனுபவிக்கின்ற குறைந்த மார்க்கெட் கெப் க்ரிப்டோக்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.
சமூக ஊடகங்களில் குறித்த நாணயங்களில் இடம்பெறும் “தவறான செய்திகள்” தொடர்பான தகவல்களை கவனத்தில் கொள்ளவும்.
எந்தவொரு இரகசிய குறியீட்டு நாணயங்களையும் கொள்வனவு செய்வதற்கு முன்னர் பரிசீலனை செய்தல்.
உங்களை அல்லது மற்றவர்களை முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கின்ற நபர்களை நம்ப வேண்டாம், ஏனெனில் பிட்கொயின் விலை என்னவாக இருக்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

விடய ஆய்வு: GVT இன் பம்ஸ் மற்றும் டம்ஸ்

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இணையவழிப்பாதுகாப்பு குரு மற்றும் இரகசியக்குறியீட்டு ஆர்வலர் ஜோன் அவர்களுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் போலி டுவிட்டர் கணக்கானது GVT இரகசியக்குறியீட்டு நாணயத்திற்கு ஆதரவை வழங்கியதுடன் அதனை “தினத்திற்கான நாணயம்” என பெயரிட்டது.

க்ரிப்டோ சமூகத்தினுள் உள்ள சிலருக்கு சில GVT ஐ கொள்வனவு செய்வதற்கு இது போதுமான காரணியாகவிருந்ததுடன் அந்த ட்வீட் வெளியிடப்பட்டு நான்கு நிமிடங்களின் பின்னர் சாதாரண GVT இன் விலை 30அமெரிக்க டொலர்களிலிருந்து 45 அமெரிக்க டொலர்களுக்கு உயர்ந்து இருந்ததுடன் வர்த்தக அளவு இரட்டிப்பாகி இருந்தது. 15 நிமிடங்களின் பின்னர் முன்னர் வாங்கிய கொள்வனவாளர்கள் “டம்ப்” செய்யப்பட்ட பின்னர், விலை மீண்டும் 30 அமெரிக்க டொலர்களைச் சுற்றிக் கொண்டிருந்தது.

கிட்டிய ஆய்வின் போது, டுவிட்டர் கணக்கு போலியானது எனவும் McAfee எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, இது பிக் பம்ஸ் சிக்னல் எனப்படும் கலந்துரையாடல் கூடமொன்றில் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பம்ஸ் மற்றும் டம்ஸ் திட்டத்தின் பிரதான பங்காளராகச் செயற்பட்டது.

12. நபரை சநேரடியாக ந்தித்தல்

உள்நாட்டில் டொலொக்களைப் கொள்வனவு செய்யும் போது அல்லது விற்பனை செய்யும் போது, அந்நியச் செலாவணியை நடாத்துவதற்காக நேரடியாக நீங்கள் தொடர்பு கொள்ளுமாறு எதிர்த்தரப்பினரால் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நம்பிக்கையானதொரு தரப்பினர் இல்லையாயின், இது ஒரு அபாயகரமான முன்மொழிவாகும் என்பதுடன் இதன் மூலம் கொள்ளையடிக்கப்படலாம் அல்லது காயமடையலாம். மோசடியாளர்கள், போலியான ஃபியட் நாணயங்களை பிட்கொயினிற்கு பரிமாற்றிக் கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளனர். நேரடியாக சந்திப்பதற்கு பதிலாக பீர் டூ பீர் தளத்தைப் பயன்படுத்தவும்.

13. பணம் பரிமாற்ற மோசடி

அந்நியர்களிடமிருந்து, பணத்தை நகர்த்துவதற்கு உங்களது உதவி தேவை எனவும் உங்களது சேவைக்கு ஈடாக, நீங்கள் நிதியில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என வரும் மின்னஞ்சல் மற்றும் உள்வரும் தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.

14. இலவச பரிசு

அவ்வாறே இலவசக் கொடுப்பனவுகளை போலவே, இலவச பரிசு மோசடிகள் ஊடாக அல்லது மக்களை ஏமாற்றி தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு ஊக்குவிக்கின்றது. உதாரணமாக, பரிசு வழங்குவதற்காக பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கத்தை வழங்குதல். இது உங்களை போன்று ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் கணக்குக்கான அணுகலைப் பெறுவதற்கு மோசடியாளரை அனுமதிக்கும்.

15. ரென்சம்வெயார்

இது ஒரு வகையான ரென்சம்வெயார், இது பிட்கொயின் பணயக் கொடுப்பனவைச் செலுத்தாவிடில் ஒரு கருவியொன்றின் அணுகல் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடுக்கும். பணயக் கொடுப்பனவைச் செலுத்துவதற்குப் பதிலாக அவற்றை அகற்றுவதற்காக நம்பகமான கணினித் தொழில்சார் நிபுணரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது சிறந்தது. குறிப்பாக நிர்வாக அணுகுமுறை கோரப்படும் உபகரணங்களில் நீங்கள் நிறுவுகின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தவும். மேலும், நீங்கள் பதிவிறக்கும் செயலி, கடந்த காலத்தில் நீங்கள் பயன்படுத்திய முறையான ஒன்றைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் போலியானது அல்ல என்பதை இருமுறை சரிபார்க்கவும்.

16. மோசடி நாணயங்கள்

மாற்று நாணயங்களில் (altcoins) முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். மாற்று நாணயங்களுக்கு மத்தியில் மோசடியான நாணயங்கள், தனியார் விற்பனை ஊடாக முதலீடு செய்வதற்கு அல்லது நிவாரண கழிவுகளுடன் பயனர்களை ஈடுபடுத்துவதற்கு உருவாக்கப்படுகின்றது. மோசடி நாணயமானது ஒரு மிகச்சிறிய இணையத்தளத்தைக் கொண்டிருக்கலாம்/ அல்லது அதனை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு வெளியே உள்ள பாதிப்பை ஏற்படுத்துவதற்கான அச்சத்தை பாரிய சமூகத்திற்கிடையில் ஏற்படுத்தலாம். இது ஆரம்ப உரிமையாளர்களுக்கு விலையை அதிகரிப்பதற்கு உதவுவதோடு, இதனால் அவர்கள் லாபத்திற்காக தங்கள் நிலைகளை விட்டு வெளியேறலாம்.. பாரிய சமூகத்தினைக் கொண்டிருக்காத மோசடி நாணயமானது, மக்களை அவர்களது சமூகத்தில் சேர்வதற்காக அவர்களுக்கு இலவச நாணயங்களை (அல்லது இரவல்கள்) வழங்குகின்றன. இது மோசடி நாணயங்கள் தங்கள் முன்முயற்சிகளை உயர்த்தப்பட்ட அளவுகளில் முன்வைக்க உதவுகிறது, இது முதலீட்டாளர்கள் வாங்க விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கும் நேரம் வரும்போது அவர்கள் தவறிவிட்டதாக உணரவைக்கும்.சட்டப்பூர்வமான உறவு இருப்பதாக மக்களை ஏமாற்ற அல்லது தவறாக வழிநடாத்தும் முயற்சியில் மோசடி நாணயங்கள் பிட்கொயின் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

வளங்கள்:
https://www.finder.com.au/bitcoin-scams
https://bitcoin.org/en/scams