கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 15, 2021

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை

ஒரு சனிக்கிழமை, ஷானியா என அழைக்கப்படும் ஒருவரிடம் இருந்து ஜேம்ஸ் மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றான், ஆப்கானிஸ்தானில் சேவையிலீடுபட்டுள்ள ராணுவ வீராங்கனை என அவள் தன்னை அறிமுகப்படுத்தினாள். மின்னஞ்சலுக்கமைய, தனக்குச் சொந்தக்காரர் யாருமில்லாமையால் யுத்த நேரத்தின்போது தான் கண்டுபிடித்த ரூபாய் 2.8 மில்லியன் பெறுமதியான பணப் பெட்டியொன்றினை நம்பத்தகுந்த ஒருவருடன் பங்கிடுவதற்குத் தேடிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜேம்ஸும் தனக்கு இன்று அதிஷ்டம் தான் இதைப் பெற கஷ்டப்படவும் தேவையில்லை என நினைத்தான். எனவே, அவன் ஷானியாவுக்கு தனது விபரங்களை அனுப்பினான். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் மின்னஞ்சலின் மூலம் பழகினர்.

எவ்வாறாயினும், அனுமதிக் கட்டணமான அமைரிக்க டாலர் 1,086 (இலங்கை ரூபாய். 197,344) இனை செலுத்த வேண்டும் எனும் நிலையின் போது ஜேம்ஸ் சற்றுப் பின் வாங்கினான். அவனது பணப் பெட்டிக் கனவை நனவாக்குவதற்கு பணத்தைத் தேடும்போது, அவனது நல்ல காலத்திற்கு தற்போது அநேகமானவர்கள் முகம்கொடுக்கும் பிரபல்யமாக காணப்படும் மோசடி பற்றி செய்தியின் மூலம் தெரிந்துகொண்டான்.

https://www.youtube.com/watch?v=oePP9rGXwkc&feature=share&fbclid=IwAR2CgDJIiGAJtBqA_5dqvHyZ_QFp0mYlaN1DG7KXeTwOGg4aQ-Ote78MfyY (played from 15:55 to 18:35)

முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
அவ்வாறான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டும், இணைய வெளியில் பணம் சம்பாதிப்பது இலகுவானதல்ல.

அடையாளத் திருட்டுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் உங்களது தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் கொடுக்க வேண்டாம்,

மின்னஞ்சலானது மோசடிக்கானதா என மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.