கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 21, 2021

விலை: 39,678.87 அமெரிக்க டொலர்கள் (2021 ஜுன் ஆரம்பத்தில்)

பிட்கொயினே முதலில் பரவலாக்கப்பட்ட இரகசிய குறியீட்டு நாணயமாவதுடன் இன்றைய நாளில் (2021இல்) மிகவும் பிரபல்யமான இரகசிய குறியீட்டு நாணயமும் இதுவேயாகும். இரகசிய குறியீட்டு நாணயமானது முழுமையாக இணையத்தில் காணப்படும் பணவகையாவதுடன் இதனை இணைய பணம் அல்லது இலத்திரனியல் பணம் என குறிப்பிட முடியும். இது நிகழ்நிலை பதிப்பு நாணயத்தை போன்றதாகும். மக்கள் பிட்கொயினை உங்களது இலத்திரனியல் பணப்பைக்கு அனுப்பிவைப்பதுடன் நீங்களும் ஏனையோருக்கு பிட்கொயினை அனுப்பி வைக்கலாம். இது முதலீடு செய்வதற்கான நவீன போக்காகும்.
பிட்கொயினின் வெளியீட்டை தொடர்ந்து ஏனைய பல இரகசிய குறியீட்டு நாணயங்கள் உருவாக்கபட்டன. உதாரணமாக, ஈதிரியம் Ethereum (ETH), லைட்கொயின் Litecoin (LTC), கார்டனோ Cardano (ADA), பொல்கேடொட் Polkadot (DOT), பிட்கொயின் கேஸ் Bitcoin Cash (BCH), டெதர் Tether (USDT).

பிட்கொயினின் வரலாறு

பிட்கொயின் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக வெளியிடப்பட்டது.

எனினும் அதனது தோற்றம் மற்றும் பிட்கொயின் உருவாக்கத்திற்கு பின்புலத்திலிருக்கும் நபர் என்பன இதுவரையில் மர்மமாகவே உள்ளது. பெரும்பாலானோரின் நம்பிக்கை இது சைபர்பங்க் cypherpunk சமூகத்தின் அருமையான யோசனைகளை ஒருங்கிணைத்து தந்ந கற்பனை பெயர் கொண்ட சடோசி நகமோடோ (Satoshi Nakamoto) அவர்களினாலே அமுல்படுத்தப்பட்டிருக்கும் என ஊகிக்கப்படுகின்றது. பிட்கொயின் வரலாற்றிலிருந்து, இது திடீர் வளர்ச்சியை காட்டுக்கின்றதுடன் நிகழ்நிலை மற்றும் அகல்நிலை ஆகிய இரண்டிலும் தனித்துவமான பணமாக உருவாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில், ஒரு சில வியாபாரங்கள் தமது பாரம்பரிய பணத்துடன் இணைந்து பிட்கொயினையும் ஏற்றுகொண்டன. இரகசிய குறியீட்டு நாணயமான பிட்கொயின், ஓர் இலத்திரனியல் சொத்தை வடிவமைத்து அதனை நாணயப்பரிமாற்ற ஊடகமாக செயற்படுத்துவதுடன் மத்திய அதிகார அமைப்புகள் நம்பிக்கை கொள்வதை விடவும் மறைக்குறியீட்டியல் மூலம் அதன் உருவாக்கம் மற்றும் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்துகின்றது.

Bitcoin-hist

பிட்கொயின் அகழ்வு

பிட்கொயின் அகழ்வானது, பிட்கொயின் பரிமாற்ற செயன்முறையை உறுதிப்படுத்துவதும் அவற்றை பொது தடுப்புச்சங்கிலி பேரேட்டில் பதிவதுமாகும். தடுப்புச்சங்கிலியில், பரிமாற்றங்கள் பிட்கொயின் பாவனையாளர்களினால் உறுதிப்படுத்தப்படுவதால் அடிப்படையில் குறித்த பரிமாற்றங்கள் அவ்வலையமைப்பிலுள்ள பங்குபற்றாளர்களினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். தேவையான வன்பொருட்கள் மற்றும் கணினி வலிமை என்பவற்றை கொண்டுள்ளோர் அகழ்வாளர்களென அழைக்கப்படுவர்.

பிட்கொயின் என்றால் என்ன? மற்றும் அது எவ்வாறு செயற்படுகின்றது?

பிட்கொயினானது பரவலாக்கப்பட்ட இலத்திரனியல் பணமாகும். இதில் வங்கியின் தலையீடின்றி கொள்வனவு, விற்பனை மற்றும் நாணயபரிமாற்றங்களை நேரடியாக மேற்கொள்ள முடியும். பிட்கொயின் உருவாக்குநர் சடோசி நகமோடோ (Satoshi Nakamoto) அவர்கள், முதலாவதாக இதன் தேவையானது, ‘ஓர் இலத்திரனியல் கொடுப்பனவு முறைமையானது நம்பிக்கைக்கு பதிலாக இரகசிய குறியீட்டு சான்றிலே தங்கியுள்ளது’ என விவரித்துள்ளார்.
தடுப்புச்சங்கிலியிலுள்ள தகவல்கள் பெரும்பாலும் பரிமாற்றங்களாகும். பிட்கொயின் என்பது ஒரு பட்டியல் மாத்திரமாகும். C என்ற நபருக்கு Y பிட்கொயினை அனுப்பியவரான B என்ற நபருக்கு A என்ற நபர் X பிட்கொயினை அனுப்புவார். மேலும் பல. குறித்த பரிமாற்றங்களை கணக்கெடுத்து உயர்த்துவதன் மூலம், தனிப்பட்ட பயனாளிகள் எங்கு நிலைபெற வேண்டுமென்பதனை அனைவரும் அறிவார்கள். இவ்வாறான பரிமாற்றங்கள் கட்டாய தேவை கருதி மனிதனுக்கு மனிதன் நடைபெறவில்லை என்பதனை அவதானிப்பது முக்கியமாகும்.

