கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 4, 2022

டீப் (Deep) வெப் என்றால் என்ன ?
டீப் வெப் என்பது நிலையான தேடுபொறிகளால் முழுமையாக அணுக முடியாத இணையத்தின் ஒரு பகுதியாகும்.

டீப் வெப்பில் நாம் எதனை காணலாம்?
டீப் வெப் தேடுபொறிகள், pay-walled தளங்கள், தனிப்பட்ட தரவுத்தளங்கள் மற்றும் டார்க் வெப் ஆகியவற்றால் அட்டவணைப்படுத்தப்படாத பக்கங்களைக் கொண்டுள்ளது.

டீப் வெப் பற்றி மேலும் புரிந்து கொள்வோம்

  • இது “மறைக்கப்பட்ட வலைத்தளம்”, “கண்ணுக்குப்புலப்படாத வலைத்தளம்” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
  • இது மேற்பரப்பு வலைத்தளத்தை விட மிக விசாலமானது.
  • இது பல இணையப்பக்கங்கள் மாறும் வகையில் உருவாக்கப்பட்டவையாகும் என்பதுடன் பிற தளங்களுடனான இணைப்புகளும் காணப்படாது
  • டீப் வெப் இணையத்தில் உள்ள மற்றொரு முக்கிய உள்ளடக்கம் Netflix போன்ற சேவைக்கான கட்டண தளங்களாகும். இணையத்தில் அந்த வலைத்தளம் இருந்தாலும் கூட, அதன் பெரும்பாலான உள்ளடக்கங்கள் டீப் வெப் வலைத்தளத்தில் காணப்படுகிறது.
  • தனிப்பட்ட தரவுத் தளங்கள் டீப் வெப் வலைத்தளத்தில் மற்றொரு முக்கிய அங்கமாகும். தனிப்பட்ட தரவுத்தளங்களின் எடுத்துக்காட்டுகளாக Paypal போன்ற முக்கிய வலைத்தளங்களில் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் Dropbox இல் நண்பர்களிடையே பகிரப்பட்ட புகைப்படங்கள் போன்றவை.

டார்க் வெப் (Dark) என்றால் என்ன?
டார்க் வெப் என்பது டீப் வெப்பின் ஒரு பகுதியாகும், இதனை சிறப்பு இணைய உலாவியைப் பயன்படுத்தி மட்டுமே அணுக முடியும். இணையச் செயல்பாடுகளைத் தனிப்பட்டதாக வைத்திருக்க இது பயன்படுகிறது.

டார்க் வெப்பில் நாம் எவற்றைக் காணலாம்?
டார்க் வெப்பில் உள்ள பெரும்பாலான இணையதளங்கள், சட்டவிரோத போதைப்பொருள், துப்பாக்கி /ஆயுத பரிமாற்றம், ஆபாசப் படங்கள், சூதாட்டம், செய்தித் தளங்கள் மற்றும் தகவல்களை வெளியிட விசில்ப்ளோயிங் (துப்பறிவாளர்) போன்ற வகைகளைக் கொண்டிருக்கின்றன.

டாக் வெப் பற்றி மேலும் புரிந்து கொள்வோம்

  • தேடுபொறிகளில் தோன்றாது என்பதால் டார்க் வெப் இன் சரியான இணைய முகவரி தெரிந்திருக்க வேண்டும்
  • இணையத்தின் இந்தப் பிரிவு “ஆபத்தானது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது
  • பெரும்பாலான சட்டவிரோத நடவடிக்கைகள் இங்கு தான் நடைபெறுகின்றன
  • பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழலை அம்பலப்படுத்துபவர்கள் (whistle blowers) திறந்த தகவல் பரிமாற்றத்திற்காக இதைப் பயன்படுத்துகின்றனர்

எங்கள் அடுத்த கட்டுரையில் டீப் வெப் மற்றும் டார்க் வெப் ஆகியவற்றின் வேறுபாடுகளை அறியலாம்.

மூலம்:
https://vpnoverview.com/privacy/anonymous-browsing/the-dark-web/
https://whatis.techtarget.com/definition/deep-Web
https://www.investopedia.com/terms/d/deep-web.asp