கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 26, 2026

சாரதா வழக்கத்தை விட அமைதியான சில நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள். காரணம், அது அவளுடைய பல்கலைக்கழக விடுமுறை காலமாக இருந்தது. அவள் வாழ்க்கையில் மிகவும் விரும்பும் சூழலின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அது அவளுடைய சொந்த கிராமம்.
ஒரு நாள் காலை வழக்கம்போல் தனது கைப்பேசியைப் பார்த்தாள்.
17 தவறவிட்ட அழைப்புகளா????
சாரதா திடீரென பதற்றமடைந்தாள். அவளுக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து இத்தனை அழைப்புகள் வந்திருந்தன.
அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், அந்த எண்ணிற்கு சாரதா மீண்டும் அழைத்தாள்.
சாரதா: “ஹலோ… யார் பேசுகிறீர்கள்? எனக்கு இந்த எண்ணிலிருந்து பல தவறவிட்ட அழைப்புகள் வந்திருந்தன.”
அறியாத நபர்: “ஹலோ… சாரதா, நான் தமித்.”
சாரதா: “தமித் என்றால் யார்???” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
அறியாத நபர்: “தமித் தான்… துல்வானின் நண்பன்… விடுதியில் இருக்கிறேன்.”
சாரதா: “ஆஹா, சரி. சொல்லுங்கள்… துல்வான் எங்கே? என்ன விஷயம்?”
அறியாத நபர்: “சரி சரி, பதற்றப்படாதீர்கள். துல்வான் நன்றாக இருக்கிறார். நேற்று ஒரு சிறிய விருந்து இரவு நேரம் வரை நீண்டது. தெரியும்தானே…”
சாரதா: “விருந்தா??? துல்வான் அதைப் பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே!”
அறியாத நபர்: “சரி சரி, இப்போது அவரைத் திட்ட வேண்டாம். அது ஒரு சிறிய விருந்துதான். சொல்ல வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை.”
சாரதா: “அப்படியா… சரி, இப்போது துல்வான் எங்கே?”
அறியாத நபர்: “அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். துல்வானுக்கு நாளை வேலை இருக்கிறதல்லவா?”
சாரதா: “ஆம்… ஏன்?”
அறியாத நபர்: “அதுதான். நாங்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கள் பணிக்குச் செல்லப் போகிறோம். துல்வான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால் வேலைக்குச் செல்ல எழ முடியாது. அதனால், அவருடைய கைப்பேசியில் அலாரம் வைத்துவிட்டு செல்ல நினைத்தோம். ஆனால் அதன் கடவுச்சொல் எனக்குத் தெரியவில்லை.”
சாரதா: “அப்படியானால் என்ன செய்வது?”
அறியாத நபர்: “உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் சாரதா. நான் அலாரம் வைத்துவிடுகிறேன்.”
அந்த நேரத்தில் அதிகம் யோசிக்காமல், சாரதா துல்வானின் கடவுச்சொல்லை தமித்திடம் கூறிவிட்டாள்.
அறியாத நபர்: “நன்றி சாரதா. நான் அலாரம் வைத்துவிடுகிறேன்.”
என்று கூறி தமித் அழைப்பை முடித்தான்.
சிறிது நேரம் கழித்து துல்வான் விழித்து வழக்கம்போல் சாரதாவிற்கு அழைத்தான். நடந்த எல்லாவற்றையும் சாரதா அவனிடம் கூறினாள்.
துல்வான்: “யார் சொன்னது?? தமித் என்று யாரையும் நான் அறியவே மாட்டேன். அப்படி யாரும் என்னுடன் விடுதியில் தங்கவில்லை.”
இதைக் கேட்ட சாரதா என்ன நடந்தது என்று குழம்பினாள். ஆனால் அப்போது அது ஒரு சாதாரண சம்பவமாகத் தோன்றியதால், இருவரும் அதை மீண்டும் நினைத்துப் பார்க்கவில்லை.
ஒரு வாரம் கழித்து, துல்வானின் கைப்பேசியில் இருந்த சாரதாவினதும் துல்வானினதும் தனிப்பட்ட காணொளிகள் சில, ஒரு போலி TikTok கணக்கில் பதிவேற்றப்பட்டிருந்தன. அந்த காணொளிகள் அவர்களை அறிந்த பலரிடமும் பகிரப்பட்டிருந்தன.
இதனால் சாரதா மிகுந்த மனஅழுத்தத்திற்குள்ளானாள். அவளால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளுடைய நெருங்கிய நண்பியும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தேடிக்கொண்டிருந்தாள். அப்போது தான் அவள் ஹிதவதி இணையதளத்தை கண்டுபிடித்தாள். உடனே அதன் தகவல்களை சாரதாவிற்கு அனுப்பினாள்.
ஹிதவதியை தொடர்புகொண்ட சாரதாவிற்கு, அந்த போலி TikTok கணக்கை புகாரளித்து அகற்றுவதற்கு உதவி வழங்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து கணக்குகளின் கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றுமாறு துல்வானுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதோடு, எந்தச் சூழலிலும் அறியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது என்பதையும் ஹிதவதி தெளிவாக விளக்கியது.
முன்கூட்டிய பாதுகாப்பு ஆலோசனைகள்
- உங்கள் கடவுச்சொல் (Password), OTP, PIN இலக்கம் அல்லது வேறு எந்த தனிப்பட்ட தகவலையும் ஒருபோதும் பகிர வேண்டாம்.
- உங்களுடன் பேசும் நபர் தெரிந்தவராக இருந்தாலும், அவரை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள்.
- போலி கணக்குகளை உடனடியாக புகாரளிக்கவும்.
- சந்தேகமான இணைய சம்பவங்களில் ஹிதவதியை தொடர்புகொள்ளுங்கள்.