பிட்கொயின் எவ்வாறு பணத்தை உருவாக்கின்றது?

உங்களால் பணத்தை அதில் ஈடுபடுத்தாது இரகசிய குறியீட்டு நாணயத்தை அகழ்வதன் மூலம் சம்பாதிக்க முடியும். பிட்கொயின் அகழ்வாளர்கள் தடுப்புச்சங்கிலிக்கு இணைக்கப்பட்ட ‘தடுப்பு’ பரிமாற்றங்களை உறுதிப்படுத்தி முழுமைப்படுத்துவதன் மூலம் பிட்கொயினை சன்மானமாக பெறுவார்கள். இந்த சன்மானங்கள் ஒவ்வொரு 210,000 தடுப்புகளையும் அகழும் போதும் அல்லது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் அரைவாசியாக பிரிக்கப்படும்.

அகழ்வாளர்கள் தங்களது கணக்காய்வாளர் பணிக்காக கொடுப்பனவை பெறுவர். அவர்கள் நம்பகமான பிட்கொயின் பரிமாற்றத்தினை உறுதிபடுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். பரிமாற்றங்களை உறுதிப்படுத்துவதனூடாக அகழ்வாளர்கள் ‘இருமுறை செலவீட்டு பிரச்சனை’ ஐ தடுப்பதற்கு உதவுகின்றனர். இருமுறை செலவீடானது, பிட்கொயின் உரிமையாளர்கள் ஒரே பிட்கொயினை இருதடவைகள் செலவளிப்பதை தடுக்கும் ஒரு நிகழ்நிலவரமாகும்.

ஒருமுறை அகழ்வாளர்கள் 1 எம்பீ (1 MB) (மேகாபைட்) பெறுதியான பிட்கொயின் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துவதானது ஒரு தடுப்பாக கொள்ளப்படுவதோடு, குறித்த அந்த அகழ்வாளர்கள் பிட்கொயினின் அளவிற்கேற்ப சன்மானம் பெற தகுதியுடையவர்களாவர்.

1 எம்பீ பெறுதியான பரிமாற்றத்தை உறுதிப்படுத்தலானது, ஒரு பிட்கொயின் உழைக்க தகுதியான கொயின் அகழ்வாளரரை உருவாக்குகின்றது. பரிமாற்றங்களை உறுதிபடுத்திய அனைவரும் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதனை குறித்துக் கொள்ளுங்கள். 1 எம்பீ (1 MB) பரிமாற்றமானது கோட்பாட்டு அடிப்படையில் ஒரு பரிமாற்றம் (அனைத்திற்கும் பொதுவானதல்ல.) அல்லது சில ஆயிரத்திற்கு சிறியனவாகும். இவை எவ்வளவு டேடாவை பரிமாற்றம் செய்கின்றது என்பதை பொருத்ததாகும்.

பிட்கொயினை உழைப்பதாகவிருந்தால், நீங்கள் இரண்டு கட்டளைகளை சந்திக்க நேரிடும். ஓன்று முயற்சி, மற்றையது அதிஷ்டம்.

  1. நீங்கள் 1 எம்பீ (1 MB) பெறுமதியான பரிமாற்றத்தை உறுதிபடுத்த வேண்டும். இது
    இலகுவான பகுதியாகும்.
  2. நீங்களே எண்சார் பிரச்சனைக்கு சரியான பதிலை அல்லது நெருங்கிய பதிலை
    குறிப்பிட்ட முதல் அகழ்வாளராகவிருத்தல் வேண்டும்.

பிட்கொயின்கள் பாதுகாப்பானதா?

நிஜ வாழ்க்கையில் உங்களது பணப்பை பாதுகாக்கப்பட வேண்டும். பிட்கொயின்கள் இலகுவான முறையில் எங்கு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்வதனை சாத்தியப்படுத்துவதுடன் அது உங்கள் பணத்தில் கட்டுப்பாடாக இருப்பதற்கும் வழிவகுக்கின்றது. ஒவ்வொரு பரிமாற்றமும் வெளிப்படையாக பதிவுசெய்யப்படுதனால் பிட்கொயின்களை பிரதியெடுத்து போலியானவைகளை உருவாக்குவதற்கு அல்லது தங்களுக்கு உரிமையற்ற ஒன்றை செலவிடுவதும் கடினமாகும்.

இவ்வாறான சிறப்பு பண்புகள் மிகவும் பாதுகாப்பு கரிசனையின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது. அதே நேரத்தில், சரியான முறையில் பயன்படுத்தும் போது பிட்கொயின் உயர்தரம் வாய்ந்த பாதுகாப்பை வழங்கும்.

மறுபுறத்தில், உங்களது பிட்கொயின் பணப்பையை இழப்பதற்கும் அல்லது உங்களது பிட்கொயின்கள் அழிந்து போவதற்கும் மற்றும் அவற்றை எப்போதுமே இழப்பதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் அதன் விலை தீவிரமாக மாற்றமடையக்கூடியதாகும். அதாவது, இதன் பெறுமதி எந்நேரத்திலும் கணிசமாக குறைவதுடன் முதலீட்டாளர்கள் பெருந்தொகையான பணத்தை இழக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.

Ref : https://www.investopedia.com/