கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023

மஹித் காலியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஒரு திறமையான மாணவர். அவனுடைய தந்தை அப் பகுதியின் பிரபலமான மருத்துவர் ஆவார்.

மஹித் 13 வயதான ஒரு மாணவன், அவன் மிகவும் திறமையானவன் என்பதால் பாடசாலையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இச் சிறுவனை நேசித்தனர். அவனது பெற்றோரும் அவனைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தனது பெற்றோருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், இவ் ஆண்டு ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த மஹித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவன் உற்பட அவனுடைய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனால் பெறும் மகிழ்ச்சியடைந்தனர்.

மஹித் போட்டிக்குத் தயாராகி, அதில் பங்கேற்க வெளிநாடு சென்றார். புத்திசாலி மாணவரால் பரிசு பெறவும் முடிந்தது.

மஹித் பரிசுடன் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினான், அனைவரும் அவனை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பாடசாலையின் பிரதான கூட்டத்தில் மஹித் பாராட்டப்பட்டார் மேலும் புகைப்படக் கழக மாணவர்களால் மஹித்தின் சில புகைப்படங்கள் பிடிக்கப்பட்டது.

அவனது பாடசாலை ஆசிரியர்கள் மஹித்தின் படங்களை பாடசாலை சஞ்சிகையில் மற்றும் பாடசாலை இணையதளத்தில் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் அவனது புகைப்படங்களை வெளியிட விரும்பினர். அவர்கள் மஹித்தின் பெற்றோரை அழைத்து அவரது படங்களை குறித்த தளங்களில் வெளியிடச் சம்மதம் பெற்றனர்.

சில காலங்களுக்குப் பின், ஒரு நாள் மஹித்தின் தாய், அதே படங்கள் தொடர்ச்சியாக பேஸ்புக் விளம்பரங்களாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டார், மஹித் அந்தப் பகுதியில் உள்ள கணித ஆசிரியரான திரு. XXXX என்பவரால் கற்பிக்கப்பட்டார் என்ற தவறான செய்தியுடன் கூடிய விளம்பரமே அது. அவர் தனது தனியார் வகுப்புகளை விளம்பரப்படுத்த மஹித்தின் படங்களை தனது சொந்த விருப்பப்படி பயன்படுத்தியிருந்தார்.

குறித்த ஆசிரியர் தவறான தகவல்களை பரப்பி, தங்கள் மகனின் படங்களை தவறாகப் பயன்படுத்தியதால் மஹித்தின் பெற்றோர் மிகவும் கோபமடைந்தனர். மஹித்தின் தாய் ஹிதவதியை அழைத்து  நடந்ததைக் கூறினார்.

பேஸ்புக்கில் அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கம் கொண்ட பதிவு எனும் தொகுதியின் கீழ் அப் பதிவைப் புகாரளிக்குமாறு மஹித்தின் தாய் அறிவுறுத்தப்பட்டார் மேலும் ஆரம்ப (சுய சேவைக் கருவிகளைப் பயன்படுத்தி) பயன்பாட்டின் மூலம் புகாரளிக்கும் முறையும் வழிகாட்டப்பட்டது. ஆரம்ப புகாரளித்தலை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் கூட நேர்மறையான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், மேம்படுத்தப்பட்ட புகாருக்காக அவர்களிடம் திரும்பும்படி ஹிதவதி கேட்டுக் கொண்டதுடன்  எடுக்கக்கூடிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அவருக்கு விளக்கி, மஹித்தின் தாயைக் குற்ற புலனாய்வு திணைக்களத்தின்– சமூக ஊடகப் பிரிவுக்கு அனுப்பியது.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • மற்றொருவரின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பதிவிடுவது/வெளியிடுவது பொருத்தமற்றது. உள்ளடக்கம் குழந்தையுடன் தொடர்புடையதாக இருந்தால் (18 வயதுக்குட்பட்ட ஒருவர்) பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற பரிந்துரைக்கப்படுகிறது.
  • இணையத்தில் உங்கள் அனுமதியின்றி வெளியிடப்படும் உங்கள் புகைப்படங்கள்/காணொளிகள் அல்லது உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்ற உள்ளடக்கங்களைப் புகாரளிப்பதற்கும் அகற்றுவதற்கும் உதவியைப் பெற ஹிதவதியைத் தொடர்புகொள்ளவும்.
  • சைபர்-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாக்கப் பதியப்பட்டிருந்தால், அவற்றைக் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் dir.cid@police.gov.lk எனும் மின்னஞ்சலூடகவும் புகார்களை அனுப்பி வைக்க முடியும்.